மங்கோலியப் பிரபுத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கோலிய உயர்குடியினர் (மொங்கோலியம்: язгууртан யசகுரதன்; மொங்கோலியம்: сурвалжтан சுரவலசதன்) 10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாயினர். 13 ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்றனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மங்கோலியாவை ஆண்டனர்.

யசகுரதன் என்ற மங்கோலிய வார்த்தை, ‘’வேர்’’ என்று பொருளுடைய யசகுர் என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது.

மங்கோலியப் பேரரசு (1206-1368) மற்றும் யுவான் வம்சம் (1271-1368)[தொகு]

பேரரசின் வழியே செல்லும் ஒரு மங்கோலிய ஆட்சியாளர். ரசித் அல்-தின் கமதானியின் ஜமி அல்-தவரிக்கின் விளக்கம்.

உயர்குடிப் பட்டங்கள்[தொகு]

 • கான் (ககான், ᠬᠠᠭᠠᠨ; 大汗), மங்கோலியப் பேரரசின் மிக உயர்ந்த ஆட்சியாளர்.
 • நோயோன் (ᠨᠣᠶᠠᠨ; 國王), பொருள் "ஒரு மாநிலத்தின் அரசர்", மங்கோலிய பேரரசின் கீழ் ஒரு அடிபணிந்த/ துணை மாநிலத்தின் ஆட்சியாளர்.
 • ஜினோங் (ᠵᠢᠨᠤᠩ; 濟農), பொருள் "பட்டத்து இளவரசன்", பெரிய கானின் வெளிப்படையான வாரிசு. யுவான் வம்சத்தின்போது, ஜினோங் காரகோரத்தில் தங்கியிருப்பார். இவர் சடங்கு நிகழ்ச்சிகளை நிர்வகித்தார்.
 • கான் கு (ᠬᠠᠨ ᠬᠦᠦ; 王子), “இளவரசன்” என்று பொருள்.
 • மிர்சா (米爾扎), “இளவரசன்” என்று பொருளுடைய ஒரு பாரசீக வார்த்தை.

இராணுவத் தரவரிசை[தொகு]

 • துமேது-இன் நோயன் (萬戶長), "தியுமனின் தளபதி" என்று பொருள். ஒரு தியுமன் என்பது 10,000 துருப்புக்களின் இராணுவ அலகு. 1206ல் மங்கோலியப் பேரரசின் ஆரம்பத்தில் ஒன்பது தியுமன்கள் இருந்தன, ஆனால் 1368 வாக்கில் 40 மங்கோலியத் தியுமன்கள் மற்றும் நான்கு ஒயிரட் தியுமன்கள் இருந்தன.
 • மிங்கன்-உ நோயன் (千戶長), அதாவது "ஒரு மிங்கனின் தளபதி". ஒரு மிங்கன் என்பது 1000 துருப்புகளின் இராணுவ பிரிவு ஆகும்.
 • ஜகுது-இன் தர்கா (百戶長), அதாவது “ஒரு சூட்டின் தளபதி”. ஒரு சூட் என்பது 100 துருப்புக்களின் இராணுவ அலகு ஆகும்.
 • அரபன்-உ தர்கா (十戶長), அதாவது "அரவத்தின் தளபதி". ஒரு அரவத் என்பது 10 துருப்புகளின் இராணுவ அலகு ஆகும்.
 • சரபி (扯兒必), என்பது கெசிக் தளபதியின் பெயர் ஆகும்.
 • பே (貝伊), என்கிற துருக்கிய வார்த்தையின் பொருள் "தலைவர்" என்பதாகும்.

பெண் பட்டங்கள்[தொகு]

 • கதுன் (ᠬᠠᠲᠤᠨ; 可敦), அதாவது "பேரரசி" அல்லது "அரசி".
 • பேகம் (貝古姆), என்பது "பே"யின் மனைவியையோ அல்லது மகளையோ குறிக்கும் ஒரு துருக்கிய வார்த்தை ஆகும்.
 • கொன்ஜி (ᠭᠦᠩᠵᠦ; 公主), என்பது ஒரு இளவரசியை அல்லது உயர்குடிப் பெண்ணைக் குறிப்பிடப் பயன்படும் வார்த்தை ஆகும்.
 • பெஹி, ஒரு உயர்குடிப் பெண்ணைக் குறிப்பிடப் பயன்படும் வார்த்தை ஆகும்.

