நோயன் (பட்டம்)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
நோயோன், நோயன், நயன் மங்கோலியப் பேரரசில் வழங்கப்பட்ட ஒரு பட்டமாகும். நவீன மங்கோலிய மொழியில் இந்த வார்த்தை மிஸ்டர் அல்லது மான்சியூரைப் போன்ற ஒரு முகவரி வடிவமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில், செங்கிஸ் கானின் இராணுவத்தில் ஒரு இராணுவ தளபதிக்கு இது வழங்கப்பட்டது: னோயன் என்ற வார்த்தை 10,000 மற்றும் 1,000 படை வீரர்களைக் கொண்ட இராணுவ பிரிவுகளான முறையே தியுமன்கள் மற்றும் மிங்கன்களின் தளபதிகளுக்கு வழங்கப்பட்டது. வெற்றிகளின் போது, னோயன்கள் நிர்வாகத்திற்காகப் பிராந்தியங்களைப் பெற்றனர். மேலும் அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் திறமையுடன் பிரபுத்துவம் அடைந்தனர். ‘’னோயன்கள்’’ சமூக தரவரிசையில் சாதாரண மங்கோலியர்களுக்கு மேலே இருந்தனர். ஆனால் செங்கிஸ் கான் மற்றும் அவரது சகோதரர்களின் வம்சாவளியினருக்குக் கீழே இருந்தனர். இவர்கள் சில நேரங்களில் சூச்சியின் உளூஸ், இல்கானேடு மற்றும் ஜகாடேய் கானேட்டில் எமிர் அல்லது பே என அழைக்கப்பட்டனர். யுவான் பதிவுகளில் இவர்கள் ‘’குவன்ரென்’’ என்றழைக்கப்பட்டனர். ஏனெனில் போர் தொடுத்தலே இவர்களின் முக்கியப் பணியாகும்.
வழக்கமாக குறிப்பிடத்தக்க நபர்களின் பெயர்களுக்குப் பின்னால் இப்பட்டம் பயன்படுத்தப்பட்டது. “கான்” எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அதேபோல், எ.கா., செபே னோயன், சோர்மக்கன் னோயன், சாலி னோயன் மற்றும் கரிக் னோயன்.
மங்கோலியப் பேரரசுக்குப் பிறகு
[தொகு]மங்கோலியாவில் 1694 முதல் 1911 வரை சிங் வம்சம் ஆட்சி செய்தது. அவர்கள் மங்கோலியாவை ஆட்சி செய்யும் பணியை செங்கிஸ் கானின் வம்சாவளியினரிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்களே ‘’னோயன்’’ என்றழைக்கப்பட்டனர். இந்த சகாப்தத்தில் மங்கோலியாவில் பெரும்பாலும் அமைதி நிலவியது. இக்காலத்தில் ‘’னோயன்’’ என்ற பட்டம் உயர்குடியினர் என்று பொருள்படுமாறு மருவியது. 1921 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ‘’னோயன்’’ என்ற சொல்லுக்குப் பதிலாக டர்கா (முதலாளி) என்ற சொல் அதிகாரிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[1]
மங்கோலியாவில் இசுடாலினிச அடக்குமுறைகளின் போது பல னோயன்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர் மற்றும்/அல்லது கைதுசெய்யப்பட்டனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ C.P.Atwood-Encyclopedia of Mongolia, p.412