முகாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகாலி
{{{lived}}}
Statue of Mukhulai.jpg
முகாலி சிலை, சிங்கிஸ் சதுக்கம், உலான்பாடர்
பிறப்பு 1170
இறப்பு 1223 (அகவை 52–53)
சார்பு மங்கோலியப் பேரரசு
சேவை ஆண்டு(கள்) 1206க்கு முன் – 1223
சமர்/போர்கள் மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு
முகாலி
சீன எழுத்துமுறை 木華黎
எளிய சீனம் 木华黎

முகாலி (மொங்கோலியம்: Мухулай; 1170–1223) அல்லது முகுலை என்பவர் ஒரு மங்கோலிய அடிமை ஆவார். இவர் பிற்காலத்தில் செங்கிஸ் கானின் கீழ் நம்பகமான மற்றும் மதிப்பிற்குரிய தளபதி ஆனார். இவரது தந்தை கூன் உவா, ஜலைர் இனத் தலைவர் ஆவார். இவரது தந்தை மங்கோலியர்களுக்கு விசுவாசமாக இருப்பதென உறுதி எடுத்து இருந்தார். "முகாலி" என்பது உண்மையில் ஒரு அடைமொழி ஆகும். இதன் பொருள் "அன்பிற்குரியவர்". பெரிய கானுக்கும் மற்றும் மங்கோலியப் பேரரசுக்கும் செய்த சேவை காரணமாக இவர் இந்த அடைமொழியைப் பெற்றார். மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பின் போது முகாலி ஒரு படைத் தலைவராக செங்கிஸ் கானுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் மற்றும் சீனாவின் வைசிராயாகப் பதவி உயர்த்தப்பட்டார். செங்கிஸ் கான் மத்திய ஆசியாவை வெல்லப் புறப்பட்ட போது முகாலிக்கு பெரிய அளவிலான சுய அதிகாரத்தை வழங்கிவிட்டுச் சென்றார். போரில் எதிரிகளைக் கொல்வதற்குப் பதிலாக அவர்களை இணக்கமான முறையில் நண்பர்களாக மாற்றுவதற்கு முகாலி முயற்சித்தார். மங்கோலியர்கள் மீதான மற்றவர்களின் எண்ணத்தை மாற்ற முயற்சித்தார்.[1] ஒகோடியின் ஆட்சியின் போது (1229-1241) திறமையான மங்கோலியத் தளபதிகளுள் ஒருவராக இவர் கருதப்பட்டார்.[2] மிகச்சிறிய படையை வைத்துக் கொண்டு போர்புரிந்த இவர், தான் போர் புரிந்த எந்தப் போரிலும் தோற்கடிக்கப்படவில்லை. இதன் காரணமாக வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த போர்த் தளபதியாக இவர் கருதப்படுகிறார்.

உசாத்துணை[தொகு]

  1. Frank McLynn, Genghis Khan (2015), 231.
  2. Christopher P. Atwood, Pu'a's Boast and Doqolqu's Death: Historiography of a Hidden Scandal in the Mongol Conquest of the Jin.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகாலி&oldid=2590172" இருந்து மீள்விக்கப்பட்டது