தங்க நாடோடிக் கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க நாடோடிக் கூட்டம்
சூச்சியின் உளூஸ்
Зүчийн улс
1240கள்–1502
கொடி of தங்க நாடோடிக் கூட்டம்
கற்றலான் வரைபடத்தில் உள்ளபடி தங்க நாடோடிக் கூட்டத்தின் கொடி (மற்ற ஆதாரங்களின்படி தங்க நாடோடிக் கூட்டமானது கானின் மஞ்சள் நிற கொடிக்காக அறியப்படுகிறது.[1])
நிலைநாடோடிப் பேரரசு
மங்கோலியப் பேரரசின் பகுதி
தலைநகரம்சராய் படு
பேசப்படும் மொழிகள்
  • மங்கோலியம் (தங்க நாடோடிக் கூட்டத்தின் தொடக்கத்திலிருந்து அரசாங்க மொழி, நீதிமன்ற மொழி)[2]
  • துருக்கி (கிப்சாக் மொழி) (குறிப்பாக மேற்கு கிப்சக் பேச்சுவழக்குகள், இந்த மொழி கானின் இராணுவத்தில் இருந்தவர்களாலும், கருங்கடல் புல்வெளியில் வாழ்ந்த பெரும்பாலான மங்கோலியரல்லாத துருக்கிய மக்களால் பேசப்பட்டது. மங்கோலியத்தில் இருந்து துருக்கிக்கான மாற்றம் 1350களில் ஏற்பட்டது.)[2]
சமயம்
தெங்கிரி மதம்
ஷாமன் மதம்
கிறித்தவம்
திபெத்திய பௌத்தம்
(1240கள்–1313)
இசுலாம்
(1313–1502)
அரசாங்கம்பகுதியளவு தேர்ந்தெடுத்த அரசு, வாரிசு வழி அரசு
கான் 
• 1226–1280
ஓர்டா கான் (வெள்ளை நாடோடிக் கூட்டம்)
• 1242–1255
படு கான் (நீல நாடோடிக் கூட்டம்)
• 1379–1395
தோக்தமிசு
• 1435–1459
குச்சுக் முகம்மது (பெரிய நாடோடிக் கூட்டம்)
• 1481–1498, 1499–1502
சயிக் முகம்மது (பெரிய நாடோடிக் கூட்டம்)
சட்டமன்றம்குறுல்த்தாய்
வரலாற்று சகாப்தம்கடைசி நடுக்காலங்கள்
• மங்கோலியர்களின் ருஸ் படையெடுப்புக்குப் பின் நிறுவப்பட்டது
1240கள்
1379
1466
• எஞ்சியவை கிரிமிய கானரசிடம் பணிதல்
1502
பரப்பு
1310[3][4]6,000,000 km2 (2,300,000 sq mi)
முந்தையது
பின்னையது
மங்கோலியப் பேரரசு
குமனியா
வோல்கா பல்கேரியா
கிரிமிய கானரசு
காசிம் கானரசு
கசன் கானரசு
கசக் கானரசு
உஸ்பெக் கானரசு
அசுதிரகான் கானரசு
சைபீர் கானரசு
கிவா கானரசு
தைமூரியப் பேரரசு
நோகை கானரசு
தற்போதைய பகுதிகள் உருசியா
 உக்ரைன்
 கசக்கஸ்தான்
 மல்தோவா
 பெலருஸ்
 உருமேனியா
 உஸ்பெகிஸ்தான்
 துருக்மெனிஸ்தான்
 சியார்சியா
 அசர்பைஜான்
 பல்கேரியா
 சீனா
 போலந்து
a இந்நாடு பொதுவாக மாபெரும் நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது (உளு ஓர்டா).[2]

தங்க நாடோடிக் கூட்டம் என்பது மங்கோலியாவில் தோன்றி பின் துருக்கிய மயமாக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கானரசாகும். இது கிப்சாக் கானரசு என்றும் சூச்சியின் உளூஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாடு 1255இல் படு கானின் மறைவுக்குப் பின் 1359 வரை தழைத்தோங்கியது. இதன் இராணுவமானது இசுலாமைத் தழுவிய உசுபெக் கானின் (1312–1341) காலத்தில் வலிமையுடன் விளங்கியது.

1255இல் படு கானின் (தங்க நாடோடி கூட்டத்தின் நிறுவனர்) இறப்பிற்குப் பிறகு அவரது அரசமரபு ஒரு முழு நூற்றாண்டுக்கு 1359 வரை தழைத்தோங்கியது. நோகை கானின் கிளர்ச்சி 1290களில் ஒரு பகுதி உள்நாட்டு யுத்தத்தை தூண்டிய போதும் அவரது அரசமரபு தழைத்தோங்கியது. நாடோடி கூட்டத்தின் ராணுவ சக்தியானது இஸ்லாமை தழுவிய உஸ்பெக் கானின் (1312–1341) ஆட்சியின்போது உச்சத்தை அடைந்தது. அதன் உச்சத்தின் போது தங்க நாடோடி கூட்டத்தின் பகுதிகளானது பெரும்பாலான கிழக்கு ஐரோப்பா (உரால் மலைகள் முதல் தன்யூப் ஆறு) வரையும் மற்றும் கிழக்கில் சைபீரியாவின் உள்பகுதி வரையிலும் நீண்டு இருந்தது. தெற்கில் தங்க நாடோடி கூட்டத்தின் நிலங்கள் கருங்கடல், காக்கேசிய மலைகள் மற்றும் ஈல்கானரசு என்று அறியப்பட்ட மங்கோலிய அரசமரபின் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு இருந்தது.[5]

1359 முதல் இந்த கானரசு வன்முறை நிறைந்த ஓர் அரசியல் குழப்பத்தை அனுபவித்தது. பின்னர் தோக்தமிசால் (1381–1395) குறுகிய காலத்திற்கு ஒன்றிணைக்கப்பட்டது. எனினும், பின்னர், தைமூரிய பேரரசின் நிறுவனரான தைமூரின் 1396ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு தங்க நாடோடி கூட்டமானது சிறிய தாதர் கானரசுகளாக உடைந்தது. அதன் சக்தி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாடோடிக் கூட்டமானது சக்தியை இழக்க ஆரம்பித்தது. 1466ஆம் வருடத்தில் இது சாதாரணமாக "பெரிய நாடோடி கூட்டம்" என்று அழைக்கப்பட்டது. இதன் பகுதிகளுக்குள் துருக்கிய மொழிகளை முதன்மையாக பேசிய பல்வேறு கானரசுகள் தோன்றின. இந்த உட்குழப்பங்கள் காரணமாக 1480ஆம் ஆண்டு உக்ரா ஆற்று போரின் போது கப்பம் கட்டிய வடக்கு மாநிலமான முஸ்கோவி "தாதர் நுகத்தடியில்" இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. தங்க நாடோடி கூட்டத்தின் கடைசி எஞ்சிய பகுதிகளான கிரிமிய கானரசு மற்றும் கசக் கானரசு ஆகியவை முறையே 1783 மற்றும் 1847 வரை பிழைத்திருந்தன.

பெயர்[தொகு]

தங்க நாடோடிக் கூட்டம் (Golden Horde) எனும் பெயரானது போர்க் காலங்களின்போது மங்கோலியர்கள் வாழ்ந்த கூடாரங்களின் தங்க நிறம் காரணமாக, அல்லது படு கான் அல்லது உஸ்பெக் கான் [6] பயன்படுத்திய உண்மையான தங்கக் கூடாரம் காரணமாக அல்லது கான் கொண்டிருந்த பெரும் செல்வத்தைக் குறிப்பதற்காக இசுலாவிய கப்பம் கட்டுபவர்களால் வழங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. மஞ்சள் நிறத்தை குறிக்கும் மங்கோலிய வார்த்தையான (சரி/சரு) என்பதன் அர்த்தம் பழைய துருக்கிய மற்றும் மங்கோலிய மொழிகளில் "மையம்" என்பதாகும். "ஹோர்ட்" ("horde") என்ற வார்த்தை மங்கோலிய வார்த்தையான ஓர்டுவில் இருந்து வந்திருக்கலாம். அதன் பொருள் அரண்மனை, முகாம் அல்லது தலைமையகம் என்பதாகும். எனவே கோல்டன் ஹோர்ட் ("Golden Horde") என்பது சாதாரணமாக மங்கோலிய சொற்றொடரான "மைய முகாம்" என்பதில் இருந்து வந்திருக்கலாம். [7] எது எப்படி இருந்தாலும் 16ஆம் நூற்றாண்டு வரை உருசிய வரலாற்றாளர்கள் "கோல்டன் ஹோர்ட்" (உருசியம்: Золотая Орда) என்ற வார்த்தையை மங்கோலியப் பேரரசின் தொடர்ச்சியான இந்த குறிப்பிட்ட கானரசைக் குறிக்க உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. 1565இல் இந்த வார்த்தை கசனைப் பற்றிய உருசிய வரலாற்றில் சராயை மையமாகக் கொண்டிருந்த படுவின் உளூஸை (உருசியம்: Улуса Батыя) குறிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.[8][9] சமகால பாரசீக, ஆர்மீனிய மற்றும் முஸ்லிம் பதிவுகளில், மற்றும் 13ஆம் மற்றும் ஆரம்பகால 14ஆம் நூற்றாண்டு பதிவுகளான யுவான் ஷி மற்றும் சமி' அல்-தவரிக் ஆகியவற்றில் இந்த கானரசு "சூச்சியின் உளூஸ்" (மங்கோலியத்தில் "சூச்சியின் சமூகம்"), "டஷ்ட்-இ-கிஃப்சாக்" (கிப்சாக் புல்வெளி) அல்லது "கிப்சாக் கானரசு" மற்றும் "கோமனியா" (குமனியா) என்று அழைக்கப்பட்டது.[10][11]

கிழக்கு அல்லது இடது பகுதி (அல்லது மங்கோலிய பொருளுதவி பெற்ற அலுவல் ரீதியான பாரசீக பதிவுகளில் "இடது கை") உருசிய வரலாறுகளில் நீல நாடோடிக் கூட்டம் எனவும், தைமூரிய பதிவுகளில் (உதாரணமாக ஜாபர்-நாமா) வெள்ளை நாடோடிக் கூட்டம் எனவும் குறிக்கப்பட்டது. மேற்கத்திய அறிஞர்கள் தைமூரிய பதிவுகளில் உள்ள பெயரையே பயன்படுத்தி வந்தனர். இடது பகுதியை வெள்ளை நாடோடிக் கூட்டம் என்று அழைத்து வந்தனர். ஆனால் குவாரசம் வரலாற்றாளரான ஒடேமிஸ் ஹஜ்ஜி (1550) இடது பகுதியை நீல நாடோடிக் கூட்டம் என்று அழைத்தார். கானரசுப் பேரரசின் வாய்மொழி மரபுகளுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் உருசிய வரலாற்றாளர்கள் அழைத்த பெயரே சரி எனப்படுகிறது. கானரசும் அதன் இடது பகுதியை நீல நாடோடிக் கூட்டம் என்று தான் அழைத்தது.[12] கானரசு வெள்ளை நாடோடிக் கூட்டம் என்ற சொற்றொடரை அதன் வலது பகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தியது. வெள்ளை நாடோடிக் கூட்டம் படுவின் வாழ்விடமான சராயில் அமைந்திருந்தது. அதுவே முழு உளூஸையும் கட்டுப்படுத்தியது. ஆனால் தங்க நாடோடிக் கூட்டம், நீல நாடோடிக் கூட்டம் மற்றும் வெள்ளை நாடோடிக் கூட்டம் ஆகிய பெயர்கள் மங்கோலிய காலப் பதிவுகளில் காணப்படுவதில்லை.[13]

மங்கோலிய தோற்றம் (1225–1241)[தொகு]

