சுகோத்தாய் இராச்சியம்
சுகோத்தாய் இராச்சியம் Kingdom of Sukhothai อาณาจักรสุโขทัย | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1238–1583 | |||||||||
![]() 1300 CE செம்மஞ்சள்: சுகோத்தாய் இராச்சியம் இளநீலம்: லாவோ இராச்சியம் சிவப்பு: கெமர் பேரரசு மஞ்சள்: சம்பா நீலம்: தாய் வியெட் செவ்வூதா: லானா | |||||||||
தலைநகரம் | சுகோத்தாய் (1238 - 1419) பிட்சானுலொக் (1419 - 1583) | ||||||||
பேசப்படும் மொழிகள் | தாய் | ||||||||
சமயம் | தேரவாத பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• 1249- 1257 | சிறீ இந்திராதித்தியா | ||||||||
• 1279 - 1299 | இராமகாம்கெயிங்கு | ||||||||
• 1448 - 1488 | திரிலோகநாத் | ||||||||
• 1534 - 1569 | மகா தம்மராசாத்திரத் | ||||||||
• 1569 - 1583 | நரெசுவான் | ||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக்காலம் | ||||||||
• லாவோ இராச்சியத்தில் இருந்து விடுதலை | 1238 | ||||||||
• விரிவாக்கம்: இராமகாம் கெயிங்கு ஆட்சி | 1279 - 1299 | ||||||||
• ஆயுத்தயா இராச்சியத்துடன் இணைவு | 1448 | ||||||||
• நரெசுவான் ஆட்சியில் இணைப்பு | 1583 | ||||||||
|
சுகோத்தாய் இராச்சியம் (ஆங்கிலம்: Sukhothai Kingdom, தாய்: ราชอาณาจักรสุโขทัย) என்பது கி.பி 1238-ஆம் ஆண்டு முதல் 1438-ஆம் ஆண்டு வரையில் தாய்லாந்தின் வடமத்தியில் சுகோத்தாய் நகரையும் அதன் அருகில் இருந்த பகுதிகளையும் உள்ளடக்கி இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.
இந்த இராச்சியம் கி.பி.678-இல் பிரயா பலிராஜ் (Phraya Paliraj) என்பவரால் நிறுவப்பட்டது என்றும் அவரின் பூர்வீகம் இலாவோ இராச்சியம் என்றும் தாய்லாந்து காலச் சுவடுகள் (Northern Thai Chronicles) பதிவு செய்துள்ளன.[1]
1438-ஆம் ஆண்டு வரை ஒரு சுதந்திர அரசாக இருந்தது. அதன் அரசரான போரோம்மாபன் (Borommapan) எனும் மகா தம்மராச்சா IV (Maha Thammaracha IV) இறந்த பிறகு, அதன் அண்டை இராச்சியமான அயூத்தியாஇராச்சியத்தின் ஆளுமையின் கீழ் வந்தது.
பொது
[தொகு]இந்தச் சுக்கோத்தாய் இராச்சியம், கெமர் மற்றும் லாவோ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது, கெமர் மக்கள், சுக்கோத்தாய் நகரத்தில் பல்வேறு நினைவுச் சின்னங்களைக் கட்டினார்கள். அவற்றுள் பல இன்னும் அங்கு உள்ளன.[2]
இதன் தலைநகரம், தற்போதைய சுகோத்தாய் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் இருந்தது. தற்போது அந்த நகர்ப்பகுதி சிதைந்த நிலையில் உள்ளது. சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா (Sukhothai Historical Park) என்ற பெயரில் யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியக் களமாக (World Heritage Site) அறிவித்துள்ளது.

மேற்கோள்
[தொகு]- ↑ Swearer, Donald K. (1995-01-01). The Buddhist World of Southeast Asia (in ஆங்கிலம்). SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-2459-9.
- ↑ orientalarchitecture.com. "Ta Pha Daeng Shrine, Sukhothai, Thailand". Asian Architecture (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.