தைமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தைமூர்
Temür
அமீர்
Tamerlan.jpg
ஆட்சி 9 ஏப்ரல் 1370 – 14 பெப்ரவரி 1405
முடிசூட்டு விழா 9 ஏப்ரல் 1370[1]
முன்னிருந்தவர் அமீர் உசைன்
பின்வந்தவர் காலில் சுல்தான்
வாரிசு(கள்)
  • மிரான் சா
  • சாருக் மிர்சா
மரபு பர்லாசு
தந்தை அமீர் தரகாய்
தாய் தெக்கினா காட்டுன்
பிறப்பு 9 ஏப்ரல் 1336 [1]
கேசு (இன்றைய உசுபெக்கித்தானில்)
இறப்பு 19 பெப்ரவரி 1405 (அகவை 68)
ஒத்ரார், (இன்றையகசக்ஸ்தானில்)
அடக்கம் குர்-இ அமீர், சமர்கந்து
சமயம் இசுலாம்
இரசிய தொல்லியல் அறிஞர் மிகைல்(Mikhail Mikhaylovich Gerasimov) தடயவியல் முறையால் உருவாக்கிய தைமூர் படம்
1405-இல் தைமூரின் இறப்பின் போது தைமூரியப் பேரரசின் வரைபடம்

தைமூர் (9 ஏப்ரல் 1336 - 19 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே.[2]

மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.

தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.

வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.

சாமர்கன்ட்[தொகு]

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் வடக்கில் , முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில் , இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சமர்கந்து . இதுவே துருக்கிய- மங்கோலிய இனத்தைச்சேர்ந்த தைமூரின் தலைநகரம் ஆகும்.

படையெடுப்புகள்[தொகு]

வெற்றி கொண்ட நிலப்பரப்புகள்[தொகு]

1335-இல் தைமூரின் முதல் படையெடுப்பு பாரசீகம் மீதாகும். [3] [4] பின்னர் தற்கால பாக்தாத், அனதோலியாவின் தென்கிழக்கு துருக்கி, சிரியா, நடு ஆசியாவின் ருசியாவின் பகுதிகள், ஜார்ஜியா, ஆர்மீனியா, துருக்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் பாகிஸ்தான், ஆப்கானித்தான் ஆகும். அதன்பின் அவர் வெற்றி பெற்ற இடம் தில்லி ஆகும். [5] மேலும் பஞ்சாப், மீரட், மற்றும் லாகூர் போன்ற நகரங்களையும் கைப்பற்றினார் தைமூர். கி.பி.1400 இல் தைமூர், துருக்கி நாட்டுக்குள் புகுந்து சுல்தான் இரண்டாம் பயோசியத்தை வெற்றி கண்டார்.

தைமூரின் குணங்கள்[தொகு]

தைமூரின் போர்க்குணமே அவர் பல வெற்றிகள் காண காரணமாகும். இரக்கம் காட்டுவதோ,எதிரிகளை எனோதானோ என்று விட்டு விடுவது தைமூருக்கு பிடிக்காத ஒன்று ஆகும்.தைமூரை பொருத்தவரையில் தலை வேறு உடல் வேறாக இருப்பவனே எந்தப்பிரச்சனையும் இல்லாத எதிரி ஆகும். இதையே தைமூரின் வீரர்களும் பின்பற்றினர்.

எதிரிகளை தீர்த்துக்கட்டுவதை வேகமாக முடிக்க வேண்டும் என்பதும் தைமூரின் கொள்கைகளில் ஒன்று."யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுறவாகச் செயல்பட்டால்தான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும்" என்று தைமூர் தன் படை வீரர்களிடம் வலியுறுத்துவது வழக்கம்.

பஞ்சாப் பிரதேசத்தில் சிறைபடுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளைச்சீவ அவன் ஆணையிட்டபோது ஒவ்வொரு வீரனும் கிளம்பினான்.அப்போது தொழுகைக் காலங்களில் தைமூருக்காகப் புனித குர் ஆனை ஓதும் முதியவர் ஒருவர் அப்படியே அமர்ந்திருக்க "என்ன பெரியவரெ! சும்மா உட்காந்திருந்தால் எப்படி? நீங்களும் ஒரு வாளை எடுத்துக்கொண்டு போய் ஒத்துழைக்கலாம் அல்லவா?" - என்று தைமூர் சொல்ல அவரின் சகாக்கள் எறும்பைக்கூட மிதிக்க யோசிக்கும் பெரியவரை ஒருவரின் வயிற்றில் வாளை செலுத்த வைத்தார்களாம்.

