உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்
Animated map showing growth of the Mongol Empire
மங்கோலியப் பேரரசின் விரிவாக்கம் 1206–1294
நாள் 1206–1337
இடம் யுரேசியா
படையெடுப்புகளின் முடிவில் யுரேசியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி மங்கோலியப் பேரரசை நிறுவுதல்

மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும் (Mongol invasions and conquests), 13ஆம் நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்தது. 1300ஆம் ஆண்டின் முடிவில் ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மங்கோலியப் பேரரசின் காலடியில் வீழ்ந்தது. மங்கோலியர்கள் போரில் கைப்பற்றிய நாடுகளை ஆள வேண்டும் என்ற எண்ணமின்றி, போரின் போது கையில் சிக்கிய எதிர் நாட்டின் படை வீரர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது வாளாள் தலைகளை வெட்டி வீழ்த்தி, விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து, பின் நாடு நகரத்தை சூறையாடி விட்டுச் செல்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர். ஒரு மங்கோலிய வீரன், ஒரு நாளிற்கு குறைந்தது 24 மக்களை வாளால் கொல்ல வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தனர்.[1] செங்கிஸ் கான், ஒகோடி கான் மற்றும் குப்லாய் கான் போன்ற பேரரசர்கள் காலத்தில் மங்கோலியத் தொடர் படையெடுப்புகளால், வரலாற்றில் அதிக மனித உயிர்கள், மனிதாபமற்ற முறைகளில் பலி கொள்ளப்பட்டது என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். பல நாடுகளில் மக்கள் அகதிகளாக அலைந்தனர். மங்கோலியர்கள் வந்து சென்ற நாடு, நகரங்கள் எல்லாம் பாழடைந்து போயிற்று. மக்கள் வறுமையில் வாடினர். பலர் புலம் பெயர்ந்தனர்.[2][3][4][5][6][7][8]

1227 இல் செங்கிஸ் கான் மரணித்த பின்னர் அவரது வாரிசுகள் யுவான் அரசமரபு, கானேட் அரசமரபு, சாகததே கானேட் அரசமரபு மற்றும் தங்க ஹோர்டே அரசமரபுகள் என மங்கோலியப் பேரரசை பிரித்துக் கொண்டு ஆண்டனர்.

கி பி 1240 ஆண்டிற்குள் நடு ஆசியா, மேற்காசியா, முழுவதையும் தொடர் படையெடுப்புகளால் வெற்றி கொள்ளப்பட்டு, கிழக்கு ஐரோப்பாவை மங்கோலிப் படைகள் அடைந்தன.

தார்தாரி இன மக்களும், மங்கோலியர்களும் கூட்டு சேர்ந்து ரசியா மீது படையெடுத்தனர்.

மங்கோலியர்களின் தொடர் ஆக்கிரமிப்புகளால் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதால், பல பகுதிகளில் மக்கட்தொகை குறைந்து விட்ட்து. குறிப்பாக வடக்கு சீனாவில் 50 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 9 மில்லியனாக குறைந்து விட்டது. பாரசீகத்தில் கிராமங்களில் வரி வருவாய் 80 விழுக்காட்டிற்கு குறைந்து விட்டது. மங்கோலியப் படையெடுப்புகளால், கிழக்காசியாவில் இசுலாமிய சமூகம் படுமோசமாக பாதிப்படைந்தது. மேற்கு ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளில் இருந்த இசுலாமிய ஆட்சிகள் முடிவு கட்டப்பட்டது.[9]

மங்கோலிய-துருக்கிய கலப்பினத்தவரான தைமூரிய வம்சத்தின், தைமூரின் வழிவந்த மொகலாயர்கள், 1260இல் இந்தியாவில் தில்லி சுல்தானகத்திற்குப் பின் தில்லியில் மொகலாயப் பேரரசை நிறுவினர்.

