உள்ளடக்கத்துக்குச் செல்

நாடோடிப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடோடிப் பேரரசு என்பது வில்களைப் பயன்படுத்திய, குதிரையில் சவாரி செய்த, நாடோடி மக்களால் ஐரோவாசியப் புல்வெளியில் செம்பண்டைய காலம் (சிதியா) முதல் ஆரம்ப நவீன காலம் (சுங்கர் கானரசு) வரை உருவாக்கப்பட்ட பேரரசு ஆகும். இது புல்வெளிப் பேரரசு, நடு அல்லது உள் ஆசியப் பேரரசு என்றும் அழைக்கப்படுகிறது. நிலையாக ஓரிடத்தில் வாழாத அரசியல் அமைப்புகளின் மிக முக்கியமான உதாரணம் இந்த நாடோடிப் பேரரசுகள் ஆகும்.

ஒரு வெல்லப்பட்ட நிலையான நாட்டின் உட்பகுதியில் ஒரு தலைநகரத்தை நிறுவுவதன் மூலம் சில நாடோடிப் பேரரசுகள் உருவாகும். அந்த நாடோடியல்லாத சமூகத்தின் அதிகார வர்க்கத்தினர் மற்றும் வணிக வளங்கள் சுரண்டப்படும். இத்தகைய காட்சியில் உண்மையான நாடோடி அரசாங்கமானது கலாச்சார ரீதியாக வெல்லப்பட்ட நாட்டின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைகிறது. இறுதியில் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுகிறது.[1] இப்னு கல்தூன் (1332-1406) இதே போன்ற ஒரு சுழற்சியை சிறிய அளவில் 1377 ஆம் ஆண்டு தனது அசபியா கோட்பாட்டில் கூறியுள்ளார்.

ஆரம்ப நடுக் காலத்திலிருந்த வரலாற்றாளர்கள் இத்தகைய அரசியல் அமைப்புகளைக் கானரசுகள் என்று கூறினர். இச்சொல் இந்த அரசுகளின் ஆட்சியாளர்களின் பட்டமான கான் என்ற சொல்லில் இருந்து உருவானது ஆகும். 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்புகளுக்குப் பிறகு ஓர்டா என்ற சொல்லும் பயன்பாட்டுக்கு வந்தது. உதாரணமாக தங்க நாடோடிக் கூட்டமானது ஆங்கிலத்தில் கோல்டன் கோர்டு என்று அழைக்கப்படுகிறது. ஓர்டா என்ற சொல் மருவி கோர்டு என்றானது.

உசாத்துணை[தொகு]

  1. Golden, Peter B. (1992). An Introduction to the History of the Turkic Peoples: Ethnogenesis and State Formation in the Medieval and Early Modern Eurasia and the Middle East. Southgate Publishers. p. 75.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடிப்_பேரரசு&oldid=3168013" இலிருந்து மீள்விக்கப்பட்டது