கர்னால் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்னால் போர் (Battle of Karnal) (24 பிப்ரவரி 1739) [1] என்பது இந்தியா மீதான படையெடுப்பின் போது பாரசீகத்தின் அப்சரித்து வம்சத்தின் நிறுவனர் நாதிர் ஷாவுக்கு கிடைத்த ஒரு தீர்க்கமான வெற்றியாகும். நாதிரின் படைகள் மூன்று மணி நேரத்திற்குள் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் இராணுவத்தை தோற்கடித்தன. [2] தில்லியில் முகலாயர்களின் பதவி நீக்கத்திற்கு வழி வகுத்தன. இந்த வெற்றி நாதிரின் இராணுவ வாழ்க்கையில் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. [3] [4] [5] இந்தியாவின் தில்லிக்கு வடக்கே 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் உள்ள கர்னாலுக்கு அருகே போர் நடந்தது.

போர்[தொகு]

நாதிரின் பாரசீக பீரங்கிகளுடன் ஒப்பிடுகையில் முகலாய பீரங்கிகள் பழமையானவை.

முகலாய இராச்சியத்தின் மீது நாதிர் ஷாவின் படையெடுப்பில் உச்சக்கட்டமாக இந்த போர் இருந்தது. கிழக்கு ஆப்கானித்தானைக் கைப்பற்றி காபூல் மற்றும் பெசாவர் வழியாக படையெடுத்த பிறகு, நாதிர் தனது படைகளை தெற்கே முகலாய தலைநகரை நோக்கி அழைத்துச் சென்றார். தில்லியில் முகம்மது ஷா ஒரு மிகப் பெரிய படையைச் கொண்டிருந்தார்.

தில்லியில் இருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ள கர்னாலில் இந்த போர் நடந்தது. நாதிர் ஷாவின் இராணுவம் சுமார் 55,000 வீரர்களையும், முகம்மதுவின் இராணுவம் சுமார் 15,000 வீரர்கள் மற்றும் போராளிகள் அல்லாத ஒரு பெரிய குழுவையும் கொண்டிருந்தது. போர் தொடங்கிய மூன்று மணி நேரத்திற்குள், 20,000க்கும் மேற்பட்ட முகலாய வீரர்கள் மற்றும் இராணுவம் அல்லாத வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். பாரசீக இராணுவத்தின் இழப்பு மிகக் குறைவு. மீதமுள்ள முகலாய இராணுவம் கலைந்தது. போருக்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாதிர் ஷா தில்லியை கைப்பற்றினார். நாதிரின் தாக்குதலால் நிலைகுலைந்த முகம்மது ஷா தனது ஒரு பெரிய இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டார்.

தில்லியின் வெற்றி[தொகு]

நாதிர் ஷா மற்றும் முகலாய பேரரசர் முகம்மது ஷா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு.

நாதிர் முகலாயப் பேரரசரை முற்றிலுமாக பதவி விலகும்படி கட்டாயப்படுத்தி, தலைநகரான தில்லிக்கு அணிவகுத்துச் சென்றார். வரி வசூலை உறுதி செய்வதற்காக நகரின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 1,000 குதிரைப்படை வீரர்களை நாதிர் அனுப்பினார். ஆனால் முகலாய வம்சத்தின் தலைநகரின் கருவூலங்களிலிருந்து மிகப் பெரிய செல்வங்கள் சூறையாடப்பட்டது. ஷாஜகானின் மயிலாசனம் பாரசீக இராணுவத்தால் பறிக்கப்பட்டது. அற்புதமான நகைகளின் மத்தியில், நாதிர் கோஹினூர் ("ஒளியின் மலை") மற்றும் தர்யா-யே நூர் ("ஒளி கடல்") வைரங்களையும் பெற்றார். கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பொக்கிஷங்களின் மதிப்பு 700 மில்லியன் ரூபாயாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 90 மில்லியன் டாலர் ஸ்டெர்லிங் அல்லது 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 8.2 பில்லியன் டாலர் ஸ்டெர்லிங் ஆகும்

கோஹினூர் பற்றிய பல்வேறு கோணங்களில் டேவர்னியரின் வரைபடம்

சிந்துக்கு மேற்கே முகம்மது ஷா தனது அனைத்து நிலங்களையும் நாதிர் ஷா வசம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கர்னாலில் முகலாய பேரரசின் பெரும் தோல்வியின் விளைவாக, ஏற்கனவே வீழ்ச்சியடைந்த முகலாய வம்சம் அதன் அழிவை விரைவுபடுத்தும் அளவுக்கு விமர்சன ரீதியாக பலவீனமடைந்தது. வரலாற்றாசிரியர் ஆக்ஸ்வொர்த்தியின் கூற்றுப்படி, நாதிரின் இந்தியா மீதான படையெடுப்பின் அழிவுகரமான விளைவுகள் இல்லாமல், இந்திய துணைக் கண்டத்தை ஐரோப்பிய காலனித்துவ கையகப்படுத்துதல் வேறு வடிவத்தில் வந்திருக்கலாம் அல்லது ஒருவேளை இல்லாமல் இருக்கலாம்.