1227 இல் தனது இறப்பிற்கு முன் செங்கிஸ் கான் மங்கோலிய பேரரசை தனது நான்கு மகன்களுக்கு இடையில் ஒட்டு நிலங்களாக பிரித்தார். எனினும் பேரரசானது பெரிய கானின் தலைமையில் ஒன்றிணைந்து இருந்தது. மூத்த மகன் சூச்சி தான் ஆனால் அவர் செங்கிஸ்கான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இறந்தார். மங்கோலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு கோடி பகுதிகள் சூச்சியின் மூத்த மகன்களான படு கான் மற்றும் ஓர்டா கானுக்கு கொடுக்கப்பட்டது. அந்த நிலங்கள் தற்கால தெற்கு உருசியா மற்றும் கசகஸ்தான் ஆகிய பகுதிகளை கொண்டிருந்தன. படு கான் நீல நாடோடி கூட்டத்திற்கும் மற்றும் ஓர்டா கான் வெள்ளை நாடோடி கூட்டத்திற்கும் தலைவர்கள் ஆயினர்.[14][15] 1235 இல் படு பெரிய தளபதி சுபுதையுடன் இணைந்து மேற்கு நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். ஆரம்பத்தில் பஷ்கிர்களை வென்ற அவர் 1236இல் வோல்கா பல்கேரியா மீதும் படையெடுத்தார். அங்கிருந்து சென்று 1237 இல் தற்கால உக்ரைனின் தெற்கு புல்வெளிகளில் சிலவற்றை கைப்பற்றினார். இதன் காரணமாக உள்ளூர் வாசிகளான குமன்கள் மேற்கு நோக்கி இடம்பெயர வைக்கப்பட்டனர். கிப்சாக் மற்றும் குமன்களுக்கு எதிரான ராணுவ படையெடுப்பானது மெர்கிடுகள் அவர்களிடம் தஞ்சம் அடைந்த போது சூச்சி மற்றும் சுபுதையின் தலைமையில் 1216–1218 காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1239 இல் பெரும்பகுதி குமன்கள் கிரிமிய தீபகற்பத்திலிருந்து துரத்தப்பட்டனர். அப்பகுதிகள் மங்கோலியப் பேரரசின் ஒட்டு நிலங்களாயின.[16] எஞ்சிய கிரிமிய குமன்கள் கிரிமிய மலைகளில் பிழைத்து வாழ்ந்தனர். காலப்போக்கில் அவர்கள் கிரிமியாவில் இருந்த மற்ற குழுக்களுடன் (கிரேக்கர்கள், கோத்கள் மற்றும் மங்கோலியர்கள் உட்பட) இணைந்து கிரிமிய தாதர் மக்களை உருவாக்கினர். பின்னர் படு வடக்கு நோக்கிச் சென்று ருஸ் மீதான மங்கோலியப் படையெடுப்பைத் தொடங்கினார். மூன்று வருடங்களுக்குள் முன்னாள் கீவிய ருஸ் சமஸ்தானங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதே நேரத்தில் அவரது சித்தப்பா மகன்கள் மோங்கே, கதன் மற்றும் குயுக் ஆகியோர் அலனியா நோக்கி முன்னேறினர்.

மொஹி யுத்தத்தில் தங்க நாடோடி கூட்டத்தின் தீர்க்கமான வெற்றி

குமன்கள் தஞ்சமடைந்ததைக் காரணம் காட்டி மங்கோலியர்கள் மேற்கு நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். போலந்து மற்றும் ஹங்கேரியில் லெக்னிகா மற்றும் மொஹி ஆகிய இடங்களில் யுத்தம் நடத்தினர். எனினும் 1241இல் ஒக்தாயி கான் மங்கோலிய தாயகத்தில் இறந்தார். அடுத்த கானை தேர்ந்தெடுக்கும் தேர்வில் கலந்து கொள்வதற்காக வியன்னா முற்றுகையிலிருந்து படு பின்வாங்கினார். பிற்காலத்தில் மங்கோலிய இராணுவங்கள் மேற்கில் இவ்வளவு தூரத்திற்கு பயணம் செய்யவே இல்லை. 1242 இல் ஹங்கேரி வழியாக பின்வாங்கினார். வரும் வழியில் பெஸ்ட் என்ற பகுதியை அழித்துவிட்டு பல்கேரியாவை அடிபணிய வைத்தார்.[17] படு தனது தலைநகரை சராய் நகரில் அமைத்தார். வோல்கா ஆற்றின் கீழ்ப் பகுதியை ஆட்சி செய்தார். கசர்களின் தலைநகரமான அடில், சராய் அமைந்த இடத்தில்தான் அமைந்திருந்தது. இதற்கு சில காலத்திற்கு முன் படு மற்றும் ஓர்டாவின் தம்பியான சிபனுக்கு சொந்த பெரிய உளூஸ் கொடுக்கப்பட்டது. சிபனின் உளூஸ் உரல் மலைகளின் கிழக்கில் ஓப் மற்றும் இர்திஸ் ஆறுகளுக்கு அருகில் அமைந்திருந்தது.

படுவின் அவையில் மொங்கோலிய மொழி மறுக்க முடியாத வகையில் பொதுப்பயன்பாட்டில் இருந்த போதிலும் தங்க நாடோடி கூட்டத்தின் பகுதிகளில் எழுதப்பட்ட சில மங்கோலிய நூல்களே எஞ்சியுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் அந்நேரத்தில் அவர்களிடையே இருந்த எழுத்தறிவின்மையே ஆகும். கிரிகரோவ் என்பவரின் கூற்றுப்படி யர்லிக் அல்லது கான்களின் கட்டளைகள் எனும் நூல் மங்கோலிய மொழியில் எழுதப்பட்டு பிறகு குமன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து இருப்பதாக வயது கணக்கிடப்பட்ட அரேபிய-மங்கோலிய மற்றும் பாரசீக-மங்கோலிய அகராதிகள் மற்றும் எகிப்திய அடிமை சுல்தானகத்தின் உபயோகத்திற்கு உருவாக்கப்பட்ட அகராதிகள் தங்க நாடோடி கூட்டத்துடன் தொடர்பு கொள்ள அத்தகைய நூல்கள் நடைமுறை ரீதியாக தேவைப்பட்டன என்பதை நமக்கு உணர்த்துகின்றன. எகிப்திய அடிமை வம்ச சுல்தான்கள் பெற்றுக்கொண்ட அல்லது எழுதிய கடிதங்கள் மங்கோலிய மொழியிலேயே இருந்திருக்க வேண்டும் என நாம் ஒரு முடிவுக்கு வருவதே ஏற்கத் தகுந்ததாக இருக்கும். [17] எது எப்படி இருந்த போதிலும் மொழி மற்றும் ஏன் சமூக-மொழி ரீதியான தாக்கங்கள் அதிகப்படியாக இருந்தன. மங்கோலியப் பேரரசின் கீழ் ஒன்றிணைந்த மங்கோலிய மற்றும் துருக்கிய மொழிகளில் இருந்து உருசியர்கள் ஆயிரக்கணக்கான வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் பிற முக்கியமான மொழி ரீதியான சிறப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.[18]

பொற்காலம்[தொகு]

பெரிய கான்களின் கீழ் ஆரம்ப கால ஆட்சியாளர்கள் (1241–1259)[தொகு]

1242 இல் படுவை பெரிய கதுன் தோரேசின் மங்கோலியப் பேரரசின் அடுத்த பேரரசரை தேர்வு செய்ய அழைத்தபோது அவர் குறுல்த்தாய்க்கு வர மறுத்தார். இதன் காரணமாக பல வருடங்களுக்கு பெரிய கானை தேர்ந்தெடுப்பது தாமதப்படுத்தப்பட்டது. படு தன் வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவற்றை காரணமாக கூறி பணிவாக அந்த அழைப்பை மறுத்தார். ஆனால் உண்மையில் குயுக் கானாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு படு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனெனில் கிழக்கு ஐரோப்பாவை மங்கோலியர்கள் ஆக்கிரமித்திருந்த போது குயுக் மற்றும், சகதை கானின் பேரனான புரி ஆகியோர் ஒரு வெற்றி விருந்தின்போது படுவுடன் சண்டையிட்டனர். கடைசியில் படு தனது சகோதரர்களை குறுல்த்தாய்க்கு அனுப்பினார். 1246 இல் மங்கோலியர்களின் புதிய பேரரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளாடிமிரின் இரண்டாம் யரோஸ்லாவ், ஹலிச்சின் டானிலோ மற்றும் விளாடிமிரின் ஸ்வியடோஸ்லாவ் விசெவோலோடோவிச் உட்பட அனைத்து மூத்த ருஸ் இளவரசர்களும் படுவின் தலைமையை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மங்கோலிய அவையானது மங்கோலிய எதிர்ப்பு இளவரசர்களை அழித்துவிட்டது. உதாரணமாக 1240 இல் ஒரு மங்கோலிய தூதனை கொன்ற செர்னிகோவின் மைக்கேல் ஆகிய இளவரசர்களை குறிப்பிடலாம்.

படு கான் தங்க நாடோடி கூட்டத்தை நிறுவுதல்.

சிறிது காலத்திற்குப் பிறகு படுவை மரியாதை செலுத்த வருமாறு கூறி குயுக் பல முறை அழைத்தார். 1247 இல் ஆன்ட்ரே மற்றும் அலெக்சாந்தர் நெவ்சுகி ஆகியோரை மங்கோலியாவின் கரகோரத்திற்கு அவர்களது தந்தையின் இறப்பிற்குப் பிறகு படு அனுப்பி வைத்தார். குயுக் ஆன்ட்ரேவை விளாடிமிர் சுஸ்டாலின் பெரிய இளவரசராகவும் மற்றும் அலெக்சாண்டரை கீவின் இளவரசராகவும் நியமித்தார்.[19] 1248 இல் படுவை குயுக் கிழக்கு நோக்கி வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறினார். அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இம்முடிவை படுவின் கைதுக்கு ஒரு முன்னோட்டமாக கருதினர். ஆணைக்குக் கட்டுப்பட்ட படு ஒரு பெரிய ராணுவத்துடன் புறப்பட ஆரம்பித்தார். குயுக் மேற்கு நோக்கி பயணித்த போது டொலுயின் விதவை மற்றும் படுவின் மாற்றாந்தாயின் சகோதரியான சோர்காக்டனி சூச்சியின் குடும்பம் குயுக்கின் இலக்காக இருக்கலாம் என படுவை எச்சரித்தார்.

பயணிக்கும் வழியில் தற்கால சிஞ்சியாங்கில் தனது 42ம் வயதில் குயுக் இறந்தார். சில நவீன வரலாற்று ஆசிரியர்கள் உடல்நலக் குறைவு போன்ற இயற்கையான காரணங்களால் குயுக் இறந்திருக்கலாம் என்று நம்புகிற போதும், [20] குயுக் உண்மையிலேயே மதுப்பழக்கம் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றின் ஒன்று சேர்ந்த தாக்கத்தால் இறந்திருக்கலாம் அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம். ருப்ரக்கின் வில்லியம் மற்றும் ஒரு முஸ்லிம் வரலாற்று ஆசிரியர் ஆகியோர் படு ஏகாதிபத்திய தூதனைக் கொன்றதாகவும் மற்றும் படுவின் சகோதரர்களில் ஒருவர் பெரிய கான் குயுக்கை கொன்றார் எனக் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய கூற்றுக்கள் பிற முதன்மை ஆதாரங்களுடன் ஒத்துப்போகவில்லை. குயுக்கின் விதவையான ஒகுல் கைமிஸ் பிரதிநிதியாக மங்கோலிய பேரரசை ஆண்டார். ஆனால் அவரால் பிற்கால மங்கோலிய ஆட்சியாளர்கள் அவரது குடும்பத்தில் இருந்து வருமாறு செய்ய முடியவில்லை.

இளம் படு கானின் 14ஆம் நூற்றாண்டு சீன வரைபடம்

தங்க நாடோடி கூட்டத்தின் துணையுடன் 1251 இல் மோங்கே பெரிய கானாக பதவிக்கு வந்தார். தன்னை நீக்க தீட்டப்பட்ட ஒரு திட்டத்தை மோங்கே கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பை பயன்படுத்தி புதிய பெரிய கானாக மோங்கே தனது எதிரிகளை கொல்ல ஆரம்பித்தார். இறந்த உயர்குடியினர், அதிகாரிகள் மற்றும் மங்கோலிய தளபதிகளின் எண்ணிக்கை மதிப்பீடு 77 முதல் 300 என கணக்கிடப்பட்டுள்ளது. மோங்கேவுடனான படுவின் நட்பு பேரரசின் ஒற்றுமையை உறுதி செய்தது. மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக படு மாறினார். படு, மோங்கே மற்றும் பிற இளவரச மரபினர் ஆப்கானிஸ்தான் முதல் துருக்கி வரையிலான பகுதிகளை பிரித்து ஆண்டனர்.