மத்திய ஆசியா

[தொகு]
குவாரசுமியான் அரசிற்கு எதிரான வாலியான் போரில் மங்கோலியர்கள்

செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசை நடு ஆசியாவில் நிறுவியதுடன், மங்கோலிய மக்கள், தர்கிக் மக்கள் (Turkic people) , தாத்தர் மக்கள் (Tartar people), தர்கிக் மக்கள் (Turkic people) , மெர்கிட் மக்கள் (Merkit pepole), மற்றும் உய்குர் மக்களை (Uyghur people) ஒன்றிணைத்து, மங்கோலிய-தாத்தாரிய மக்கள் கூட்டமைப்பை நிறுவினார்.

நடு ஆசியாவின் இசுலாமியர் வாழும் பெரும் பகுதிகளையும், வடகிழக்கு பாரசீகம் பகுதியில் நடந்த படையெடுப்புகளால் அங்கு வாழ்ந்த மக்களை கொன்று குவித்ததால், நாட்டின் மக்கள் தொகை வெகுவாக குறைந்தது.[10] அதிக மக்கள் வாழ்ந்த நகரங்கள், மங்கோலியப் படையெடுப்புகளால், மக்கள் சமவெளியை விட்டு துரத்தப்பட்டு அகதிகளாய் ஓடினர். எனவே மக்கள் தங்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்களிலிருந்து விலகி வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒரு மங்கோலிய வீரன் ஒரு நாளிற்கு குறைந்தது 24 எதிரி நாட்டு போர் வீரர்களை வாளால் கொல்ல படைத்தலைவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர்.[1]

மேற்கு ஆசியா

[தொகு]
பாக்தாத் நகரைக் கைப்பற்றல், ஆண்டு 1258.

1260 முதல் 1300ஆம் ஆண்டிற்குள், மேற்காசியால் தற்கால ஈரான், ஈராக், சிரியா, காக்கேசியா மலைப்பகுதி நாடுகள், துருக்கியின் பல பகுதிகள், இஸ்ரேலின் காஜா பகுதிகள் மற்றும் பாலபாலஸ்தீனப் பகுதிகள் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி கண்டனர். இசுலாமிய சமயத்தின் மையமாக திகழ்ந்த பாக்தாத் மீதான போர் (1258), சினாய் தீபகற்பத்தில் மங்கோலியப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய எகிப்திய மம்லுக் அரசின் அயின் ஜலுட் போர் (1260) குறிப்பிடத்தக்கவைகள். மத்திய கிழக்கு நாடுகளின் மீதான படையெடுப்பின் போது, மங்கோலியர்களின் படைத்தலைவன் கான் ஹுலாடுவிற்கு ஒராயிரம் சீனப் பொறியாளர்களின் குழு உதவி செய்தனர்.[11][12]

மங்கோலியப் படைகளின் குதிரைகள் மேய்வதற்குத் தேவையான போதிய புல்வெளிகள் இல்லாத காரணத்தினால், மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் ஆக்கிரமிப்பை நிறுத்திக் கொண்டனர்.

கிழக்கு ஆசியா

[தொகு]
ஜின் வம்ச மன்னர்களுக்கு எதிரான போரில் மங்கோலியர்கள், ஆண்டு 1211

செங்கிஷ்கானும் அவரது பரம்பரையினரும் சீனாவின் பல பகுதிகள் மீது பல முறை படையெடுத்தனர். 1209இல் சீனாவின் மேற்கு ஜியா பகுதியை கைப்பற்றி, ஜின் வம்சத்தை 1227இல் வெற்றி கொள்ளப்பட்டது. சோங் வம்சத்தை 1279இல் வென்றனர். வடகிழக்கு சீனாவின் உள் மங்கோலியாவை தங்கள் ஆட்சிப் பகுதியில் கொண்டு வந்தனர்.

மங்கோலியர்கள் 1253இல் யுன்னான் மாகாணத்தின் தாலி அரசை வென்று, மீதியுள்ள யுன்னான் பகுதிகளை கைப்பற்றினர். பின்னர் கொரியா மற்றும் ஜப்பான் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.

