ஓர்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓர்டா (ஓர்டு[1],ஓர்டோ, அல்லது ஓர்டன்) அல்லது ஹோர்டே ஐரோவாசியாவின் புல்வெளிகளில் காணப்படும் வரலாற்று சமூகவியல் மற்றும் இராணுவ அமைப்பு ஆகும். இது பொதுவாக துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்களுடன் தொடர்புடையது. இந்த நிறுவனம் ஒரு குலம் அல்லது ஒரு பழங்குடிக்கு சமமான பிராந்தியமாகக் கருதப்படுகிறது. சில வெற்றிகரமான ஓர்டாக்கள் கானேடுகளாக மாறின.

ஓர்டோ என்ற துருக்கிய வார்த்தைக்கு “முகாம், தலைமையகம்” என்று பொருள். இதிலிருந்தே சிலாவிக் வார்த்தையான ஒர்டோ மற்றும் மேற்கத்திய வார்த்தையான ஹோர்டே தோன்றின. எனினும் இதன் உண்மையான பொருள் கானேடு கிடையாது. இந்த கட்டமைப்புகள் உளூஸ் ("நாடு" அல்லது "பழங்குடி") என்றும் அழைக்கப்பட்டன.

கடைசி மத்திய காலங்களில் மட்டுமே இந்த ஓர்டா என்ற சிலாவியப் பயன்பாடு துருக்கிய மொழிகளுக்குத் திரும்பியது.

மங்கோலிய ஓர்டோ நகர்தல்

குறிப்புகள்[தொகு]

  1. Ed. Kate Fleet - The Cambridge History of Turkey Volume 1: Byzantium to Turkey 1071–1453 (2009), p. 52

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்டா&oldid=2618998" இருந்து மீள்விக்கப்பட்டது