ஹஸ்ரத் பேகம்
ஹஸ்ரத் பேகம் | |
---|---|
ஷாஜாதி - முகலாயப் பேரரசு | |
பேரரசி - துராணிப் பேரரசு | |
Tenure | 5 ஏப்ரல் 1757 – 4 ஜூன் 1772 |
பிறப்பு | 4 நவம்பர் 1741 டெல்லி, இந்தியா |
இறப்பு | அண். 1774 (அகவை 32–33) ஆப்கானித்தான் |
புதைத்த இடம் | முஹம்மத் ஷா கல்லறை தோட்டம், நிஜாமுதீன் அவ்லியா, டெல்லி, |
துணைவர் | அகமது ஷா துரானி |
மரபு | திமுரித் பேரரசு (பிறப்பால்) துராணிப் பேரரசு (திருமணத்தால்) |
தந்தை | முகம்மது ஷா |
தாய் | சாஹிபா மஹால் |
மதம் | இஸ்லாம் |
ஹஸ்ரத் பேகம் (1741 ஆம் ஆண்டு நவம்பர் 4 - 1774) ( பஷ்தூ: حضرت بېګم ) ஓர் இந்திய அரசியாவார். இவர் துராணி பேரரசின் முதல் பேரரசர் அகமது ஷா துரானியின் மனைவி ஆவார். இவர் துராணி சாம்ராஜ்யத்தின் அரசியாக 1772 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 1757 ஆம் ஆண்டு ஜூன் 4 வரை இருந்தார்.மேலும் இவர் முகலாய பேரரசர் முஹம்மது ஷாவின் மகளாவார். இதனால் இவர் முகலாய இளவரசியும் ஆவார்.
குடும்பம் மற்றும் பரம்பரை
[தொகு]ஹஸ்ரத் பேகம் முகலாய குடும்பத்தில் பிறந்தார். இவர் முகலாய பேரரசர் முஹம்மது ஷா மற்றும் சாஹிபா மஹால் ஆகியோரின் மகள் ஆவார். [1] இவர் தனது பதினாறாவது வயதில் 1756 ஆம் ஆண்டு பிப்ரவரியில், இவரது குடும்பத்தினரை வயதான இரண்டாம் ஆலம்கீர் ஹஸ்ரத் பேகத்தை திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தினார். [2] ஆனால் ஹஸ்ரத் வயதானவரை திருமணம் செய்வதை விட மரணத்தை விரும்பினார். இதனால் இரண்டாம் ஆலம்கீர் திட்டம் வெற்றிபெறவில்லை.
திருமணம்
[தொகு]1757 ஆம் ஆண்டு ஏப்ரலில் பேரரசின் தலைநகரான டெல்லியை சேர்ந்த பேரரசர் முஹம்மது ஷா இறப்பின் பிறகு துராணி அரசர் அஹ்மத் ஷா அப்தாலி முஹம்மது ஷாவின் 16 வயது மகளான ஹஸ்ரத் பேகத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். [3] ஹஸ்ரத் பேகத்திற்கு 16 வயதாக இருந்ததால், 35 வயதான துராணி மன்னனுக்கு திருமணம் செய்துகொடுக்க பாட்ஷா பேகம் மறுப்பு தெரிவித்தார். ஆனால் அஹ்மத் ஷா ஹஸ்ரத் பேகத்தை 1757 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி டெல்லியில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். [4] திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அஹ்மத் ஷா தனது மனைவி ஹஸ்ரத் பேகத்தை தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Sarkar, Jadunath (1999). Fall of the Mughal Empire (4th ed.). Hyderabad: Orient Longman. p. 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125017615.
- ↑ Aḥmad, ʻAzīz (1983). Islamic society and culture: essays in honour of Professor Aziz Ahmad. Manohar. p. 146.
- ↑ A Comprehensive History of India: 1712-1772 (in ஆங்கிலம்). Orient Longmans. 1978.
- ↑ 1754-1771 (Panipat). 3d ed. 1966, 1971 printing (in ஆங்கிலம்). Orient Longman. 1971.