நாதிர் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதிர் ஷா
Lion and Sun Emblem of Persia.svg
Painting, portrait of Nader Shah seated on a carpet, oil on canvas, probably Tehran, 1780s or 1790s.jpg
நாதிர் ஷா (ஓவியம்)
ஆட்சி1736–1747
பிறப்பு1688[1] or 1698[2]
ஈரான்
இறப்பு20 June 1747[3]
ஈரான்

நாதிர் ஷா (Nader Shah) ஈரானை ஆட்சி செய்த ஓர் அரசனாவார். இவர் பிறந்தது 1688 என்றும் [1] ஆகஸ்டு மாதம் 6 ஆம் தியதி 1698 [2] என்றும் இரு தகவல்கள் உள்ளன. இவர் சூன் 19 , 1747 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரை பாரசீகத்தின் நெப்போலியன் அல்லது இரண்டாம் அலெக்சாந்தர் என்று சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்..[4] நாதிர் ஷா வடக்கு பாரசீகத்தின் பழங்குடி இனமான அப்சரித்து வம்சத்தைச் சார்ந்தவர்.[5]

இந்தியா மீதான படையெடுப்பு[தொகு]

1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் [[முகம்மது ஷாவின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் அரியானாவின் கர்னால் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகம்மது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ernest Tucker (March 29, 2006). "Nāder Shāh 1736-47". Encyclopædia Iranica.  
  2. 2.0 2.1 Nader's exact date of birth is unknown but August 6 is the "likeliest" according to Axworthy p.17 (and note) and The Cambridge History of Iran (Vol. 7 p.3); other biographers favour 1688.
  3. http://www.iranicaonline.org/articles/afsharids-dynasty
  4. "Biography of Nadir Shah Afshar "The Persian Napoleon" (1688-1747)". 2013-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-18 அன்று பார்க்கப்பட்டது.
  5. Michael Axworthy's biography of Nader, The Sword of Persia (I.B. Tauris, 2006), pp. 17-19: "His father was of lowly but respectable status, a herdsman of the Afshar tribe ... The Qereqlu Afshars to whom Nader's father belonged were a semi-nomadic Turcoman tribe settled in Khorasan in north-eastern ஈரான் ... The tribes of Khorasan were for the most part ethnically distinct from the Persian-speaking population, speaking Turkic or Kurdish languages. Nader's mother tongue was a dialect of the language group spoken by the Turkic tribes of Iran and Central Asia, and he would have quickly learned Persian, the language of high culture and the cities as he grew older. But the Turkic language was always his preferred everyday speech, unless he was dealing with someone who knew only Persian."
  6. "வரலாற்றுப் பக்கங்கள் மார்ச் 22: நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றிய தினம்". 2015-08-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதிர்_ஷா&oldid=3560481" இருந்து மீள்விக்கப்பட்டது