கிங் மேக்கர் மற்றும் மூத்த போர்சிசின் குடும்ப ஆணாக படுவின் மரியாதை உச்சத்தில் இருந்த போதும் மோங்கேயின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களை தனது உலகத்தில் சுதந்திரமாக நடமாட படு அனுமதித்தார். 1252–1259 இல் மோங்கே மங்கோலியப் பேரரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தினார். இக்கணக்கெடுப்பில் ஈரான், ஆப்கானிஸ்தான், ஜார்ஜியா, ஆர்மீனியா, உருசியா, நடு ஆசியா மற்றும் வட சீனா ஆகிய பகுதிகளின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. சீனாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பானது 1252 இல் முடிக்கப்பட்டது. ஆனால் தொலைதூர வடமேற்கு பகுதியான நோவ்கோரோடின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது 1258–59 குளிர்காலம் வரை முடிக்கப்படவில்லை. நோவ்கோரோடில் மங்கோலிய கணக்கெடுப்பிற்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அலெக்சாண்டர் நெவ்சுகி நகரத்தை கணக்கெடுப்பு மற்றும் வரிக்கு அடி பணிய வைத்தார்.

பெரிய இளவரசர் இரண்டாம் ஆன்ட்ரே மங்கோலியர்களின் துயர நிலைக்கு ஆறுதலாக இருந்தார். படு நெவ்ருய் தலைமையில் தண்டனை கொடுக்கும் பயணங்களை மேற்கொள்ள வைத்தார். அவர்கள் வந்தபோது ஆன்ட்ரே பிஸ்கோவுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து பின்னர் ஸ்வீடனுக்கு தப்பி ஓடினார். மங்கோலியர்கள் விளாடிமிரை கைப்பற்றினர். அந்த சமஸ்தானத்தை கடுமையாக தண்டித்தனர். லிவோனிய நைட்டுகள் மங்கோலியர்கள் நோவ்கோரோட் மற்றும் பிஸ்கோவுக்கு முன்னேறுவதை தடுத்தனர். அலெக்சாண்டருக்கு சர்தக்குடன் இருந்த நட்பு காரணமாக 1252 இல் படுவால் அலெக்சாண்டர் விளாடிமிரின் பெரிய இளவரசராக (உச்ச உருசிய ஆட்சியாளர்) பதவி அமர்த்தப்பட்டார். 1256 இல் ஆன்ட்ரே சராய்க்கு பயணித்தார். தனது முன்னாள் துரோகத்திற்கு மன்னிப்புக் கோரினார். அவருக்கு கருணை காட்டப்பட்டது.

கரகன்டி பகுதியில் உள்ள சூச்சி கல்லறை

சூச்சி மற்றும் சகதை குடும்பங்களை ஹுலாகுவின் ஈரான் தாக்குதலுக்காக ஹுலாகுவுடன் இணையுமாறு மோங்கே ஆணையிட்டார். பெர்கேயின் தூண்டுதல் அவரது சகோதரர் படுவை ஹுலாகுவின் தாக்குதலை தள்ளிவைக்க கட்டாயப்படுத்தி இருக்கலாம். இதன் காரணமாகவே அங்கு பல வருடங்களுக்கு சூச்சி குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் போனது என்பதை தெரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. படு அல்லது அவரது பின்வந்த இரண்டு ஆட்சியாளர்களின் ஆட்சியின் போது தங்க நாடோடிக் கூட்டம் ஒரு பெரிய சூச்சி இன படையை 1256/57 இல் ஹுலாகுவின் மத்திய கிழக்கு படையெடுப்பில் பங்கேற்க அனுப்பியது.

1256 இல் படு இறந்த பிறகு அவரது மகன் சர்தக்கை மோங்கே நியமித்தார். மங்கோலியாவில் இருந்து பெரிய கானின் அவையில் இருந்து திரும்பிய உடனேயே சர்தக் இறந்தார். சிறிது காலத்திற்கு போரக்சின் கதுன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அவருக்குக் கீழ் குழந்தை உலக்சி ஆட்சி செய்தான். பிறகு படுவின் தம்பி பெர்கே சூச்சி இனத்திற்கு கானாக 1257 இல் நியமிக்கப்பட்டார்.

1257 இல் இளவரசர் குரேம்சா தலைமையில் போனிசியா மற்றும் வோலினியா மீதான மங்கோலிய தாக்குதல்களை டானிலோ முறியடித்தார். மேலும் கீவை கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். ஆரம்பத்தில் அவர்கள் வெற்றியடைந்த போதும் 1259 இல் போரோல்டை தலைமையிலான மங்கோலியப் படை கலிசியா மற்றும் வோலினியாவுக்குள் நுழைந்தது. அவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்தனர்: தனது கோட்டை வலுவூட்டல்களை டானிலோ அழிக்க வேண்டும் அல்லது போரோல்டை பட்டணங்களை தாக்குவார். இந்த எச்சரிக்கையை ஏற்றுக்கொண்ட டானிலோ நகர மதில்களை இடித்தார். 1259 இல் லித்துவேனியா மற்றும் போலந்து மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை பெர்கே ஆரம்பித்தார். ஹங்கேரிய அரசரான நான்காம் பெலா மற்றும் பிரெஞ்சு அரசர் ஒன்பதாம் லூயி அடிபணிய வேண்டும் என முறையே 1259 மற்றும் 1260 இல் பெர்கே கூறினார்.[21] 1259/60 இல் புருசியா மீதான இவரது தாக்குதல் டியூட்டோனிக் வரிசை நைட்டுகளுக்கு பெருத்த சேதத்தை விளைவித்தது.[22] மங்கோலியர்கள் உடன் லித்துவேனியர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் குரியா எனும் குடிமக்கள் குழுவை சென்றடைந்த நேரத்தில் 1260 களில் லித்துவேனியர்கள் மங்கோலியர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டு இருந்திருக்கலாம்.[23]

மங்கோலியர்களின் உள்நாட்டுப் போர் (1260–1280)[தொகு]

1259 இல் மோங்கே கான் இறந்த பிறகு குப்லாய் கான் மற்றும் ஆரிக் போகேவுக்கு இடையில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. இப்போரில் குப்லாயை ஹுலாகுவும் ஆரிக் போகேவை பெர்கேவும் ஆதரித்தனர்.[24] பெர்கே ஆரிக் போகேவின் பெயரில் நாணயங்களையும் அச்சிட்டார்.[25] எனினும் பெர்கே ராணுவ ரீதியாக நடுநிலை வகித்தார். ஆரிக் போகேவின் தோல்விக்குப் பிறகு குப்லாயின் முடிசூட்டலை பெர்கே சுதந்திரமாக ஏற்றுக்கொண்டார்.[26] எனினும் வெள்ளை நாடோடி கூட்டத்தின் சில முக்கிய பிரமுகர்கள் ஆரிக் போகே பக்கம் போருக்காக இணைந்திருந்தனர்.

ஹுலாகுவின் ராணுவத்தில் இணைந்த ஒரு சூச்சி இன இளவரசர் ஹுலாகுவுக்கு எதிராக மாந்திரீகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். பெர்கேவிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு அந்த இளவரசரை ஹுலாகு கொன்றார். அதன் பிறகு மேலும் இரண்டு சூச்சி இன இளவரசர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்தனர். முஸ்லிம் நூல்களின் கூற்றுப்படி ஹுலாகு போரில் கிடைத்த பொருட்களை செங்கிஸ்கான் வகுத்த சட்டங்களின்படி பெர்கேவுடன் பகிர்ந்து கொள்ள மறுத்தார். பெர்கே ஒரு அர்ப்பணிப்புடைய முஸ்லிம் ஆவார். அவர் அப்பாசியக் கலிப் அல்-முஸ்தசிம் உடன் நெருங்கிய உறவில் இருந்தார். ஆனால் கலிப் 1258 இல் ஹுலாகுவால் கொல்லப்பட்டார். சூச்சி இனத்தவர்கள் ஹுலாகுவின் மாநிலம் தங்களை திரான்ஸ் காக்கேசிய பகுதியில் இருந்து வெளியேற்றியதாக நம்பினர்.[27] இந்த நிகழ்வுகள் பெர்கேவின் கோபத்தை அதிகப்படுத்தின. இதன் காரணமாக 1262 இல் தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் இல்கானகத்திற்கு இடையில் போர் மூண்டது.

1262 இல் சுஸ்டாலில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. மங்கோலிய தருகச்சிகள் மற்றும் வரி வசூலிப்பாளர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கடுமையான தண்டனை கொடுக்கும் பயணத்தை மேற்கொள்ள பெர்கே திட்டமிட்டார். ஆனால் அலெக்சான்டர் நெவ்ஸ்கி பெர்கேவிடம் உருசிய மக்களை தண்டிக்க வேண்டாம் என மன்றாடினார். விளாடிமிர்-சுஸ்டால் நகரங்கள் ஒரு பெரும் இழப்பெதிர்காப்பை செலுத்த ஒப்புக்கொண்டன. பெர்கே தனது நடவடிக்கைகளை தளர்த்தினார்.

பெர்கே மற்றும் ஹுலாகுவுக்கு இடையில் அதிகரித்து வந்த பதட்டம் என்பது ஹுலாகுவின் ராணுவத்தில் இருந்த தங்க நாடோடிக் கூட்ட பரிவாரங்களுக்கு வந்த ஒரு எச்சரிக்கை ஆகும். அந்த எச்சரிக்கை ஹுலாகுவிடமிருந்து தப்பிப்பதே அவர்களுக்கு சிறந்த வழி என்பதாகும். ஒரு பரிவாரம் கிப்சாக் புல்வெளிகளுக்கு சென்றது. நெகுதரின் மற்றொரு பரிவாரம் குராசான் பகுதிக்குச் சென்றது. மூன்றாவதாக ஒரு பரிவாரம் அடிமை வம்சத்தால் ஆளப்பட்ட சிரியாவில் தஞ்சமடைந்தது. அங்கு அவர்கள் சுல்தான் பய்பர்சால் (1260–1277) நல்ல முறையில் வரவேற்கப்பட்டனர். ஈரானில் இருந்த எஞ்சிய தங்க நாடோடி கூட்ட ராணுவத்தை ஹுலாகு கடுமையாக தண்டித்தார். பய்பர்சுடன் இணைந்து ஒரு தாக்குதலை நடத்த பெர்கே கோரினார். அடிமை வம்சத்தவர்களுடன் ஒரு கூட்டணியை ஹுலாகுவுக்கு எதிராக ஏற்படுத்தினார். தங்க நாடோடிக் கூட்டம் நோகை கான் தலைமையில் இல்கானகம் மீது படையெடுக்க ஒரு படையை அனுப்பியது. ஆனால் 1262 இல் ஹுலாகு அவர்களை திரும்பிச் செல்ல வைத்தார். இல்கானகம் இனத்தவர்கள் பிறகு டெரக் ஆற்றைக் கடந்தனர். ஆட்கள் இன்றி வெற்றிடமாக இருந்த ஒரு சூச்சி இன முகாமை கைப்பற்றினர். அந்நேரத்தில் நோகை கானின் படைகளால் எதிர்பாராத விதமாக தாக்கப்பட்டனர். அவர்களில் பலர் உறைந்திருந்த டெரக் ஆற்றின் பனிக்கட்டிகள் உடைந்ததால் நீருக்குள் மூழ்கினார்.

1262 இல் டெரக் யுத்தத்தில் தங்க நாடோடிக் கூட்ட ராணுவம் இல்கானகத்தை தோற்கடிக்கிறது. பெரும்பாலான ஹுலாகுவின் வீரர்கள் பின் வாங்கும் போது ஆற்றில் மூழ்கினர்.