தைமூர் போர்குணங்கள் கொண்டவனாக இருந்தலும், சில நகைப்பை வரவழைக்கும் செயல்களையும் செய்துள்ளார்.இந்தியாவை கைப்பற்றியதும்,யானைகளுக்கு பச்சை,நீலம்,மஞ்சள் போன்ற வண்ணங்களை அடித்து காவலுக்காக தனது கூடாரத்தின் முகப்பில் நிறுத்தினாராம்.

இந்தியாவும் தைமூரும்[தொகு]

தைமூர் பல நகரங்களை வெற்றி கண்டபோதும் இந்தியாவிற்கு வந்ததே பெரிய சரித்திர நிகழ்வாக மாறியது. ஏனெனில் இயற்கை அரண்களான இமயமலைத்தொடர் மற்றும் ஆழமான சிந்து நதியையும் கடந்து படையெடுத்தவர்கள் அலெக்சாந்தர்,கஜினி போன்று மிக சிலரே. செப்டம்பர் 22,1398 இல் டெல்லி நகரை கைப்பற்ற வந்தார் தைமூர். சிந்து நதியை பொருட்படுத்தாத தைமூர் பல படகுகளை ஒன்றாக இணைத்து சிந்து நதியை கடந்தார்.

சிந்து நதியை கடந்த தைமூர் ஐந்து நதிகள் இணையும் பஞ்சாப் பகுதியில் தனது ஆக்ரமிப்பை ஆரம்பித்தார்.சுமார் ஒரு லட்சம் பேரை அடிமைகளாக பஞ்சாப் நகரத்தில் அடிமைகளாக பிடித்தார் தைமூர். ஒருமுறை முகமது ஷா, சில வீரர்களுடன் இருந்த தைமூரை விரட்டி அடித்தார். அதனால் கோபமுற்ற தைமூர் பஞ்சாபில் பிடித்த ஒரு லட்சம்அடிமைகளையும் வெட்டி வீழ்த்த ஆணையிட்டார்.[6]

பின் டிசம்பர் 17,1398 இல் தைமூர், மல்லூகான் இக்பாலின் உதவியோடு டெல்லி அரியனையில் இருந்த முகமது ஷாவை வீழ்த்தி டெல்லி நகரை கைப்பற்றினார்.

நொண்டி தைமூர்[தொகு]

இளம் வயதில் ஒரு போர்க்களத்தில் போரிடும் போது எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் கால் பாதிப்புக்குள்ளானது. அதை சரி செய்ய யாராலும் இயலவில்லை. அதனால், தைமூர் சற்று விந்தி விந்தி நடப்பார். இதனால் உருவான பட்டை பெயரெ "தைமூர் இ லெங்" -'நொண்டி தைமூர்' ஆகும்.

இப்படி மற்றவர்கள் அழைப்பது தைமூருக்கும் தெரியும். ஆனால் தன் எதிரில் நின்று யாரும் அழைக்க மாட்டேன் என்கிறார்களே என்று தன் ஆட்களிடம் அலுப்புச்சிரிப்புடன் கூறிப்பிடுவாராம் தைமூர்.

தைமூரும் கட்டிடகலையும்[தொகு]

இந்தியாவிற்கு வந்து தங்கிய தைமூர் குதுப்மினார் மற்றும் குவ்வாத்-அல்-இஸ்லாம் மசூதியை சுற்றி பார்த்து 'இந்தியர்கள் சாதாரனமானவர்கள் அல்ல' என்றாராம். திரும்பி செல்லும் போது இந்தியக் கட்டிட கலைஞர்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றார்.

இறப்பு[தொகு]

பல லட்சம் பேரை வெட்டிவீழ்த்திய தைமூர் மிக எளிய முறையில் இறந்தார்.சீனாவை கைப்பற்ற திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தைமூர் சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து 1405 -ம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரை விட்டார்.

தைமூரின் கல்லறை[தொகு]

இந்தியக் கட்டிட கலைஞர்கள் துருக்கி சென்றவுடன் சில மாதங்களிளேயே துருக்கிய மற்றும் பெர்ஷிய கலைநுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தனர். அவர்களை வைத்து தைமூரின் கல்லரை கட்டப்பட்டது.இந்தியக் கட்டிட கலைஞர்கள் சமர்கன்ட் நகரில் 'குர் அமிர்' என்கிற மிகப்பெரிய அற்புதமான கல்லறையைக் கட்டிமுடித்தார்கள். இவரிடம் இருந்துதான் மிக பெரிய அளவில் கல்லரைக்கட்டும் பழக்கம் மொகலாயர்களிடம் வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  • வந்தார்கள் வென்றார்கள் புத்தகம், விகடன் பிரசுரம், சென்னை.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=தைமூர்&oldid=2251532" இருந்து மீள்விக்கப்பட்டது