உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கோலியர்களின் காரா கிதை படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கோலியர்களின் காரா கிதை படையெடுப்பு
மங்கோலியர்களின் மத்திய ஆசியப் படையெடுப்பின் ஒரு பகுதி

மங்கோலியர்களின் காரா கிதை படையெடுப்பு (மேற்கத்திய லியாவோ) மற்றும் சீன ஆட்சிகள்
தேதி கி.பி. 1216–1218
இடம் மத்திய ஆசியா, ஆப்கானித்தான், சீனா
முடிவு மாபெரும் மங்கோலிய வெற்றி, காரா கிதை கலைக்கப்பட்டது
பிராந்திய
மாற்றங்கள்
மங்கோலியப் பேரரசுடன் காரா கிதையின் பகுதிகள் இணைக்கப்பட்டது
நாடுகள்
மங்கோலியப் பேரரசு காரா கிதை
மன்னர் மற்றும் தளபதிகள்
செபே குசலுகு  மரணதண்டணை
படை வகைகள்
இரண்டு தியுமன்கள்[1][2] தெரியவில்லை
எண்ணிக்கை
20,000 மொத்தம் தெரியவில்லை, 30,000க்கும் மேல்
உயிர்ச்சேதங்கள்
குறைந்த அளவு தெரியவில்லை

மங்கோலியப் பேரரசு கி.பி. 1216-1218ல் காரா கிதையைத் தோற்கடித்தது. படையெடுப்பிற்கு முன் குவாரசமிய அரசமரபுடனான போர், நைமர்களின் இளவரசரான குசலுகு ஆட்சியைக் கைப்பற்றியது ஆகிய காரணங்களால் காரா கிதை பலவீனமாக இருந்தது. குசலுகு அல்மலிக்கை முற்றுகையிட்டபோது அது கரலுகுக்களின் வசம் இருந்தது. கரலுகுக்கள் மங்கோலியப் பேரரசிற்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தனர். செங்கிஸ் கான் குசலுகுவைப் பின்தொடர செபே தலைமையில் ஒரு படையை அனுப்பினார். குசலுகுவின் 30,000 படைவீரர்கள் செபேயின் படையால் கிதான் தலைநகரம் பலசகுனில் தோற்கடிக்கப்பட்டனர். குசலுகுவின் பிரபலமற்ற ஆட்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் குசலுகு தற்கால ஆப்கானித்தானுக்குத் ஒடினார். அங்கு இவர் கி.பி. 1218ல் வேட்டைக்காரர்களால் பிடிக்கப்பட்டார். அந்த வேட்டைக்காரர்கள் குசலுகுவை மங்கோலியர்களிடம் ஒப்படைத்தனர். மங்கோலியர்கள் குசலுகுவை சிரச்சேதம் செய்தனர். காரா கிதையை வென்ற பிறகு மங்கோலியப் பேரரசின் எல்லையானது குவாரசமியப் பேரரசு வரை விரிவடைந்திருந்தது. அதுவும் கி.பி. 1219ல் படையெடுப்புக்கு உள்ளானது.

பின்புலம்[தொகு]

1204ல் செங்கிஸ் கான் நைமர்களைத் தோற்கடித்த பிறகு நைமர்களின் இளவரசன் குச்லுக் தன் நாட்டில் இருந்து ஓடி காரா கிதையில் அகதியாக தஞ்சமடைந்தான். குர்கான் எலு ஜிலுகு குச்லுக்கை தனது பேரரசுக்கு வரவேற்றார். குச்லுக் அங்கு ஒரு ஆலோசகராகவும் ராணுவத் தளபதியாகவும் பணியாற்றினான். பின்னர் ஜிலுகுவின் ஒரு மகளை மணமுடித்தான். ஜிலுகு அண்டை நாடான குவாரசமிய அரசமரபுடன் சண்டையிடும்போது குச்லுக் ஜிலுகுக்கு எதிராகக் கலகம் செய்தான். குச்லுக்குக்கு அதிகாரம் வந்த பிறகு ஜிலுகுவை பெயரளவில் மட்டும் காரா கிதையை ஆள அனுமதித்தான்.[3] குர்கான் 1213ல் இறந்த பொழுது குச்லுக் கானேட்டின் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்.[3] குச்லுக் உண்மையிலேயே நெசுத்தோரியக் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவன். காரா கிதைக்குச் சென்ற பிறகு புத்த மதத்திற்கு மாறினான். பெரும்பான்மை இன மக்களான முஸ்லிம்களை துன்புறுத்தினான். அவர்களை புத்த மதம் அல்லது கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினான். இதன் காரணமாக பெரும்பாலான மக்களிலிருந்து ஒதுக்கப்பட்டான்.[4][3] கர்லுக்குகளின் நகரமான அல்மலிக்கைக் குச்லுக் முற்றுகையிட்டான். கர்லுக்குகள் மங்கோலியப் பேரரசுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தனர். எனவே செங்கிஸ்கான் உதவி கேட்டனர்.[5]

படையெடுப்பு[தொகு]