முன்னாள் செல்யுக் சுல்தான் இரண்டாம் கைகவுஸ் பைசாந்தியப் பேரரசில் கைது செய்யப்பட்டபோது அவரது தம்பி இரண்டாம் கய்குபத் பெர்கேவிடம் முறையிட்டார். ஒரு எகிப்திய தூதரும் அங்கே கைது செய்யப்பட்டார். பல்கேரிய இராச்சியத்தின் (பெர்கேவுக்கு கப்பம் கட்டியவர்கள்) உதவியுடன் நோகை கான் 1264 இல் பைசாந்திய பேரரசின் மீது படையெடுத்தார். கய்கவுசை விடுதலை செய்ய மைக்கேல் எட்டாம் பலையோலோகோசை நோகை கட்டாயப்படுத்தினார். நாடோடி கூட்டத்திற்கு கப்பம் கட்ட வைத்தார். நோகை அவரது மகள்களில் ஒருவரான யூப்ரோசைன் பலையோலோகினாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வைத்தார். பெர்கே கய்கவுசுக்கு ஒட்டு நிலமாக கிரிமியாவை கொடுத்து ஒரு மங்கோலிய பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள வைத்தார்.

முன்னர் ஆரிக் போகே நடு ஆசியாவை ஆட்சி செய்ய சகதை இன கானாக சகதையின் பேரனான அல்குவை நியமித்தார். சமர்கந்து மற்றும் பொகாராவை ஆரிக் போகே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பொகாராவில் இருந்த முஸ்லிம் பிரமுகர்கள் மற்றும் சூச்சி இனத்தவர்கள் பெர்கேவுக்கு ஆதரவாக இருப்போம் என்று பிரகடனப்படுத்திய போது குவாரசம் பகுதியில் இருந்த தங்க நாடோடி கூட்ட ஒட்டு நிலத்தவர்களை அல்கு தாக்கினார். தங்க நாடோடி கூட்டத்தை தாக்குமாறு ஹுலாகுவுக்கு அல்கு வலியுறுத்தினார். 1252 இல் தனது குடும்பத்தை கொன்றதாக பெர்கே மீது அல்கு குற்றம் சாட்டினார். பொகாராவில் அல்கு மற்றும் ஹுலாகு தங்க நாடோடிக் கூட்டத்தின் எஞ்சியவர்கள் அனைவரையும் கொன்று அவர்களது குடும்பங்களை அடிமைப்படுத்தினர். இதில் பெரிய கான் குப்லாயின் வீரர்கள் மட்டும் எந்த தாக்குதலுக்கும் ஆளாகாமல் தப்பினர்.[28] பெர்கே குப்லாயுடன் இணைந்த பிறகு அல்கு பெர்கே மீது போரை அறிவித்தார். ஒற்றார் மற்றும் குவாரசம் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். குவாரசமின் இடது கரை மீண்டும் கைப்பற்றப்பட்ட போதும் திரான்சோக்சியானா மீதான தனது கட்டுப்பாட்டை பெர்கே இழந்தார். 1264 இல் திபிலீசியைத் தாண்டி ஹுலாகுவின் பின் வந்த அபகாவை தாக்க பெர்கே அணிவகுத்தார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார்.

பெர்கேவுக்கு பின் அடுத்த ஆட்சியாளராக படுவின் பேரனான மெங்கு-திமுரை குப்லாய் பரிந்துரைத்தார்.[29] ஆனால் மெங்கு-திமுர் ரகசியமாக குப்லாய் மற்றும் இல்கானகத்திற்கு எதிராக ஒக்தாயி இன இளவரசர் கய்டுவை ஆதரித்தார். சகதை இன கானான பரக் தோல்வியுற்ற பிறகு மெங்கு-திமுர், கய்டு மற்றும் பரக்கிற்கு இடையில் அண்ணளவாக 1267 இல் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த அமைதி ஒப்பந்தத்தின்படி திரான்சாக்சியானாவின் மூன்றில் ஒரு பகுதி கய்டு மற்றும் மெங்கு-திமுருக்கு கொடுக்கப்பட்டது.[30] 1268 இல் நடு ஆசியாவில் குப்லாய்க்கு ஆதரவாக பணியாற்றிய இளவரசர்களின் ஒரு குழு அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவரது மகன்கள் 2 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களை மெங்கு-திமுரிடம் அக்குழுவினர் அனுப்பினார். குப்லாயின் விருப்பத்திற்குரிய நோமோகனும் அவர்களில் ஒருவர் ஆவார். அவர் பின்னர் கிரிமியாவில் காணப்பட்டார்.[31] மெங்கு-திமுர் ஹுலாகுவின் பின்வந்த அபகாவிடம் சிறிய காலத்திற்கு போராட்டம் நடத்தி இருக்கலாம். ஆனால் பெரிய கான் குப்லாய் அவர்களை ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைத்தார்.[32] பாரசீகத்தில் தனது பங்கை எடுத்துக் கொள்ள மெங்கு-திமுருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. 1271 இல் மெங்கு-திமுருக்கு தெரியாமல் பய்பர்சுடன் கூட்டணி ஏற்படுத்த நோகை தனது விருப்பத்தை தெரிவித்தார். எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் இணைந்து ஈரானை தாக்க அவர்கள் ஒரு முடிவை பரிசோதித்துக் கொண்டு இருந்த போதும் 1270 இல் பரக்கை இல்கான் அபகா தோற்கடித்த போது அவருக்கு மெங்கு-திமுர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.[33]

1267 இல் மெங்கு-திமுர் ஒரு ஜர்லிக்கை வெளியிட்டார். அது ருஸ் மத குருமார்களுக்கு எல்லாவித வரி விதிப்பில் இருந்தும் விலக்கு அளித்தது. கஃபா மற்றும் அசோவ் ஆகிய இடங்களை நடத்தவேண்டிய பிரத்தியேக உரிமைகளை ஜெனோவா மற்றும் வெனிஸ் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்தது. மெங்கு-திமுரின் உறவினர்களில் சிலர் கிறித்தவ மதத்திற்கு அந்நேரத்தில் மாறினர். ருஸ் மக்களின் மத்தியில் குடியமர்ந்தனர். 1271 இல் நோகை பழமைவாத கிறித்தவ பைசாந்திய பேரரசின் மீது படையெடுத்த போதும் கான் தனது தூதர்களை மைக்கேல் எட்டாம் பலையோலோகோசிடம் நட்பு ரீதியான உறவை நீடிக்கச் செய்வதற்காக அனுப்பினார். செருமானிய வணிகர்கள் சுதந்திரமாக ருஸ் பகுதிகளின் வழியே பயணம் செய்ய ருஸ்ஸின் பெரிய இளவரசருக்கு அவர் ஆணையிட்டார். அக்கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது:

இளவரசர் யரோஸ்லாவுக்கு மெங்கு-திமுரின் வார்த்தைகள்: செருமானிய வணிகர்களுக்கு உங்கள் நிலங்களின் வழியே வழி கொடுங்கள். இளவரசர் யரோஸ்லாவில் இருந்து ரிகா மக்களுக்கும், பெரியவர்களுக்கும் மற்றும் இளையவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும்: உங்களுக்கான வழி எங்கள் நிலங்களில் செம்மையாக இருக்கிறது; சண்டை போட வந்தால் எனக்கு தெரிந்ததை அவர்களுக்கு நான் செய்வேன்; ஆனால் வணிகர்களுக்கு பாதை தெளிவாக உள்ளது.[34]

நோவ்கோரோடின் வணிகர்கள் சுஸ்டால் நிலங்களின் வழியே தடையின்றி செல்வதற்கும் இந்த ஆணை வழிவகுத்தது.[35] மெங்கு-திமுர் தனது சபதத்தை காப்பாற்றினார்: 1269 இல் டென்மார்க் நாட்டவர் மற்றும் லிவோனிய நைட்டுகள் நோவ்கோரோட் குடியரசை தாக்கியபோது கானின் பெரிய பஸ்கக் (தருகச்சி) அம்ரகன் மற்றும் பல மங்கோலியர்கள் பெரிய பிரபு யரோஸ்லாவ் அணிவகுத்த உருசிய ராணுவத்திற்கு உதவி புரிந்தனர். இந்த அச்சுறுத்தலால் செருமானியர்கள் மற்றும் டென்மார்க் நாட்டுக்காரர்கள் மிகவும் அடங்கிப் போயினர். மேலும் அவர்கள் மங்கோலியர்களுக்கு பரிசுகளை அனுப்பினர். நர்வா பகுதியை அப்படியே விட்டு விட்டுச் சென்றனர்.[36] மங்கோலிய கானின் அதிகாரம் எல்லா உருசிய சமஸ்தானங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 1274–75 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஸ்மோலென்ஸ்க் மற்றும் விடேப்ஸ்க் உட்பட அனைத்து ருஸ் நகரங்களிலும் எடுக்கப்பட்டது.[37]

இரட்டை கான்கள் (1281–1299)[தொகு]

தங்க நாடோடி கூட்டத்தின் கான் தொடே மோங்கே

1281 இல் மெங்கு-திமுருக்கு பிறகு அவரது சகோதரர் தொடே மோங்கே ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு முஸ்லிம் ஆவார். அவர் குப்லாயுடன் அமைதியை ஏற்படுத்தினர். குப்லாயின் மகன்களை அவரிடம் திருப்பிக் கொடுத்தார். குப்லாயின் உயர்ந்த நிலையை ஏற்றுக் கொண்டார்.[38][39] நோகை மற்றும், ஓர்டா கானின் மகன் மற்றும் வெள்ளை நாடோடி கூட்டத்தின் கானும் ஆகிய கோச்சு ஆகியோர் யுவான் அரசமரபு மற்றும் இல்கானகத்துடன் அமைதியை ஏற்படுத்தினார். அடிமை வம்ச வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி தொடே மோங்கே அடிமை வம்சத்தவர்களுக்கு அவர்களது பொதுவான எதிரியான நம்பிக்கையற்ற இல்கானகத்திற்கு எதிராக போர் புரியும் படி ஒரு கடிதத்தை அனுப்பினார். இதன்மூலம் இல்கான்களால் ஆட்சி செய்யப்பட்ட அசர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளின் மீது அவருக்கு ஒரு ஆர்வம் இருந்திருக்கலாம் என நமக்கு தெரியவருகிறது.

1270களில் நோகை பல்கேரியா[40] மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளை காட்டுமிராண்டித்தனமாக சூறையாடினார்.[41] 1279 இல் நோகை ட்ரஸ்டருக்குள் இரண்டாம் மைக்கேல் அசனை முற்றுகைக்கு உள்ளாக்கினார். 1280 இல் கிளர்ச்சி செய்த பேரரசர் இவைலோவை தூக்கிலிட்டார். 1292 இல் முதலாம் ஜார்ஜ் டெர்டரை பைசாந்திய பேரரசிடம் தஞ்சம் அடையுமாறு செய்தார். 1284 இல் பல்கேரியா மீதான பெரிய படையெடுப்பின்போது சாக்சி மங்கோலிய ஆட்சியின் கீழ் வந்தது. கானின் பெயரில் நாணயங்கள் அச்சிடப்பட்டன.[42] நோகை கானின் விருப்பப்படி ஸ்மிலெட்ஸ் பல்கேரியாவின் பேரரசர் ஆனார். அவரது கூட்டாளிகள் மற்றும் பைசாந்திய நாட்டவருக்கு நோகை உதவி செய்தார். ஸ்மிலெட்ஸின் ஆட்சியே பல்கேரியாவில் மங்கோலிய அதிகாரத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது. அண்ணளவாக 1295 இல் ஒரு உள்ளூர் போயரால் ஸ்மிலெட்ஸ் வெளியேற்றப்பட்ட போது தங்களது சீடரை காப்பாற்ற மங்கோலியர்கள் மேலும் ஒரு படையெடுப்பை நடத்தினர். நோகை செர்பிய அரசர் ஸ்டீஃபன் மிலுடின் மங்கோலிய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளுமாறு செய்தார். அந்த அரசனின் மகனான ஸ்டீஃபன் டெகன்ஸ்கி 1287 இல் பணயக் கைதியாக பிடித்தார். அவரது ஆட்சியின் கீழ் விலாச்கள், இசுலாவியர்கள், ஆலன்கள் மற்றும் துருக்கிய-மங்கோலியர்கள் நவீனகால மோல்டாவியாவில் வாழ்ந்தனர். 1285 இல் தோல்வியடைந்த ஆனால் அழிவை ஏற்படுத்திய ஹங்கேரிய படையெடுப்பிற்குப் பிறகு நோகை, தலபுகா மற்றும் பிற நோயன்கள் தொடே மோங்கேயை ஆட்சியில் இருந்து அகற்றினர். ஏனெனில் அவர் மதகுருமார்கள் மற்றும் சேக்குகளால் சூழப்பட்ட ஒரு சுறுசுறுப்பான கானாக இருக்கவில்லை. தலபுகா புதிய கானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடே மோங்கே அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டார். 1287 இல் தன்னுடைய போலந்து தாக்குதல் தவிர தலபுகாவின் ராணுவம் இல்கானகம் மீது படையெடுக்க தோல்வியுற்ற முயற்சிகளை 1288 மற்றும் 1290 இல் மேற்கொண்டது.

