சம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சம்பா என்பவர் மகாபாரதக் கதையில் வருகின்ற கதைமாந்தராவர். இவர் கிருஷ்ணனின் மகன்களில் ஒருவர். துரியோதனின் மகளைக் களவு மணம் செய்ய சென்றபோது கௌரவர்கள் கைது செய்தனர். சம்பாவை மீட்க பலராமர் சென்றார். அவரை கௌரவர்கள் இழிவாகப் பேசினர். அத்துடன் யாதவர்கள் குலத்தினைப் பற்றியும் தாழ்வாக பேசினர்.

அதனால் கோபம் கொண்ட பலராமர் தன்னுடைய கலப்பையை அஸ்தினாபுரத்தில் அழுத்தி கங்கையில் மூழ்கும்படி செய்து கொண்டிருந்தார். அவரது செயலைக் கண்டு பயந்து கௌரவர்கள் சம்பாவையும், அவனுடைய ஆசை நாயகியையும் அனுப்பி வைத்தனர்.

பிண்டாரகா எனுமிடத்தில் சம்பா தன்னுடைய நண்பர்களுடன் சென்றார். அங்கு பெண் வேடமிட்டு சம்பாவும் நண்பர்களும் விஸ்வாமித்திரரிடம் இவளுக்குப் பிற்ககப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என வினவினார்கள். இந்த விளையாட்டுத்தனத்தினை புரிந்து கோபம் கொண்ட விஸ்வாமித்திரர் இவளுக்கு ஆணோ, பெண்ணோ பிறக்கப்போவதில்லை. ஒரு உலக்கை பிறக்கப்போகிறது. அதுதான் உங்கள் யாதவக் குலத்தை அழிக்கப்போகிறது என்று சாபமிட்டார்.

விஸ்வாமித்திரர் சாபம் பலித்து உலக்கை பிறந்தது. அதை உக்கரசேனன் பொடிப்பொடியாக கடலுக்குள் தூவிவிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா&oldid=2359131" இருந்து மீள்விக்கப்பட்டது