குவாரசமியாவின் இரண்டாம் முகமதுவை குச்லுக்குக்கு உதவ வேண்டாம் என்று கூறிய செங்கிஸ் கான் தனது தளபதி செபே தலைமையில் இரண்டு தியுமன் (20,000 வீரர்கள்) வீரர்களை காரா கிதை பிரச்சினையைச் சரி செய்ய அனுப்பினார். அதே நேரத்தில் மெர்கிடுகளுடன் போரிட சுபுதையை 20,000 ஆயிரம் வீரர்களுடன் அனுப்பினார்.[1][2] இரண்டு ராணுவங்களும் ஒன்றாக அல்தாய் மலைகள் மற்றும் தர்பகடை மலைகளைக் கடந்து அல்மலிக் வரை சென்றன.[2] அங்கிருந்து பிரிந்த சுபுதை தென்மேற்கு திசையை நோக்கிச் சென்றார். மெர்கிடுகளை அழித்த அவர் அதே நேரத்தில் குவாரசமியாவிலிருந்து ஏதேனும் திடீர்த் தாக்குதல் செபேக்கு எதிராக நடத்தப்படாமல் பார்த்துக் கொண்டார்.[6][7] அல்மலிக்கைக் கடந்த செபே பல்காசு ஏரிக்குத் தெற்கு நோக்கி சென்றார். காரா கிதை நிலப் பகுதிக்கு சென்றார். பலசகுனின் தலைநகரத்தை முற்றுகையிட்டார். அங்கு செபே 30,000 வீரர்களைக் கொண்ட ராணுவத்தை தோற்கடித்தார். குச்லுக் கஷ்கருக்குத் தப்பியோடினான். குச்லுக்கின் ஆட்சியிலிருந்த அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொண்ட செபே குச்லுக்கின் கொள்கையான மதரீதியான துன்புறுத்தல் நிறுத்தப்பட்டதாகக் கூறினார். இதன் காரணமாக முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றார். செபேயின் இராணுவம் 1217ல் கஷ்கருக்கு வந்தபோது மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். குச்லுக்குக்கு எதிராகத் திரும்பினர். இதன் காரணமாக உயிரை காப்பாற்றிக்கொள்ள குச்லுக் தப்பி ஓட வேண்டியிருந்தது.[8][9] செபே குச்லுக்கை பாமிர் மலைகள் முழுவதும் துரத்தினார். ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் பகுதி வரை துரத்தினார். அடா-மாலிக் ஜுவய்னியின் கூற்றுப்படி ஒரு வேட்டைக்காரர்களின் கூட்டம் குச்லுக்கைப் பிடித்து மங்கோலியர்களிடம் ஒப்படைத்தது. மங்கோலியர்கள் உடனடியாக குச்லுக்கின் தலையைத் துண்டித்தனர்.[10]

பின் விளைவு[தொகு]

குச்லுக்கின் இறப்பிற்குப் பிறகு மங்கோலியப் பேரரசு காரா கிதையின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டது. காரா கிதையின் மற்றொரு பிரிவான புரக் ஹஜிப்பால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அரச மரபு கிர்மன் மாகாணத்தில் நீடித்தது. அவர்கள் மங்கோலியர்களுக்குக் கப்பம் கட்டினர். ஆனால் மங்கோலிய இல்கானேடு ஆட்சியாளர் ஒல்ஜைடுவின் ஆட்சியின் போது அவர்கள் இல்லாமல் போய் விட்டனர்.[11] மங்கோலியர்கள் தற்போது மத்திய ஆசியாவில் குவாரசமியப் பேரரசுடன் எல்லையைக் கொண்ட ஒரு திடமான புறக்காவலைக் கொண்டிருந்தனர்.[9] குவாரசமியாவுடனான உறவும் சீக்கிரமே முறிந்து போனது. இதன் காரணமாக அதுவும் மங்கோலியப் படையெடுப்புக்கு உள்ளானது.[9]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Lococo 2008, ப. 75.
 2. 2.0 2.1 2.2 Gabriel 2004, ப. 70.
 3. 3.0 3.1 3.2 Golden 2011, ப. 82.
 4. Morgan 2007, ப. 54.
 5. Soucek 2000, Chapter 6 – Seljukids and Ghazvanids.
 6. Lococo 2008, ப. 76.
 7. Gabriel 2004, ப. 70–71.
 8. Turnbull 2003, ப. 16.
 9. 9.0 9.1 9.2 Beckwith 2009, ப. 187–188.
 10. Juvayni c. 1260, pp. 67–68"When he drew near to Sarigh-Chopan, he mistook the road (as it was right that he should do) and entered a valley which had no egress. Some Badakhshani huntsmen were hunting in the neighbouring mountains. They caught sight of Küchlüg and his men and turned towards them; while the Mongols came up from the other side. As the valley was of a rugged nature and the going was difficult, the Mongols came to an agreement with the hunters. 'These men', they said, 'are Küchlüg and his followers, who have escaped from our grasp. If you capture Küchlüg and deliver him up to us, we shall ask nothing more of you.' These men accordingly surrounded Küchlüg and his followers, took him prisoner and handed him over to the Mongols; who cut off his head and bore it away with them."
 11. Biran 2005, ப. 87.

ஆதாரங்கள்[தொகு]