நோகை கானின் வழித்தோன்றல்கள் வாழ்ந்த கீழ் வோல்காவின் பகுதிகள்

அதே நேரத்தில் தங்க நாடோடி கூட்டத்தில் நோகையின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்தது. நோகையால் ஆதரிக்கப்பட்ட பெரஸ்லவ்லின் டிமிட்ரி போன்ற சில ருஸ் இளவரசர்கள் சராயில் இருந்த கானின் அவைக்கு வர மறுத்தனர். அதேநேரத்தில் டிமிட்ரியின் சகோதரர் கோரோடெட்ஸின் ஆன்ட்ரே, தொடே மோங்கேயிடமிருந்து ஆதரவை கோரினார். பெரிய கோமகனின் அரியணைக்கான போராட்டத்தில் டிமிட்ரியை ஆதரிப்பதாக நோகை சபதம் எடுத்தார். இதைப் பற்றி அறிந்த ஆன்ட்ரே விளாடிமிர் மற்றும் நோவ்கோரோட் ஆகிய இடங்களை கோரிய தனது முடிவை கைவிட்டு விட்டு கோரோடெட்ஸுக்கு திரும்பினார். 1285 இல் மீண்டும் போர்சிசின் இளவரசர் தலைமையில் ஒரு மங்கோலிய ராணுவத்தை உருசியாவுக்கு ஆன்ட்ரே வழிநடத்தினார். ஆனால் டிமிட்ரி அவர்களை வெளியேற்றினார். நோகையின் கீழ் நாடோடி கூட்டத்தின் மேற்கு பகுதி மற்றும் அதற்கு கப்பம் கட்டிய பகுதிகள் நடைமுறை ரீதியாக சுதந்திரம் அடைந்தன. சிர்காசியர்களுக்கு தண்டனை கொடுக்கும் பயணத்தின் போது நோகை மீதான கானின் சந்தேகம் அதிகரித்தது. தலபுகா நோகைக்கு சவால் விடுத்தார். ஆனால் நோகை இராணுவப் புரட்சி அரங்கேற்றினார். 1291 இல் தலபுகாவுக்கு பதில் தோக்தாவை பதவியில் அமர்த்தினார். சராயிலிருந்த நோகை முன் தோன்ற மிக்கைல் யரோஸ்லாவிச்சுக்கு செய்தி அனுப்பப்பட்டது. மாஸ்கோவின் டேனியல் வர மறுத்தார். 1293 இல் தோக்தா தனது சகோதரர் டுடவுன் (உருசிய வரலாற்று நூல்களில் டைடென்) தலைமையில் பிடிவாதமாக இருந்த குடிமக்களுக்கு தண்டனை கொடுக்க உருசியா மற்றும் பெலாரசுக்கு ஒரு தண்டனை கொடுக்கும் பயணத்திற்கு ஒரு ராணுவத்தை அனுப்பினார். டுடவுன் 14 பெரிய நகரங்களை சூறையாடினர். கடைசியாக டிமிட்ரியை ராஜினாமா செய்ய வைத்தார்.

நோகை கான் மற்றும் தலபுகாவின் ஐரோப்பிய படையெடுப்புகளுக்கு சூச்சி இனத்திற்கு கப்பம் கட்டிய கலிசிய-வோலினிய இளவரசர்கள் துருப்புகளை அளித்தனர்.

நோகையின் மகள், குப்லாய் கானின் மருமகளான கெல்மிஸின் மகனை திருமணம் செய்து கொண்டார். தங்க நாடோடி கூட்டத்தின் கொங்கிராடு இன தளபதியின் மனைவி தான் இந்த கெல்மிஸ் ஆவார். கெல்மிஸின் குடும்பத்தின் மீது நோகைக்கு கோபம் இருந்தது. ஏனெனில் கெல்மிஸின் புத்த மதத்தை சேர்ந்த மகன் நோகையின் முஸ்லிம் மகளை வெறுத்தான். இக்காரணத்திற்காக கெல்மிஸின் கணவரை தன்னிடம் அனுப்புமாறு நோகை தோக்தாவிற்கு கோரிக்கை விடுத்தார். ருஸ் இளவரசர்கள் மற்றும் அயல்நாட்டு வணிகர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நோகையின் சுதந்திரமான முடிவுகள் கானை அந்நேரத்தில் வெறுப்பேற்றி கொண்டிருந்தன. இதன் காரணமாக தளபதியை அனுப்ப கான் மறுத்தார். நோகை மீது போரை அறிவித்தார். அவர்களுக்கு இடையில் நடந்த முதல் யுத்தத்தில் தோக்தா தோற்றார். முறையான கான் தோக்தா இரண்டாவது முறை முயற்சித்தபோது 1299 இல் டினிபர் ஆற்றுக்கு அருகில் ககம்லிக் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் நோகை கொல்லப்பட்டார். சாக்சி என்ற இடத்தில் மற்றும் தன்யூப் ஆற்றின் ஓரத்தில் இரும்பு வாயிற்கதவு வரை தனது மகனை தோக்தா தயார் நிலையில் வைத்திருந்தார்.[43] சிறிது காலத்திற்கு தன்னையே பல்கேரியாவின் பேரரசராக அறிவித்துக்கொண்ட நோகையின் மகன் சகாவை தோக்தாவின் ஆணையின்படி தியோடர் ஸ்வெடோஸ்லாவ் கொன்றார்.[44]

மெங்கு-திமுரின் இறப்பிற்குப் பிறகு தங்க நாடோடி கூட்டத்தின் ஆட்சியாளர்கள் ஒக்தாயி குடும்ப தலைவரான கய்டுவுக்கு அளித்து வந்த தங்களது ஆதரவை திரும்பப் பெற்றனர். தங்க நாடோடி கூட்டத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த கய்டு வெள்ளை நாடோடி கூட்டத்தின் கானான பயனுக்கு (ஆட்சி. 1299–1304) எதிராக கோபெலெக் என்ற தனது சொந்த வேட்பாளரை நிறுத்தினார்.[45] தோக்தாவிடமிருந்து ராணுவ உதவி பெற்ற பயன், யுவான் அரசமரபு மற்றும் இல்கானகம் ஆகியவற்றிடம் உதவி கோரி கய்டு மற்றும் அவருக்கு இரண்டாம் இடத்தில் இருந்த துவாவின் தலைமையில் உள்ள சகதை கானகத்தின் மீது ஒன்றிணைந்த தாக்குதலை நடத்த முயற்சித்தார். ஆனால் யுவான் அவையால் உடனடி ராணுவ உதவியை செய்ய முடியவில்லை.[46]

பொது அமைதி (1299–1312)[தொகு]

அண்ணளவாக 1300 இல் மங்கோலியப் பேரரசின் பிரிவு, தங்க நாடோடிக் கூட்டம் மஞ்சள் நிறத்தில்

1300 முதல் 1303 வரை கருங்கடலை சுற்றியிருந்த பகுதிகளில் ஒரு கடுமையான வறட்சி ஏற்பட்டது. எஞ்சிய நோகையின் ஆதரவாளர்களை தனது நிலங்களில் வாழ தோக்தா அனுமதித்தார். இல்கான் கசன் மற்றும் அவருக்குப் பின் வந்த ஒல்ஜெய்டு ஆகியவர்களிடம் அசர்பைஜானை திரும்ப கொடுக்குமாறு தோக்தா கோரினார். ஆனால் மறுக்கப்பட்டது. பிறகு இல்கானகத்திற்கு எதிராக எகிப்திடமிருந்து உதவியை தோக்தா கோரினார். கஸ்னாவில் தனது ஆளை தோக்தா ஆட்சியாளர் ஆக்கினார். ஆனால் அந்த ஆட்சியாளர் மக்களால் வெளியேற்றப்பட்டார். 1294 இல் இல்கான் கய்கடுவிற்கு ஒரு அமைதி குழுவை தோக்தா அனுப்பினார். 1318 வரை பெரும்பாலும் எந்தவித இடையூறுமின்றி அமைதி தொடர்ந்தது.[47]

1304 இல் நடு ஆசியா மற்றும் யுவான் அரசமரபுகளின் மங்கோலிய ஆட்சியாளர்களிடமிருந்து வந்த தூதுவர்கள் தோக்தாவிடம் தங்களது பொதுவான அமைதி திட்டத்தைப் பற்றி கூறினர். தோக்தா உடனடியாக யுவன் பேரரசர் டெமுர் ஒல்ஜெய்டுவின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டார். மங்கோலிய கானகங்களில் இருந்த அனைத்து யாம் (தபால் வழித்தடங்கள்) மற்றும் வணிக தொடர்புகள் மீண்டும் திறக்கப்பட்டன. மங்கோலிய கானகங்களில் இருந்த பொதுவான அமைதியை பெரேயஸ்லாவ்லில் இருந்த அவையில் ருஸ் இளவரசர்களுக்கு தோக்தா அறிமுகப்படுத்தினார்.[48] தோக்தாவின் நாணயங்கள் பக்ஸ் பா எழுத்து முறையுடன் மங்கோலிய எழுத்துமுறை மற்றும் பாரசீக எழுத்துக்களை கொண்டிருந்தன. இதன் மூலம் யுவான் அரசமரபின் செல்வாக்கு அதிகரித்து இருந்தது நமக்குத் தெரிய வருகிறது.[49]

1308 இல் கூட பல்கேரிய பேரரசானது மங்கோலியர்களுக்கு துணை அரசாக இருந்தது.[50]

1307 இல் கான் சராயிலிருந்த இத்தாலிய நாட்டவரை கைதுசெய்து கஃபா பகுதியை முற்றுகையிட்டார். தனது குடிமக்களை ஜெனோவா வணிகர்கள் எகிப்திற்கு படைவீரர்களாக அடிமை வணிகத்தில் விற்றுக் கொண்டிருந்ததே தோக்தாவின் மகிழ்ச்சி இன்மைக்கு வெளிப்படையான காரணம் ஆகும்.[51] ஜெனோவாவில் இருந்த இத்தாலியர்கள் ஒரு வருடத்திற்கு எதிர்ப்பை காட்டினர். ஆனால் 1308 இல் நகரத்திற்கு தீயிட்டு, அப்படியே விட்டு விட்டு சென்றனர். இத்தாலியர்கள் மற்றும் தங்க நாடோடி கூட்டத்திற்கு இடையிலான உறவானது தோக்தா இறக்கும்வரை பதட்டத்துடனே இருந்தது.

