புனித உரோமைப் பேரரசு மீதான மங்கோலியத் தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கோலிய தாக்குதல்களின்போது புனித உரோமைப் பேரரசு

புனித உரோமைப் பேரரசு மீதான மங்கோலிய தாக்குதல்கள் 1241ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் நடைபெற்றன. 1241-42ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் மீண்டும் நடைபெற்றன. இத்தாக்குதல்கள் மங்கோலியர்களின் முதல் ஐரோப்பிய படையெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றன.

மங்கோலியர்கள் புனித உரோமைப் பேரரசுக்குள் நீண்ட தொலைவிற்கு முன்னேறவில்லை. புனித உரோமைப் பேரரசின் நிலப்பகுதியில் பெரிய ஆயுதச் சண்டைகள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, போலந்து மீது படையெடுத்த மங்கோலிய இராணுவமானது கிழக்கு செருமனியை இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கிய பிறகு, ஏப்ரல்-மே 1241ஆம் ஆண்டு மொராவியா மர்கரேவியட் பகுதியைத் தாண்டி அங்கேரி மீது படையெடுத்த இராணுவத்துடன் மீண்டும் இணைந்தது. இந்த பயணத்தின்போது அவர்கள் மொரவிய நாட்டுப்புற பகுதிகளுக்கு சேதம் விளைவித்தனர். எனினும் கோட்டை பகுதிகளை தவிர்த்தனர். பொகேமியாவின் மன்னனான முதலாம் வென்சஸ்லஸ் சில செருமானிய இளவரசர்களுடன் இணைந்தார். ஆனால் மொராவியாவில் இருந்த மங்கோலியர்களை அவர்களுடன் எந்த சண்டையிலும் ஈடுபடாமல் கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்கு பிறகு ஆத்திரிய வேள் பகுதிக்கு வடக்கே குறிப்பிடத்தக்க அளவிலான முக்கியமான சிறு சிறு சண்டைகள் நடைபெற்றன. இச்சண்டைகளில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். எனினும் ஆத்திரியர்கள் மற்றும் அங்கேரியர்களுக்கு இடையில் எந்தவித ஒத்துழைப்பும் நடைபெறவில்லை.[1][2][3]

1230ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பா. இப்படம் கிழக்கில் மங்கோலிய தாக்குதல்களை குறிப்பிடுகிறது.
எரோசுலாவ் மற்றும் பைதருக்கு இடையிலான புராணக்கதை எதிர்ப்பாடு. ஒரு 19ஆம் நூற்றாண்டு ஓவியம்.

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Jackson 2005, ப. 73.
  2. Wilson 2016, ப. 41.
  3. Vercamer 2021, ப. 238.