ஜின் வம்சத்திற்கு எதிரான ஒகோடி கான் தலைமையில் நடந்த போரில் பல ஹான் சீன படைத்தலைவர்கள், மங்கோலியப் படையினரால் கொல்லப்பட்டனர்.[13][14][15][16]

குதிரை மீதிருந்து குறி பார்த்து அம்பெய்தும் மங்கோலிய வீரன்

1256இல் மங்கோலியப் படைகள் சீனாவின் பெரும் படைகளை வென்று தெற்கு சீனாவை கைப்பற்றினர்.[17]

செங்கிஸ்கானின் பேரன் குப்லாய் கான் சீனாவின் யுவான் மாகாணத்தில் 1271இல் யுவான் அரச வம்சத்தை நிறுவி, திபெத் பகுதியை யுவான் அரசில் கொண்டு வந்தார். கொரியா நாட்டையும் யுவான் அரசின் கீழ் கொண்டு வந்தாலும், 1368இல் நடந்த சிவப்பு குல்லாய் புரட்சியில், ஹான் சீனர்கள் மிங் அரச வம்சத்தை நிறுவினர்.

தென்கிழக்கு ஆசியா

[தொகு]

மங்கோலிய பேரரசர் குப்லாய் கான் 1277-1287ஆண்டுகளுக்குள் பர்மாவின் பாகன் வம்ச அரசை வென்றாலும், 1301இல் நடந்த போரில் பர்மாவின் மையின்சயிங் அரசுப் படையினர், மங்கோலியர்களை துரத்தி அடித்தனர்.

வியட்நாம் மற்றும் ஜாவா தீவு மீதான மங்கோலிய படையெடுப்புகள் பெரும் தோல்வி கண்டாலும், இனி மேலும் இப்பகுதியில் இரத்தக் களரி நடைபெறதாவாறு இருக்க மங்கோலியப் படைகளுக்கு பெரும் நிதி கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஐரோப்பா

[தொகு]
போலாந்தின் மீதான மீதான மங்கோலியாவின் முதல் படையெடுப்பு

ஐரோப்பா மீதான மங்கோலியாவின் தொடர் படையெடுப்புகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில்; 12ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் ஆசியா கண்டத்திலிருந்து படையெடுத்து, ஐரோப்பிய கண்டத்தில் வந்தவர்களில், மங்கோலியரைப் போன்று, மனிதநேயமற்ற முறையில் செய்த போர்களில் இரத்தக் களரியான வெறியாட்டங்கள், வன்முறைகள், பேரழிவுகளை மங்கோலியப் படைகளால் நடந்தேறியது.[2] மங்கோலிய படைவீரர்களின் கொடுமையான போரால், ஆண்டாடுகாலமாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து மக்கள், குறிப்பாக நடு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா மக்கள் தங்கள் உயிர்களை காத்துக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்[3]

மங்கோலியப் படைகள் வோல்கா ஆற்று பகுதிகள், ரஷ்யாவின் கீவ் நகரத்தை, முதலாம் போலாந்து, அங்கேரி, பல்கேரியா ஆக்கிரமிப்புக்கு முன்பு தாக்கி அழித்தனர்.

1237–1240 ஆண்டுக்குள் ரசியாவின் ஏறத்தாழ அனைத்து நகரங்களை தாக்கி அழித்தனர்.[18]