வடக்கு யுவான் வம்சம் (1368-1635)[தொகு]

உயர்குடியினரின் பட்டங்கள்[தொகு]

 • கான் (ககான்; 可汗) என்பவர் வடக்கு யுவான் பேரரசின் உயர்ந்த ஆட்சியாளர் ஆவார்.
 • கான் (汗) என்பது மங்கோலிய நிலப்பிரபுத்துவ தலைவருக்கான ஒரு பட்டம் ஆகும். 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மங்கோலியாவில் பல கான்கள் இருந்தனர், ஏனெனில் உள்ளூர் நிலப்பிரபுக்கள் தங்களைத் தாங்களே கான் என அழைக்கத்தொடங்கினர். இந்த கான் ஆங்கிலத்தில் ‘’Khan என்று உச்சரிக்கப்படுகிறது. khaan என்று உச்சரிக்கப்படும் வார்த்தையானது உயர்ந்த ஆட்சியாளருக்கு மட்டுமே உரித்தானது ஆகும்.
 • ஜினோங் (ᠵᠢᠨᠤᠩ; 濟農), என்பது பட்டத்து இளவரசன் அல்லது உயர்ந்த கானின் வாரிசாகக் கூடியவரைக் குறிக்கக் கூடிய வார்த்தை ஆகும். இவர் உள் மங்கோலியப் பகுதியில் வசித்து வந்தார். 15 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பட்டம் கானின் வெளிப்படையான வாரிசுக்காக மட்டும் பயன்படுத்தப்படாமல் பரம்பரைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒன்று ஆனது.
 • கொங் தயிஜி (ᠬᠤᠨ
  ᠲᠠᠶᠢᠵᠢ
  ; 渾台吉) என்பது சீன கால ஹுவாங்தைசி (皇太子; "ஏகாதிபத்திய பட்டத்து இளவரசன்”) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இது தனக்கென சொந்தமான நிர்வாகப் பகுதியைக் கொண்டிருந்த செங்கிஸ் கான் வம்சாவளியினரைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பட்டம் ஆகும்.
 • தைஜி (ᠲᠠᠶᠢᠵᠢ; 台吉), செங்கிஸ் கான் வம்சாவளியினருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பட்டம்.
 • வாங் (王) என்பது தனக்கென சொந்தமான நிர்வாகப் பகுதியைக் கொண்டிருந்த கசர் அல்லது செங்கிஸ் கானின் ஏதாவது ஒரு சகோதரரின் வம்சாவளியினரைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பட்டம் ஆகும்.
 • தைசி (ᠲᠠᠢᠱᠢ; 太師) என்பது தனக்கென சொந்தமான நிர்வாகப் பகுதியைக் கொண்டிருந்த போர்ஜிஜின் குடும்ப வம்சாவளியினரைச் சாராத உயர்குடியினரைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பட்டம் ஆகும். இத்தகைய உயர்குடியினருள் துமேது-இன் நோயனின் சந்ததியினரும் அடங்குவர்.

பெண் பட்டங்கள்[தொகு]

 • தைகு என்பது உயர்ந்த கானின் துணைவியாருக்குக் கொடுக்கப்படும் பட்டமாகும்.
 • கதுன் (可敦) என்பது அரசனின் துணைவியரையோ அல்லது அதற்கு சமமான தகுதி வாய்ந்த உயர்குடியினப் பெண்ணையோ குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு பட்டம் ஆகும்.
 • கொன்ஜி (公主) என்பது ஒரு இளவரசியையோ அல்லது சமமான தகுதியைக் உயர்குடியினப் பெண்ணையோ குறிப்பிடப் பயன்படும் ஒரு வார்த்தை ஆகும்.
 • பெகிச்சி (பெயிச்சி) என்பது ஒரு இளவரசரின் துணைவியையோ அல்லது அதற்குச் சமமான தகுதி வாய்ந்த உயர்குடியினப் பெண்ணையோ குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது.