பைசாந்திய பேரரசரின் நெறிதவறி பிறந்த மகளான மரியத்தை கான் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக நோகையின் தோல்விக்குப் பிறகு பைசாந்திய-மங்கோலிய கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.[52] தோக்தா கிறித்தவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு தகவல் மேற்கு ஐரோப்பாவை சென்றடைந்தது.[53] ஆனால் முஸ்லிம் பார்வையாளர்களுக்கு தோக்தா இன்னும் ஒரு உருவ வழிபாட்டாளராகவே (புத்த மதம் மற்றும் தெங்கிரி மதம்) இருந்தார் மற்றும் அவர் பொதுவாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதரவை கொடுத்தார்.[54]

தோக்தாவின் பிற்கால ஆட்சியில் ட்வேர் மற்றும் மாஸ்கோ இளவரசர்களுக்கு இடையிலான பதட்டமானது வன்முறையாக மாறியது. எல்லா ருஸ் இளவரசர்களையும் ஒரே தரத்தில் வைப்பதற்காக விளாடிமிருக்கு கொடுக்கப்பட்டிருந்த பெரிய சமஸ்தானம் என்ற சிறப்பு நிலையை நீக்க தோக்தா கருதியிருக்கலாம். வடக்கு உருசியாவிற்கு நேரிலேயே செல்ல தோக்தா முடிவெடுத்தார். ஆனால் 1313 இல் வோல்காவை கடக்கும் போது அவர் இறந்தார்.[55]

அரசியல் பரிணாமம் (1312–1359)[தொகு]

1313 இல் அரியணை ஏறிய உஸ்பெக் கான் இஸ்லாமை அரசாங்க மதமாக்கினார். அவர் புத்த மதம் மற்றும் ஷாமன் மதம் ஆகிய மதங்களை உருசியாவில் இருந்த மங்கோலியர்களிடையே தடை செய்தார். இதன் காரணமாக யுவான் கலாச்சாரத்தின் பரவல் பின்னோக்கி சென்றது. தனது மத கொள்கைகள் மற்றும் அரியணைக்கு வருபவர்கள் பற்றிய முடிவுகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூச்சி இன இளவரசர்கள் மற்றும் புத்த மத லாமாக்களை உஸ்பெக் கொன்றார். இதன் மூலம் 1315 இல் வெற்றிகரமாக நாடோடி கூட்டமானது இஸ்லாமிய மயமாக்கப்பட்டது. பெர்கே மற்றும் அவருக்கு முன் இருந்தவர்கள் தொடங்கிய அடிமை வம்சத்தவர்களுடனான கூட்டணியை உஸ்பெக் கான் தொடர்ந்தார். அடிமை வம்ச சுல்தான் மற்றும் கெய்ரோவில் இருந்த அவரது நிழல் கலிப் ஆகியோருடன் உஸ்பெக் நட்பு ரீதியிலான உறவை தொடர்ந்தார். நீண்ட தாமதம் மற்றும் பெரிய விவாதத்திற்குப் பிறகு உஸ்பெக் எகிப்திய சுல்தான் அல்-நசீர் முகமதின் வழி வந்த ஒரு இளவரசியை திருமணம் செய்துகொண்டார்.

தனது தந்தையின் இறப்பிற்கு பழிவாங்குவதற்காக ட்வெரின் டிமிட்ரி, மாஸ்கோவின் யுரியை உஸ்பெக் கானின் ஓர்டோவில் (அரண்மனை) கொல்கிறார்.

ருஸ் பற்றிய மங்கோலிய ஆட்சியாளர்களின் கொள்கையானது தொடர்ந்து கூட்டணிகளை மாற்றுவதன் மூலம் உருசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை பலமற்றதாகவும் மற்றும் பிரித்தும் வைத்திருப்பதாகும். சராயின் உதவியுடன் மிக்கைல் யரோஸ்லாவிச் 1316 இல் நோவ்கோரோடின் யுத்தத்தில் தன் எதிரியை வென்றார். மிக்கைல் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது எதிரியான மாஸ்கோவின் யுரி, உஸ்பெக்கின் நல்லெண்ணத்தை பெற உஸ்பெக்கிற்கு ஆதரவாக இருந்தார். இதன் காரணமாக உஸ்பெக், யுரியை ருஸ் இளவரசர்களின் தலைவராக்கினார். தனது சகோதரி கோன்சக்கை யுரிக்கு மணமுடித்து கொடுத்தார். மூன்று வருடங்களை உஸ்பெக்கின் அவையில் கழித்த பிறகு மங்கோலியர்கள் மற்றும் மோர்ட்வின்கள் அடங்கிய ஒரு ராணுவத்துடன் யுரி திரும்பி வந்தார். ட்வெர் கிராமங்களை சூறையாடிய பிறகு டிசம்பர் 1318 இல் யுரி மிக்கைலால் தோற்கடிக்கப்பட்டார். யுரியின் புது மனைவி மற்றும் மங்கோலிய தளபதி கவ்கடி ஆகியோர் பிடிக்கப்பட்டனர். ட்வெரில் தங்கி இருந்த கோன்சக் கிறித்தவ மதத்திற்கு மாறி தன் பெயரை அகதா என்று மாற்றிக் கொண்டார். பின்னர் இறந்தார். மிக்கைலின் எதிரிகள் உஸ்பெக் கானிடம் உஸ்பெக்கின் சகோதரியை மிக்கைல் விஷம் வைத்துக் கொன்றதாகவும் உஸ்பெக்கின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்வதாகவும் கூறினர். மிக்கைல் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நவம்பர் 22, 1318 இல் மிக்கைல் தூக்கிலிடப்பட்டார்.[56][57] 1322 இல் மிக்கைலின் மகனான டிமிட்ரி தனது தந்தையின் கொலைக்கு பழிவாங்க சராய்க்கு சென்றார். நாடோடி கூட்டத்தின் காரணமாக யுரி ஏராளமான வரியை கையகப்படுத்தி இருப்பதாக கூறினார். விசாரணைக்காக நாடோடி கூட்டத்திற்கு யுரி வரவழைக்கப்பட்டார். ஆனால் அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கும் முன்பே டிமிட்ரியால் யுரி கொல்லப்பட்டார். எட்டு மாதங்களுக்குப் பிறகு தனது குற்றத்திற்காக டிமிட்ரி நாடோடி கூட்டத்தால் தூக்கிலிடப்பட்டார்.

ஆரம்பத்தில் மாஸ்கோவிற்கு அதிகாரம் வழங்க உஸ்பெக் விரும்பவில்லை. 1327 இல் உஸ்பெக்கின் உறவினரான பஸ்ககி செவ்கல் நாடோடி கூட்டத்திலிருந்து ஒரு பெரிய பரிவாரத்துடன் ட்வெருக்கு வந்தார். அவர்கள் ட்வெரின் அலெக்சாண்டர் மிக்கைலோவிச்சின் அரண்மனையில் தங்கினர். செவ்கல் அரியணையை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும், நகரத்திற்கு இஸ்லாம் மதத்தை அறிமுகப்படுத்தப் போவதாகவும் வதந்தி பரவியது. 15 ஆகஸ்ட் 1327 இல் டைவுட்கோ என்ற பெயருடைய ஒரு திருத்தொண்டரிடம் இருந்து ஒரு குதிரையை எடுத்துக்கொள்ள மங்கோலியர்கள் முயற்சித்தனர். அவர் உதவிக்காக கத்தினார். சீற்றமடைந்த ஒரு மக்கள் கூட்டம் தாதர்கள் மேல் தாக்குதல் நடத்தியது. அவர்கள் அனைவரையும் கொன்றது. செவ்கல் மற்றும் அவரது எஞ்சிய காவலர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். இவ்வாறு உஸ்பெக் கான் மாஸ்கோவை முன்னணி உருசிய மாநிலமாக மாற்ற தனது ஆதரவை கொடுக்க ஆரம்பித்தார். உருசியாவின் முதலாம் இவானுக்கு பெரிய இளவரசர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. மற்ற உருசிய அரசுகளிடமிருந்து வரிவசூலிக்கும் உரிமை அவருக்கு கொடுக்கப்பட்டது. ட்வெரை தண்டிக்க 50,000 வீரர்கள் அடங்கிய ஒரு ராணுவத்தை இவான் தலைமையில் கான் அனுப்பினார். 1335 இல் அலெக்சாண்டருக்கு கருணை காட்டப்பட்டது. ஆனால் அக்டோபர் 29, 1339 இல் கானின் ஆணைப்படி அலெக்ஸாண்டரும் அவரது மகன் ஃபியோடெரும் சராயில் தங்கியிருக்க வேண்டும் என மாஸ்கோ கோரியது.

உஸ்பெக் கானின் தலைமையின் கீழ் தங்க நாடோடி கூட்டத்தின் நிலப்பகுதிகள்.

மொத்தமாக 300,000 வீரர்களுக்கு மேல் இருந்த ராணுவத்தை கொண்டிருந்த உஸ்பெக் தொடர்ந்து திராஸ் பகுதி மேல் ஓட்டங்களை நடத்தினார். இதற்கு 1319 இல் தொடங்கிய பைசாந்தியம் மற்றும் செர்பியாவிற்கு எதிரான பல்கேரியாவின் யுத்தமும் ஒரு பகுதி காரணமாகும். 1320 மற்றும் 1341 க்கு இடையில் ஆன்ட்ரோனிகோஸ் இரண்டாம் பலையோலோகோஸ் மற்றும் ஆன்ட்ரோனிகோஸ் மூன்றாம் பலையோலோகோஸ் ஆகியவர்களின் தலைமையிலான பைசாந்தியப் பேரரசு தங்க நாடோடி கூட்டத்தால் ஓட்டத்திற்கு உள்ளானது. பைசாந்திய துறைமுகமான விசினா மகரியா ஆக்கிரமிக்கப்படும் வரை இந்த ஓட்டங்கள் தொடர்ந்தன. மூன்றாம் ஆன்ட்ரோனிகோசின் நெறிதவறி பிறந்த மகளை உஸ்பெக் திருமணம் செய்து கொண்டதாகவும் சில வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. அந்த மகள் பயலுன் என்ற பெயரை தனக்கு வைத்துக் கொண்டார். நாடோடி கூட்டத்திற்கும் பைசாந்தியப் பேரரசுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்ட போது அவர் மீண்டும் பைசாந்தியப் பேரரசுக்கே தப்பி ஓடினார். இதற்கு தான் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படாலாம் என்று அவர் பயந்ததும் ஒரு வெளிப்படையான காரணம் ஆகும்.[58][59] உஸ்பெக்கின் ராணுவம் திராஸ் பகுதியை 1324 இல் நாற்பது நாட்களுக்கும், 1337 இல் பதினைந்து நாட்களுக்கும் சூறையாடியது. 300,000 பேரை கைதிகளாக கொண்டு சென்றது. எனினும் 1330 இல் செர்பியாவை மீண்டும் மங்கோலிய அதிகாரத்திற்குள் கொண்டுவர முயன்ற உஸ்பெக்கின் முயற்சி தோல்வியில் முடிந்தது.[60] 1330 இல் உஸ்பெக்கால் ஆதரிக்கப்பட்ட வல்லச்சியாவின் முதலாம் பசரப் ஹங்கேரிய அரசிடமிருந்து ஒரு சுதந்திர மாநிலமாக வல்லச்சியா ஆனதாக அறிவித்தார்.[50]

ஜெனோவா மக்களை கிரிமியாவில் வாழ தனது பதவியேற்பிற்கு பிறகு உஸ்பெக் அனுமதியளித்தார். ஆனால் நகரத்தில் இருந்த முஸ்லிம்களை கிறித்தவர்கள் எதிர்த்தபோது 1322 இல் சுடாக்கில் இருந்த ஜெனோவா மக்களின் புறக்காவல் மையத்தை மங்கோலியர்கள் நீக்கினர். [61] மற்ற பட்டணங்களில் இருந்த ஜெனோவா வணிகர்கள் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. அப்பகுதியில் அழிக்கப்பட்ட உரோமானிய கத்தோலிக்க தேவாலயங்களை சீரமைக்குமாறு உஸ்பெக்கிடம் போப் ஆண்டவர் இருபத்தி இரண்டாம் யோவான் கோரிக்கை விடுத்தார். இவ்வாறாக 1339 இல் கான் ஜெனோவா மக்களுடன் புதிய வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். காஃபாவில் இருந்த மதில்களை மீண்டும் எழுப்ப அனுமதி அளித்தார். 1332 இல் உஸ்பெக் வெனிஸ் மக்கள் உருசியாவின் டான் ஆற்றங்கரையில் டனைஸ் என்ற இடத்தில் காலனியை ஏற்படுத்த அனுமதி அளித்தார். 1314 இல் பிரான்சிஸ்கன்கள் மதமாற்றம் செய்ய ஒரு ஆணையை உஸ்பெக் புதுப்பித்து வெளியிட்டார். இந்த ஆணை மெங்கு-திமுரால் முதன் முதலில் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது.