தரியா-இ-நூர் வைரம்.
நாதிர் ஷா கொள்ளையடித்த நகைகளில் ஒரு சிறிய பகுதி இப்போது [ஈரானில் உள்ளது.

நாதிரின் போர்[தொகு]

முகலாயப் பேரரசின் வடக்கு எல்லைப் பகுதிகள், ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு அரசியல்களுக்கு எதிரான நாதிரின் ஏராளமான போர்களில் தோற்கடிக்கப்பட்ட ஆப்கானிய கூலிப்படையினர், மற்றும் போர்வீரர்களின் பெருக்கத்திற்கான ஒரு பிரபலமான இடமாக இருந்தது. இவ்வாறு தப்பியோடியவர்களை சிறைபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு நாதிர் உள்ளூர் ஆளுநர்களுக்கும் வட இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும் பல கோரிக்கைகளை அனுப்பியிருந்தார். ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர், நாதிர் முகலாயப் பேரரசின் மீது படையெடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்கைத் தேடிக்கொண்டிருந்தார். வடக்கு முகலாய பேரரசின் கரடுமுரடான நிலப்பரப்பில் தஞ்சம் அடைந்த ஆப்கானிய வீரர்களை வேட்டையாடுவதற்கான வடிவத்தில் தனது படையெடுப்பை மறைக்க இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தினார். [6]

வரலாற்றுக் கிளர்ச்சிகள்[தொகு]

கிழக்கில் முகலாயப் பேரரசுக்கு எதிராக நாதிர் ஷாவின் வெற்றி, அவர் மேற்கு நோக்கி திரும்பி, பாரசீகத்தின் ஆட்சியாளர்களான உதுமானியர்களை மீண்டும் ஒரு முறை எதிர்கொள்ள முடியும் என்பதாகும். உதுமானிய சுல்தான் முதலாம் மகமூத் I உதுமானிய-பாரசீகப் போரை (1743-1746) தொடங்கினார். இதில் முகம்மது ஷா 1748 இல் இறக்கும் வரை உதுமான்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்தார். [7] நாதிரின் இந்திய முற்றுகை பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனத்தை முகலாயப் பேரரசின் தீவிர பலவீனம் மற்றும் ஆட்சியின் வெற்றிடத்தை நிரப்ப பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரித்தது. [8]

கர்னாலில் முகலாயப் பேரரசின் தோல்வியின் விளைவாக, ஏற்கனவே வீழ்ச்சியடைந்த முகலாய வம்சம் அதன் அழிவை விரைவுபடுத்தும் அளவுக்கு விமர்சன ரீதியாக பலவீனமடைந்தது. வரலாற்றாசிரியர் ஆக்ஸ்வொர்த்தியின் கூற்றுப்படி, நாதிரின் இந்தியா மீதான படையெடுப்பின் அழிவுகரமான விளைவுகள் இல்லாமல், இந்திய துணைக் கண்டத்தை ஐரோப்பிய காலனித்துவ கையகப்படுத்துதல் வேறு வடிவத்தில் வந்திருக்கும் அல்லது இல்லாவிட்டாலும், இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை அடிப்படையில் மாற்றிஒயிருக்கும். [8]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "INDIA vii. RELATIONS: THE AFSHARID AND ZAND – Encyclopaedia Iranica". iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
 2. Sarkar, Jagadish Narayan. A Study of Eighteenth Century India: Political history, 1707–1761 Saraswat Library, 1976. (Volume 1 of A) original from the வர்ஜீனியா பல்கலைக்கழகம். p 115
 3. Axworthy, Michael (2009). The Sword of Persia: Nader Shah, from tribal warrior to conquering tyrant, p. 254. I. B. Tauris
 4. Quoted in Christopher Bellamy, The Evolution of Modern Land Warfare: Theory and Practice (London, 1990), 214.
 5. Moghtader, Gholam-Hussein(2008). The Great Batlles of Nader Shah. Donyaye Ketab
 6. Axworthy, Michael, "Iran: Empire of the Mind", Penguin Books, 2007. p158
 7. Naimur Rahman Farooqi (1989). Mughal-Ottoman relations: a study of political & diplomatic relations between Mughal India and the Ottoman Empire, 1556–1748. Idarah-i Adabiyat-i Delli. https://books.google.com/books?id=uB1uAAAAMAAJ&q=Muhammad+Shah&source=gbs_word_cloud_r&redir_esc=y. பார்த்த நாள்: 6 April 2012. 
 8. 8.0 8.1 Axworthy p.xvi

நூலியல்[தொகு]

 • Axworthy, Michael, "The Sword of Persia; Nader Shah, from Tribal Warrior to Conquering Tyrant", I B Tauris, 2009.
 • Cust, Edward, Annals of the wars of the eighteenth century, Gilbert & Rivington Printers:London, 1862.
 • Dupuy, R. Ernest and Trevor N. Dupuy, The Harper Encyclopedia of Military History, 4th Ed., HarperCollinsPublishers, 1993.
 • Mohammad Kazem Marvi Yazdi, Rare views of the world 3 vols., Ed Amin Riahi, Tehran, Third Edition, 1374

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னால்_போர்&oldid=3537041" இலிருந்து மீள்விக்கப்பட்டது