உயர்குடி அல்லாதவர்களுக்கான பட்டங்கள்[தொகு]

 • சயின் குமுன் (ᠰᠠᠶᠢᠨ ᠬᠦᠮᠦᠨ) என்பது உண்மையில் “நல்ல மனிதர்” என்ற பொருளுடையது. பணக்கார நபரைக் குறிக்கக் பயன்படுத்தப்பட்டது.
 • துன்டு குமுன் (ᠳᠤᠮᠳᠠ ᠬᠦᠮᠦᠨ), என்பது "நடுத்தர மனிதர்" என்று பொருள்படக்கூடியது.
 • மகு குமுன் (ᠮᠠᠭᠤ ᠬᠦᠮᠦᠨ) என்பது உண்மையில் “மோசமான மனிதர்” என்ற பொருளுடையது. ஏழை நபரைக் குறிக்கக் பயன்படுத்தப்பட்டது.
 • கிதது குமுன் (ᠬᠢᠲᠠᠳ ᠬᠦᠮᠦᠨ) என்பது உண்மையில் “சீன மனிதர்” என்ற பொருளுடையது. அடிமையைக் குறிக்கக் பயன்படுத்தப்பட்டது.

சிங் வம்சம் (1691-1911) மற்றும் போகடு காகனேடு (1911-1924)[தொகு]

ஒரு மங்கோலிய கல்கா இன உயர்குடிப் பெண் (கி.பி. 1908 வாக்கில்)

உயர்குடிப் பட்டங்கள்[தொகு]

 • கான் (汗) என்பது கோசுனின் பிரபுவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட கான் (khaan) அல்லது ககான் என்ற பட்டத்தை விட இந்தப் பட்டம் குறைவான நிலையைக் குறிக்கிறது. கல்கா மங்கோலியர்களிடையே, நான்கு கான்கள் இருந்தனர்: துசியேடு கான், சசகுது கான், சசன் கான் மற்றும் சயின் நோயன் கான். கொபதோ பிராந்தியத்தில், இரண்டு கான்கள் இருந்தனர்: தோகுசு குலுக் தலாய் கான் மற்றும் உனன் சோரிகுது கான். நான்கு அயிமக்குகள் இந்த பட்டங்களுடன் தொடர்புடையதாய் இருந்த போதிலும், கானின் அதிகாரம் அவரது கோசுன் வரை மட்டுமே இருந்தது. வேறு எந்த கோசுன் பிரபுவுடன் தொடர்பு கொண்டதைப் போலவே சிங் வம்சப் பேரரசர் கானுடனும் தொடர்பு கொண்டார்.
 • அசன்-இ கபன் (男爵; சீமான் என்ற சொல்லுக்குச் சமமானது) என்பது போகடு கான் ஆட்சியின்போது வெளிநாட்டினருக்கு (எ.கா. அலெக்சாந்தர் சான்சர் I) வழங்கப்பட்ட ஒரு சிறப்புப் பட்டமாகும். சீமான் வருடாந்திர வருமானமாக 3,500 தயல்கள் வெள்ளி மற்றும் 60 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றனர்.

கீழ்வரும் ஆறு பட்டங்களும் மஞ்சூ உயர்குடி அங்கத்தினர்களால் பயன்படுத்தப்பட்டப் பட்டங்களைப் போன்றவையே ஆகும். இந்தப் பட்டங்கள் வழக்கமாக பரம்பரையாக வழங்கப்பட்டன. மேலும் அவை நீண்ட பட்டங்களாக, இந்த உயர்குடி எந்த கோசுனைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்க பாணிகளால் (எ.கா. கொரசின் சசகு தர்கன் சின்-வாங் 扎加克 達爾罕 亲王) அலங்கரிக்கப்பட்டன.

