குராசான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குராசான் (பாரசீகம்: استان خراسان [xoɾɒːˈsɒːn] (About this soundகேட்க)) என்பது வடகிழக்கு ஈரானில் இருந்த மாகாணம் ஆகும். இது எலனிய மற்றும் பார்த்தியக் காலங்களில் திராக்சியான் என்று அழைக்கப்பட்டது. ஆனால் குராசான் என்ற சொல்லானது வரலாற்று ரீதியாக ஒரு பெரிய பகுதியைக் குறிக்கக் கூடியதாகும். அப்பகுதி அகாமனிசியப் பேரரசின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. குராசான் என்ற பாரசீகச் சொல்லுக்கு "சூரியன் எங்கிருந்து வருகிறது" என்று பொருள்.[1] முதன்முதலில் இப்பெயரானது சாசானியப் பேரரசின் ஆட்சியின்போது பாரசீகத்தின் கிழக்கு மாகாணத்துக்குக் கொடுக்கப்பட்டது.[2] நடுக் காலத்தின் பிற்பகுதி முதல் அண்டைப் பகுதியான திரான்சாக்சியானாவில் இருந்து வேறுபடுத்தி அறிவதற்காக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.[3][4][5]

இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் சியா இசுலாமைப் பின்பற்றக்கூடிய முசுலிம்கள் ஆவர்.[6] இந்த மாகாணம் வரலாற்றுரீதியான பெரிய குராசான் பகுதியின் மேற்குப் பாதியைக் கொண்டிருந்தது.[7] ஈரானிய மாகாணமான குராசானின் நவீன எல்லைகள் அதிகாரபூர்வமாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வரையறுக்கப்பட்டன.[8] இம்மாகாணமானது 2004ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.[9]

உசாத்துணை[தொகு]

  1. Compare லெவண்ட் and Mashriq.
  2. "Khorāsān". Encyclopædia Britannica, Inc..
  3. Svat Soucek, A History of Inner Asia, Cambridge University Press, 2000, p.4
  4. C. Edmund Bosworth, (2002), 'CENTRAL ASIA iv. In the Islamic Period up to the Mongols' Encyclopaedia Iranica (online)
  5. C. Edmund Bosworth, (2011), 'MĀ WARĀʾ AL-NAHR' Encyclopaedia Iranica (online)
  6. Khorasan tasnimnews Retrieved 1 September 2020
  7. Dabeersiaghi, Commentary on Safarnâma-e Nâsir Khusraw, 6th Ed. Tehran, Zavvâr: 1375 (Solar Hijri Calendar) 235–236
  8. "Khorāsān". Encyclopædia Britannica, Inc..
  9. Online edition, Al-Jazeera Satellite Network. "Iran breaks up largest province". மூல முகவரியிலிருந்து 20 May 2006 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குராசான்_மாகாணம்&oldid=3171320" இருந்து மீள்விக்கப்பட்டது