அபு சயித் தலைமையிலான இல்கானகம் மீது தங்க நாடோடிக் கூட்டம் 1318, 1324, மற்றும் 1335 ஆகிய ஆண்டுகளில் படையெடுத்தது. அபு சயிதை தாக்க உஸ்பெக்கின் கூட்டாளியான அல்-நசிர் மறுத்தார். ஏனெனில் இல்கானும் அடிமை வம்ச சுல்தானும் 1323 இல் ஒரு அமைதி ஒப்பந்தத்தை தங்களுக்குள் ஏற்படுத்தி இருந்தனர். 1326 இல் உஸ்பெக் பெரிய கானின் பேரரசுடன் நட்புரீதியான உறவை மீண்டும் ஏற்படுத்தினார். அதன் பிறகு அவருக்கு பொருட்களை அனுப்ப ஆரம்பித்தார். [62] 1339 முதல் ஒவ்வொரு வருடத்திற்கும் 24,000 டிங் யுவான் காகிதப் பணத்தை சீனாவில் இருந்த சூச்சி இன ஒட்டு நிலங்களிலிருந்து உஸ்பெக் பெற்றார். [63] அபு சயிதின் இறப்பிற்குப் பிறகு இல்கானகம் வீழ்ந்தபோது அதன் மூத்த பிரமுகர்கள் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க உஸ்பெக்கை அணுகினர். ஆனால் தனது மூத்த அமீர் குத்லுக் திமுருடனான ஆலோசனைக்குப் பிறகு உஸ்பெக் அதற்கு மறுத்தார்.

1323 இல் லித்துவேனியாவின் பெரிய டியூக் கெடிமினஸ் கீவின் கட்டுப்பாட்டை பெற்றார். தனது சகோதரர் ஃபெடோரை இளவரசராக நியமித்தார். ஆனால் சமஸ்தானத்தின் கப்பமானது தொடர்ந்து கானுக்கு சென்று கொண்டிருந்தது. சில வருடங்களுக்குப் பிறகு ஒரு படையெடுப்பில் ஃபெடோர் தலைமையிலான லித்துவேனியர்கள் கானின் பஸ்கக்கையும் தங்களது பரிவாரங்களில் கொண்டிருந்தனர். [64]

ஐரோவாசியா (Eurasia) வில் இருந்த சில துருக்கிய மக்களிடையே மங்கோலியர்களுக்கு முந்திய காலங்களிலேயே வேரூன்றியிருந்த இஸ்லாம், உஸ்பெக் மற்றும் அவரது பின் வந்த ஜானிபெக்கின் (1342–1357) கீழ் பொதுவான ஏற்பை பெற்றது. எனினும் இஸ்லாமின் ஆதரவாளர்கள் மற்ற நம்பிக்கைகளிடம் சகிப்புத்தன்மையுடன் இருந்தனர். இஸ்லாமை வெற்றிகரமாக பரப்புவதற்காக மங்கோலியர்கள் மசூதி மற்றும் பிற "விரிவான அரண்மனைகளை" கட்டினர். சராய் பிற நாடுகளில் இருந்த வணிகர்களை ஈர்த்தது. அடிமை வம்ச சுல்தானகத்துடன் இருந்த உறவுகள் பலமடைந்ததன் காரணமாக அடிமை வணிகம் தழைத்தோங்கியது. செல்வச் செழிப்பு மற்றும் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை பொதுவாக மக்கள் தொகை பெருக்கத்திற்கு வழிவகுக்கும். சராயிலும் இதுதான் நடந்தது. அப்பகுதியில் வீடுகளின் எண்ணிக்கை அதிகமானது. இது ஒரு பெரிய முஸ்லிம் சுல்தானகத்தின் மையமாக தலைநகரத்தை மாற்றியது.

லித்துவேனியா மற்றும் போலந்துக்கு எதிராக மங்கோலிய ருஸ் கூட்டு ராணுவ பயணங்களை ஜானிபெக் நடத்தினார். 1344 இல் அவரது ராணுவம் கலிசிய-வோலினிய துணை இராணுவத்துடன் போலந்திற்கு எதிராக அணிவகுத்தது. அந்நேரத்தில் வோலினியா லித்துவேனியாவின் பகுதியாக இருந்தது. எனினும் 1349 இல் போலந்து ஹங்கேரிய படையானது கலிசியா-வோலினியவை ஆக்கிரமித்தது. கடைசியாக கலிசியா-வோலினியா ராஜ்யம் வெல்லப்பட்டு போலந்துடன் இணைக்கப்பட்டது. இச்செயல் காரணமாக கலிசிய-வோலினிய ருஸ் மற்றும் தங்க நாடோடி கூட்டத்திற்கு இடையில் இருந்த பேரரசு மற்றும் கப்பம் கட்டும் பகுதி என்ற உறவு முடிந்து போனது.[65]

1340 களில் ஏற்பட்ட கறுப்புச் சாவு தங்க நாடோடி கூட்டத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு பங்களித்த ஒரு முக்கியமான காரணமாகும். ஜானிபெக் தனது தந்தையின் பால்கன் லட்சியங்களை விட்டுவிட்டு லித்துவேனியா மற்றும் போலந்துக்கெதிராக மாஸ்கோவிற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இவர் சகதை கானகத்தின் மீதான சூச்சி இன ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். தப்ரிசை வென்று 1356 இல் அங்கிருந்த சோபனிட் ஆட்சியை முடித்தார். ஜலயிரிட்கள் சரணடைந்ததை ஒப்புக்கொண்ட ஜானிபெக் மங்கோலியப் பேரரசின் மூன்று உளூஸ்களும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக பெருமை பேசினார். போலந்து அரசரான மூன்றாம் மகா கசிமிர் நாடோடி கூட்டத்திடம் அடி பணிந்தார். மேற்கொண்டு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக கப்பம் கட்ட ஒப்புக்கொண்டார்.[full citation needed][66] போலந்துக்கு உதவி புரிவதற்காக ஏழு மங்கோலிய இளவரசர்களை ஜானிபெக் அனுப்பினார்.[67] ஜானிபெக் கொலை செய்யப்பட்ட பிறகு 1357 இல் ஜலயிர் அரசர் சைக் உவைஸிடம் தங்க நாடோடிக் கூட்டம் சீக்கிரமே அசர்பைஜானை இழந்தது.

சரிவு[தொகு]

பெரிய பிரச்சனைகள் (1359–1381)[தொகு]

1380 இல் நடந்த குலிகோவோ யுத்தம்

1359 இல் தனது சகோதரனால் பெர்டிபெக் கொல்லப்பட்டதற்கு பிறகு கானகமானது நீண்ட உட்பகை போருக்குள் மூழ்கியது. சில நேரங்களில் நான்கு கான்கள் வரை அமிர்களால் அங்கீகரிக்கப்படுவதற்கும் மற்றும், சராய், கிரிம் மற்றும் அசக் ஆகிய முக்கிய நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் போட்டியிட்டனர். அவர்களது பெயரளவு ராஜாதிராஜனான யுவான் பேரரசர் தோகன் தெமுர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு,[68] மங்கோலியா மற்றும் சீனாவிடம் இருந்த தங்களது தொடர்பை தங்க நாடோடிக் கூட்டம் இழந்தது.[69] பிற்கால 1370 கள் வரை வெள்ளை நாடோடி கூட்டத்தின் ஓர்டா மற்றும் துகா-திமுரின் வழித்தோன்றல்கள் பொதுவாக பிரச்சனையின்றி தங்களது ஆட்சியை தொடர்ந்தனர். வெள்ளை நாடோடி கூட்டத்தின் உருஸ் கான் சராயை கைப்பற்றினார். 1375 இல் குவாரசம் முதல் டெஷ்ட்-இ-கிப்சாக் வரை இருந்த பெரும்பாலான பகுதிகளை ஒன்றிணைத்தார்.

1380 களின்போது சய்பனிட்கள், முஸ்கோவிட்கள் மற்றும் கஷன் சமஸ்தானம் ஆகியவை கானின் அதிகாரத்திலிருந்து பிரிந்து சுதந்திரமாக இருக்க முயற்சித்தன. லித்துவேனியாவின் பெரிய டுச்சி இந்த சூழ்நிலையில் இருந்து லாபம் பெற்றார். தங்க நாடோடிக் கூட்டத்தின் நிலப்பகுதிக்குள் தனது முந்தைய எந்தவொரு போர் பயணங்களிலும் இல்லாத அளவிற்கு நீண்ட தூரத்திற்கு வந்தார். அண்ணளவாக 1362 இல் பெரிய டியூக் அல்கிர்தஸ், முராத் கானின் படைகளை நீலநீர் யுத்தத்தின்போது தோற்கடித்தார்.

மேற்கு பான்டிக் புல்வெளியில் தாதர் தளபதியும் கிங்மேக்கருமான மமை உருசியாவின் மீதான தாதர் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்ட முயன்றார். 1380 இல் அவரது ராணுவம் பெரிய இளவரசர் டிமிட்ரி டோன்ஸ்கோயிடம் குலிகோவோ யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டது. இது அவர்களுக்கு எதிராக டோன்ஸ்கோயின் இரண்டாவது தொடர் வெற்றி ஆகும். இரண்டாவது மாஸ்கோ படையெடுப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த மமைக்கு கிழக்கில் இருந்து ஒரு பெரிய சவால் காத்திருந்தது. 1379 இல் உருஸ் கானின் உறவினரான தோக்தமிசு, தைமூரின் உதவியுடன் வெள்ளை நாடோடி கூட்டத்தின் தலைவர் பதவியைப் பெற்றார். தோக்தமிசு பிறகு மமையை தோற்கடித்து நீல நாடோடி கூட்டத்தின் நிலப்பகுதிகளை தனது பகுதிகளுடன் இணைத்துக் கொண்டார். 1381 இல் தங்க நாடோடிக் கூட்டத்தை சக்தி வாய்ந்த அரசாக சில காலத்திற்கு மீண்டும் நிலை நிறுத்தினார்.

சிறிது காலத்திற்கு ஒற்றுமை (1381–1419)[தொகு]

தோக்தமிசு மாஸ்கோவை முற்றுகையிடுதல்.

மமையை தோற்கடித்த பிறகு தோக்தமிசு உருசியா மீதான தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆதிக்கத்தை 1382 இல் உருசிய நிலங்களை தாக்கியதன் மூலம் நிலை நிறுத்தினார். ஆகஸ்டு 23 இல் அவர் மாஸ்கோவை முற்றுகையிட்டார். ஆனால் மாஸ்கோ உருசிய வரலாற்றில் முதன் முதலில் சுடுகலன்களை உபயோகப்படுத்திதன் மூலம் அவரது தாக்குதலை முறியடித்தது.[70] ஆகஸ்ட் 26 இல் தோக்தமிசின் படையில் இருந்த தோக்தமிசின் ஆதரவாளர் சுஸ்டாலின் டிமிட்ரியின் இரண்டு மகன்கள், டியூக்குகளான சுஸ்டாலின் வாசிலி மற்றும் நிஸ்னி நோவ்கோரோடின் செம்யோன் ஆகியோர் மாஸ்கோவினரிடம் நகர வாயில் கதவுகளை திறக்குமாறும் தங்களது படைகள் நகரத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்று வாக்குறுதியும் கொடுத்தனர்.[71] இது தோக்தமிசின் படைகளுக்கு திடீர் தாக்குதல் நடத்தி மாஸ்கோவை அழித்து 24,000 மக்களை கொல்ல வாய்ப்பாக அமைந்தது.[72] அடுத்த வருடம் போல்டவா என்ற இடத்தில் லித்துவேனியா ராணுவத்தை தோக்தமிசு நொறுக்கினார்.[73] லித்துவேனியாவின் பெரிய டியூக்கும் போலந்தின் அரசருமான விலாடிஸ்லாவ் இரண்டாம் ஜகியெல்லோ, தோக்தமிசின் அதிகாரத்தை ஒப்புக்கொண்டார். ஒரு ருஸ் நிலப்பகுதியை தனக்கு பெற்றதன் மூலம் பதிலுக்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டார்.[74] மேலும் ஒரு நூற்றாண்டுக்கு உருசியா தாதர் நுகத்தடியின் கீழ் தள்ளப்பட்டது.