மங்கோலிய படையெடுப்புகளின் கால வரிசை

[தொகு]
  • 1205, 1207, 1208, 1209–1210, 1225–1227 – சீனாவின் மேற்கு சியா (Zia) மீதான படையெடுப்புகள்
  • 1207 – சைபீரியாவை கைப்பற்றல்
  • 1211 & 1234 - சீனாவின் ஜின் வம்சத்தவர் மீதான படையெடுப்புகள்
  • 1216 & 1220 – நடு ஆசியா மற்றும் ஈரான் மீது படையெடுப்புகள்
  • 1216 & 1218 - மத்திய ஆசியாவின் குவாரா கித்தாய் (Qara Khitai) பேரரசை வீழ்த்துதல்
  • 1220-1223 & 1235 & 1330 – ஜியார்ஜியா மற்றும் காக்கேசியா பகுதிகளை கைப்பற்றல்
  • 1220 & 1224 - கல்கா போரில் யுரேசியாவின் குமான் (Cumans) பகுதிகளை கைப்பற்றல்
  • 1222 & 1325 - வட இந்தியாவில் சில பகுதிகளை ஆக்கிரமித்தல்
  • 1223 & 1236 – வால்காவின் பல்கேரியா பகுதிகளை கைப்பற்றல்
  • 1231 & 1259 – கொரியாவை ஆக்கிரமித்தல்
  • 1235-1279 – சீனாவின் சாங் வம்ச அரசை கைப்பற்றல்
  • 1222, 1236–1242 – ஐரோப்பா மீதான படையெடுப்புகள்
    • 1236–1242 - ரஸ் பகுதி மீதான படையெடுப்பு
      • 1237–1238 - சித் ஆற்றுப் போரில் கிழக்கு மற்றும் வடக்கு ரஸ் பகுதிகளை கைப்பற்றல்
      • 1240 - ரஷ்யாவின் கீவ் நகரை கைப்பற்றல் & 1239-1240இல் தெற்கு மற்றும் மேற்கு ரஸ் பகுதிகளை கைப்பற்றல்
    • 1238-1239 – செச்சினியா மற்றும் 1238–1239 இல் வடக்கு காக்கேசியாவை கைப்பற்றல்
    • 1238-1240 - குமானியா மற்றும் ஆலானியாவை ஆக்கிரமித்தல்
    • 1241 – போலந்து மற்றும் பொஹிமியாவை கைப்பற்றல்
      • 1241 - லெக்னிகா போரில் ஐரோப்பிய கூட்டுப் படைகளை முறியடித்தல்
    • 1241 - மோகிப் போரில் அங்கேரியை ஆக்கிரமித்தல்
    • 1241 – ஆஸ்திரியா மற்றும் வடக்கு இத்தாலி மீதான் ஆக்கிரமிப்புகள்
    • 1241–1242 – குரோசியாவை ஆக்கிரமித்தல்
    • 1242 செர்பியா மற்றும் பல்கேரியா மீதான ஆக்கிரமிப்புகள்
  • 1240–1241 – திபெத் நாட்டை கைப்பற்றுதல்
  • 1241–1244 - கோஸ் தாக் போரில் அனத்தோலியாவை கைப்பற்றுதல்
  • 1244–1265 - தாலி நாட்டை (Dali Kingdom) ஆக்கிரமித்தல்
  • 1251–1259 - பிரான்சு-மங்கோலியா கூட்டு; பாரசீகப் பேரரசு, மெசொப்பொத்தேமியா மற்றும் சிரியாவை கைப்பற்றல்.
  • 1253–1256 - சீனாவின் யுன்னான் மாகாணத்தை கைப்பற்றல்.
  • 1257, 1284, 1287 – வியட்நாம் நாட்டை தாக்குதல்
  • 1258 – பாக்தாத் நகரத்தை கைப்பற்றுதல்
  • 1258–1260 - இரண்டாம் முறையாக போலந்து மற்றும் லிதுவேனியா நாட்டை ஆக்கிரமித்தல்
    • 1260 - போலாந்து நாட்டின் சாண்டோமியர்ஸ் நகரத்தை தாக்கி சூறையாடுதல்
  • 1260 - அயின் ஜலூட் போரில் தற்கால இஸ்ரேல் பகுதிகளை கைப்பற்றல்
  • 1260 – சிரியா மீதான தாக்குதல்கள்
  • 1264–1265 - பல்கேரியா மற்றும் திராஸ் மீதான தாக்குதல்கள்
  • 1260 - சகாலின் தீவு மீதான தாக்குதல்கள்
  • 1271 – பாலஸ்தீனம் மற்றும் சிரியா மீதான தாக்குதல்கள்
  • 1274, 1281 – ஜப்பான் மீதான படையெடுப்புகள்
  • 1274 - பல்கேரியா மீதான தாக்குதல்கள்
  • 1275, 1277 – லிதுவேனியா மீதான தாக்குதல்கள்
  • 1277 அபுலுஸ்டாயின் போர் (battle of Abulustayn)
  • 1277- பர்மாவை தாக்குதல்
  • 1281 - இரண்டாம் ஹோம்ஸ் போரில் சிரியாவை கைபற்றல்
  • 1284–1285 – அங்கேரி மீதான இரண்டாம் ஆக்கிரமிப்பு
  • 1285 – பல்கேரியா மீதான தாக்குதல்கள்
  • 1287 - பர்மா மீதான தாக்குதல்கள்
  • 1287–1288 மூன்றாம் முறையாக போலாந்து மீதான தாக்குதல்கள்
  • 1293 – ஜாவா தீவு மீதான படையெடுப்புகள்
  • 1299 – சிரியாவை ஆக்கிரமித்தல்
  • 1300 - பர்மாவைத் தாக்குதல்
  • 1299-1303 - சிரியாவை ஆக்கிரமித்தல்
  • 1312 - சிரியாவை ஆக்கிரமித்தல்
  • 1324 & 1337 – உசுபெக்கிசுத்தான் நாட்டை தாக்குதல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Central Asian world cities பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்", University of Washington.
