உள்ளடக்கத்துக்குச் செல்

சாவகம் மீதான மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாவகம் மீதான மங்கோலியப் படையெடுப்பு என்பது குப்லாய் கானின் தலைமையிலான யுவான் அரச மரபானது 1292ஆம் ஆண்டு தற்போதைய இந்தோனேசியாவில் உள்ள சாவகம் தீவின் மீது படையெடுத்த நிகழ்வைக் குறிப்பதாகும். இதில் 20,000[1] - 30,000 வீரர்கள் யுவான் அரச மரபால் பயன்படுத்தப்பட்டனர். சிங்காசாரியின் கர்த்தநகரன் யுவானுக்குத் திறை செலுத்த மறுத்ததுடன் யுவானின் தூதுவர்களில் ஒருவரை ஊனமாக்கினார். இதற்குத் தண்டனை கொடுக்கும் போர்ப் பயணமாக இந்தப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. எனினும் கர்த்தநகரனின் மறுப்பு மற்றும் யுவான் வீரர்கள் ஜாவாவுக்கு வருகை புரிந்தது ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கர்த்தநகரன் கொல்லப்பட்டார். சிங்கசாரியின் அரியணையைக் கேதிரி கைப்பற்றியது. எனவே அதற்குப் பதிலாக யுவன் போர்ப் பயணப் படையானது அப்போது ஆட்சிக்கு வந்திருந்த அரசான கேதிரியின் அடிபணிந்த நிலையைப் பெற ஆணையிடப்பட்டது. ஆக்ரோஷமான படையெடுப்புக்குப் பிறகு கேதிரி சரணடைந்தது. ஆனால் யுவான் படைகளின் கூட்டாளியான ராதேன் விஜயன் தலைமையிலான மயாபாகித்து அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தது. இறுதியில் இந்தப் படையெடுப்பானது யுவானின் தோல்வியில், புதிய அரசனான மயாபாகித்தின் வெற்றியில் முடிந்தது.

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Weatherford, Jack (2004), Genghis khan and the making of the modern world, New York: Random House, p. 239, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-609-80964-4

மேலும் படிக்க[தொகு]