 • சின் வாங் (親王) என்பது கோசுனின் பிரபுவைக் குறிப்பிட்டது. ஒரு சின் வாங் வருடாந்திர வருமானமாக 2,600 தயல்கள் வெள்ளி மற்றும் 40 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார். மேலும் 60 அடிமைகளைச் சொந்தமாக வைத்திருந்தனர்.
 • கியுன் வாங் (郡王) என்பது கோசுனின் பிரபுவைக் குறிப்பிட்டது. ஒரு கியுன் வாங் வருடாந்திர வருமானமாக 1,200-2,000 தயல்கள் வெள்ளி மற்றும் 15-25 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார். மேலும் 50 அடிமைகளைச் சொந்தமாக வைத்திருந்தனர்.
 • பெயிலே (貝勒) என்பது கோசுனின் பிரபுவைக் குறிப்பிட்டது. ஒரு பெயிலே வருடாந்திர வருமானமாக 600 தயல்கள் வெள்ளி மற்றும் 13 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார். மேலும் 40 அடிமைகளைச் சொந்தமாக வைத்திருந்தனர்.
 • பெயிசு (貝子) என்பது கோசுனின் பிரபுவைக் குறிப்பிட்டது. ஒரு பெயிசு வருடாந்திர வருமானமாக 500 தயல்கள் வெள்ளி மற்றும் 10 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார்.
 • துசியே கோங் (鎮國公) என்பது கோசுனின் பிரபுவைக் குறிப்பிட்டது. ஒரு துசியே கோங் வருடாந்திர வருமானமாக 300 தயல்கள் வெள்ளி மற்றும் 9 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார்.
 • துசலகசி கோங் (輔國公), என்பது கோசுனின் பிரபுவைக் குறிப்பிட்டது. ஒரு துசலகசி கோங் வருடாந்திர வருமானமாக 200 தயல்கள் வெள்ளி மற்றும் 7 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார்.
 • கோகி தைஜி (台吉) என்பது மேலே குறிப்பிட்டுள்ள ஆறு பட்டங்களில் எதனையும் பெறாத ஒரு மங்கோலிய உயர்குடியைக் குறித்தது. இது நான்கு தரவரிசைகளாகப் பிரிக்கப்பட்டது:
  • தெரிகுன் செரெக்-உன் தைஜி (一等台吉) என்பவர் முதல்-தர கோகி தைஜி ஆவார். இவர் ஒரு கோசுனை பரம்பரையாக ஆளத் தகுதியுடையவர் ஆவார். இவர் வருடாந்திர வருமானமாக 100 தயல்கள் வெள்ளி மற்றும் 4 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார்.
  • தெத் செரெக்-உன் தைஜி (二等台吉) என்பவர் இரண்டாம்-தர கோகி தைஜி ஆவார். இவரும் ஒரு கோசுனை பரம்பரையாக ஆளத் தகுதியுடையவர் ஆவார். இவர் வருடாந்திர வருமானமாக 90 தயல்கள் வெள்ளி மற்றும் 3 பட்டுச் சுருள்கள் ஆகியவற்றைப் பெற்றார்.
  • குதகார் செரெக்-உன் தைஜி (三等台吉) என்பவர் மூன்றாம்-தர கோகி தைஜி ஆவார்.
  • தொதுகீர் செரெக்-உன் தைஜி (四等台吉) என்பவர் நான்காம்-தர கோகி தைஜி ஆவார். இவர் வருடாந்திர வருமானமாக 40 தயல்கள் வெள்ளிக்கும் மற்றும் நான்கு அடிமைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.
1914ல் ஒரு மங்கோலிய உயர்குடிக் குழந்தை.

பொதுவான பட்டங்கள்[தொகு]

மேலே உள்ள தரவரிசைகளைத் தவிர, பிரபுக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள்:

 • தோரோல் தைஜி ( இலக்கியரீதியாக “தொடர்புடைய பிரபுக்கள்”) என்பவர்கள் 'அல்டான் உருக்'கின் உறுப்பினர்கள் மற்றும் செங்கிஸ் கானின் சந்ததியினர் ஆவர்.
 • கரியது தைஜி (இலக்கியரீதியாக "பிரபுக்களின் மக்கள்") என்பவர்கள் கசர், பெல்குதை மற்றும் செங்கிஸ் கான் சகோதரர்களின், அல்லது தூரிலு கான் மற்றும் துமேது-இன் நோயன்களின் வம்சத்தினர் ஆவர்.

மங்கோலியப் உயர்குடிகளுக்கு வழங்கப்படும் மற்ற பட்டங்கள்:

 • அ-கே (阿哥) என்பவர் உயர்குடிக் குடும்பத்தின் மகன் ஆவார்.
 • தபுனங் (塔布囊) என்பவர் உயர்குடிக் குடும்பத்தின் மருமகன் ஆவார்.

உயர்குடி அல்லாத பட்டங்கள்[தொகு]

 • சோவுமோன் அல்பது என்பது பொதுவாக ஒரு அடிமையைக் குறிப்பிடுகிறது.
 • கம்சில்கா என்பது ஒரு உயர்குடிக் குடும்பத்தின் அடிமையைக் குறிப்பிடுகிறது.
 • சபி என்பது கோதோக்துவின் (呼圖克圖; தலாய் லாமா அல்லது பஞ்சென் லாமா வழங்கிய ஒரு பட்டம்) ஒரு ஊழியரைக் குறிப்பிடுகிறது.