  2. 2.0 2.1 Brian Landers (2011). Empires Apart: A History of American and Russian Imperialism. Open Road Media. p. 17.
  3. 3.0 3.1 Diana Lary (2012). Chinese Migrations: The Movement of People, Goods, and Ideas over Four Millennia. Rowman & Littlefield. p. 49.
  4. Robert Tignor et al. Worlds Together, Worlds Apart A History of the World: From the Beginnings of Humankind to the Present (2nd ed. 2008) ch 11 pp 472-75 and map p 476-77
  5. Vincent Barras and Gilbert Greub. "History of biological warfare and bioterrorism" in Clinical Microbiology and Infection (2014) 20#6 pp 497-502.
  6. Andrew G. Robertson, and Laura J. Robertson. "From asps to allegations: biological warfare in history," Military medicine (1995) 160#8 pp: 369-373.
  7. Rakibul Hasan, "Biological Weapons: covert threats to Global Health Security." Asian Journal of Multidisciplinary Studies (2014) 2#9 p 38. online
  8. Wei-chieh Tsai. Review of May, Timothy, The Mongol Conquests in World History H-War, H-Net Reviews. September, 2012. online
  9. Matthew Buttsworth (1999). Eden and the Fall: The Fallacies of Radical Ecological History. Ph. D. disertation--Murdoch University. p. 374. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9870628-2-6.
  10. "World Timelines – Western Asia – AD 1250–1500 Later Islamic". Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.
  11. Josef W. Meri (2005). Josef W. Meri (ed.). Medieval Islamic Civilization: An Encyclopedia. Psychology Press. p. 510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-96690-6. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28. This called for the employment of engineers to engaged in mining operations, to build siege engines and artillery, and to concoct and use incendiary and explosive devices. For instance, Hulagu, who led Mongol forces into the Middle East during the second wave of the invasions in 1250, had with him a thousand squads of engineers, evidently of north Chinese (or perhaps Khitan) provenance. {{cite book}}: Cite has empty unknown parameter: |month= (help)
  12. Josef W. Meri, Jere L. Bacharach (2006). Josef W. Meri, Jere L. Bacharach (ed.). Medieval Islamic Civilization: L-Z, index. Vol. Volume 2 of Medieval Islamic Civilization: An Encyclopedia (illustrated ed.). Taylor & Francis. p. 510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-96692-2. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28. This called for the employment of engineers to engaged in mining operations, to build siege engines and artillery, and to concoct and use incendiary and explosive devices. For instance, Hulagu, who led Mongol forces into the Middle East during the second wave of the invasions in 1250, had with him a thousand squads of engineers, evidently of north Chinese (or perhaps Khitan) provenance. {{cite book}}: |volume= has extra text (help); Cite has empty unknown parameter: |month= (help)
  13. Collectif 2002, p. 147.
  14. May 2004, p. 50.
  15. Schram 1987, p. 130.
  16. eds. Seaman, Marks 1991, p. 175.
  17. Smith, Jr. 1998, p. 54.
  18. "History of Russia, Early Slavs history, Kievan Rus, Mongol invasion". Archived from the original on 2018-02-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mongol conquests
என்பதில் ஊடகங்கள் உள்ளன.