தனது வெற்றிகளால் குதூகலமடைந்த தோக்தமிசு அசர்பைஜான், குவாரசம், மற்றும் திரான்சாக்சியானா, தைமூரின் பேரரசின் பகுதிகள் ஆகியவற்றின் மீது படையெடுத்தார் மற்றும் தைமூர் தோக்தமிசுக்கு எதிராகப் போரை அறிவித்தார். 1395–1396 இல் தைமூர் தோக்தமிசின் ராணுவத்தை அழிவிற்கு உட்படுத்தினார், அவரது தலைநகரத்தை அழித்தார், கிரிமிய வணிக மையங்களைச் சூறையாடினர், மற்றும் மிகத் திறமை வாய்ந்த கைவினைஞர்களைத் தனது சொந்த தலைநகரமான சமர்கந்திற்கு நாடு கடத்தினார்.

தோக்தமிசு தப்பித்து ஓடிய போது உருஸ் கானின் பேரனான தெமுர் குத்லுக் கானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயிரிஜக், வெள்ளை நாடோடி கூட்டத்தின் தலைவராக தைமூரால் நியமிக்கப்பட்டார்.[75] தெமுர் குத்லுக்கின் தலைமை அமிரான எடிகு தான் தங்க நாடோடி கூட்டத்தின் உண்மையான ஆட்சியாளர் ஆவார்.

எமிர் தைமூர் மற்றும் அவரது படைகள் தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் தோக்தமிசுக்கு எதிராக முன்னேறுகின்றன.

தோக்தமிசு லித்துவேனியாவின் பெரிய டுச்சிக்கு தப்பித்து ஓடினார். நாடோடி கூட்டத்தின் மீதான தனது அதிகாரத்தை திரும்ப பெறுவதற்காக வைடவுடஸிடம் உதவி கோரினார். உதவிக்குப் பதிலாக உருசிய நிலங்கள் மீதான தனது மலாட்சியை கொடுப்பதாக கூறினார். 1399 இல் தோக்தமிசு மற்றும் வைடவுடஸை, வோர்ஸ்க்லா ஆற்று யுத்தத்தில் எடிகு தோற்கடித்தார். தைமூரால் அழிக்கப்பட்ட வணிக வழிகள் அதிலிருந்து மீளவில்லை. 1405 இல் தோக்தமிசு இறந்தார். அவரது மகன் ஜலால் அல்-தின் லித்துவேனியாவிற்கு தப்பி ஓடினார். லித்துவேனியாவில் இருந்த போது தோக்தமிசின் மகன் டியூட்டோனிக் வரிசைக்கு எதிராக க்ருன்வால்ட் யுத்தத்தில் போர் புரிந்தார்.

1408 இல் கானின் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்ளுமாறு மாஸ்கோவின் பெரிய இளவரசரை எடிகு கட்டாயப்படுத்தினார். தாதர் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அடிமையாக விற்பதை மனித சக்தி மற்றும் தங்க நாடோடிக் கூட்ட ராணுவத்தின் பெருமைக்கு குந்தகமாக கருதிய எடிகு மற்றும் அவரது கைப்பாவை கான், ஒரு குறுல்த்தாயில் அடிமை வணிகத்தை தடை செய்தனர். செங்கிஸ் இன இளவரசர்களின் சில கிளர்ச்சிகள் நடந்த போதும் எடிகு 1410 வரை நாடோடி கூட்டத்தை ஒன்றிணைத்து வைத்திருந்தார். 1410 இல் அவர் நடு ஆசியாவிற்கு வெளியேற்றப்பட்டார்.

எடிகு இல்லாத சமயத்தில் ஜலால் அல்-தின் லித்துவேனியாவில் இருந்து திரும்பி சில காலத்திற்கு அரியணையில் இருந்தார். நாடோடி கூட்டத்தில் இருந்து திரும்பிய எடிகு தனது ஓர்டோவை கிரிமியாவில் அமைத்தார். 1419 இல் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை எடிகு தோக்தமிசின் மகன்களுக்குச் சவாலாக இருந்தார்.

சிதறுதல் (1420–1480)[தொகு]

1419 க்குப் பிறகு ஒலுக் மோக்சம்மத் தங்க நாடோடி கூட்டத்தின் கான் ஆனார். ஆனால் தோக்தமிசின் மற்றொரு மகனான கெபக் ஆட்சி செய்த வோல்கவின் கீழ்ப்பகுதி ஆற்றங்கரைகளில் இவரது அதிகாரம் சிறிதளவே இருந்தது. 1421 இல் உஸ்பெக்குகளின் கானான பரக், கான் பதவிக்கு போட்டியிட்ட தவ்லத் பெர்டி மற்றும் கெபக்கை தோற்கடித்தார். 1427 இல் தவ்லத் பெர்டி கொல்லப்பட்டார். ஒலுக் மோக்சம்மத் மறுபடியும் அரியணையில் ஏறினார். லித்துவேனிய ஆட்சியாளரான சுவிட்ரிகைலா ஒலுக் மோக்சம்மத்தின் எதிரியான முதலாம் சயீத் அகமதை ஆதரித்தார். 1433 இல் முதலாம் சயீத் அகமது தங்க நாடோடி கூட்டத்தின் அரியணைக்கு வந்தார். கசனின் கானகத்தை உருவாக்கிய மற்றும் மாஸ்கோவை கப்பம் கட்ட செய்த ஒலுக் மோக்சம்மத்தை வலுவிழக்கச் செய்ய உருசியாவின் இரண்டாம் வாசிலி, சயீத் அகமதை ஆதரித்தார். லித்துவேனிய உள்நாட்டுப் போரின்போது (1431–1435) சயீத், சுவிட்ரிகைலாவை ஆதரித்தார்.[76]

நாடோடிக் கூட்டம் (பெரிய நாடோடிக் கூட்டம்) பிரிந்த கானகங்களாக சிதறுண்டது:

  1. டையுமன் கானகம் (1468, பின்னர் சிபிரின் கானகம்)
  2. கசனின் கானகம் (1438) – காசிம் கானகம் (1452)
  3. கிரிமிய கானகம் (1441)
  4. நோகை நாடோடிக் கூட்டம்(1440கள்)
  5. கசக் கானகம் (1456)
  6. அஸ்ட்ரகான் கானகம் (1466)

1470 (மற்ற ஆதாரங்களின் படி 1469) ஆம் ஆண்டு கடைசி முக்கிய கான் ஆகிய அகமது மோல்டாவியா, போலந்து ராஜ்ஜியம் மற்றும் லித்துவேனியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தார். 20 ஆகஸ்டின் போது மகா ஸ்டீபனின் தலைமையிலான மோல்டாவிய படைகள் தாதர்களை லிப்னிக் யுத்தத்தில் தோற்கடித்தன.

1474 மற்றும் 1476 இல் அகமது நாடோடி கூட்டத்தை கப்பம் கட்டும் நாடாக உருசியா சார்ந்திருப்பதை மூன்றாம் இவான் அடையாளப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால் படை பலமானது நாடோடி கூட்டத்தின் பக்கம் இல்லை. 1480 இல் மாஸ்கோவிற்கு எதிராக மற்றுமொரு இராணுவப் பயணத்தை அகமது தொடங்கினார். ஆனால் அதில் நாடோடிக் கூட்டம் தோல்வியை சந்தித்தது. கடைசியாக உருசியா நாடோடி கூட்டத்திடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இதன் மூலம் 250 வருடங்களுக்கு மேலான தாதர்-மங்கோலிய கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது. 6 ஜனவரி 1481 இல் டையுமன் இளவரசர் இபக் கான் மற்றும் நோகை இனத்தவர்களால் டோனெட்ஸ் ஆற்றின் வாயிற்பகுதியில் கான் கொல்லப்பட்டார்.

வீழ்ச்சி (1480–1582)[தொகு]

உக்ரா ஆற்றின் பெரிய நிலைப்பாடு, 1480

தங்க நாடோடிக் கூட்டத்தின் எஞ்சிய ராணுவத்தால் போலந்து ராஜ்யம் மற்றும் லித்துவேனியாவின் பெரிய டுச்சி (இது அந்நேரத்தில் பெரும்பாலான உக்ரைனை தன்னகத்தே கொண்டிருந்தது) ஆகியவை தாக்கப்பட்டன. ஜஸ்லவ்ல் என்ற இடத்தில் தோற்கடிக்கப்படும் முன்பு அவர்கள் கிழக்கு போலந்தின் லுப்லின் வரை முன்னேறினர்.[77]

1475 இல் கிரிமிய கானகம் உதுமானியப் பேரரசின் கப்பம் கட்டும் மாநிலமாக மாறியது. பெரிய நாடோடி கூட்டத்தின் எஞ்சிய பகுதிகளை அடிபணிய வைத்து 1502 இல் சராயை முற்றுகையிட்டது. லித்துவேனியாவில் தஞ்சம் கேட்ட பிறகு நாடோடி கூட்டத்தின் கடைசி கான் சேக் அகமது 1504 ஆம் ஆண்டிற்கு சிறிது காலத்திற்குப் பிறகு கவுனஸ் என்ற இடத்தில் உள்ள சிறையில் இறந்தார். மற்ற ஆதாரங்களின் படி 1527 இல் அவர் லித்துவேனிய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.[78]

ஒன்றிணைந்த ருஸ் 1552 இல் கசனின் கானகத்தையும், 1556 இல் அஸ்ட்ரகான் கானகத்தையும் மற்றும் 1582 இல் சிபிரிவின் கானகத்தையும் கைப்பற்றியது. கிரிமிய தாதர்கள் பழிவாங்குவதற்காக தெற்கு உருசியா, உக்ரைன் மற்றும் ஏன் போலந்தை கூட 16 மற்றும் ஆரம்ப 17ஆம் நூற்றாண்டுகளில் தாக்கினர். ஆனால் அவர்களால் உருசியாவை தோற்கடிக்கவோ அல்லது மாஸ்கோவை கைப்பற்றவோ முடியவில்லை. உதுமானிய பாதுகாப்பின் கீழ் கிரிமிய கானகமானது தனது நிலையற்ற தன்மையுடன் ஏப்ரல் 8, 1783 அன்று உருசியாவின் இரண்டாம் கேத்தரின் தன்னுடைய நாட்டுடன் இணைத்துக் கொள்ளும் வரை நீடித்தது. தங்க நாடோடிக் கூட்டத்தின் வழிவந்த மாநிலங்களிலேயே இதுதான் நீண்ட காலம் நீடித்தது.

புவியியல் மற்றும் சமூகம்[தொகு]

செங்கிஸ்கான் சூச்சிக்கு 4 மங்கோலிய மிங்கன்களை நியமித்தார்: சஞ்சியுட் (அல்லது சல்ஜியுட்), கெனிகெஸ், ஊஷின் மற்றும் ஜெவுரெட்.[79] 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சஞ்சியுட், ஒங்கிராட், ஒங்குட் (அர்குன்), கெனிகெஸ், ஜஜிரட், பெசுட், ஒயிரட் மற்றும் ஜெவுரெட் ஆகிய இனத்தைச் சேர்ந்த நோயன்கள் அவையிலும் மற்ற இடங்களிலும் முக்கியமான பதவிகளை வகித்தனர். சூச்சியின் உளூஸின் (தங்க நாடோடிக் கூட்டம்) இடது பகுதியில் ஜலயிர் இனத்தை சேர்ந்த நான்கு மிங்கன்கள் (4,000) இருந்தனர்.

தங்க நாடோடி கூட்டத்தின் மக்கள்தொகையானது பெரும்பாலும் துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்களின் கலவையாக இருந்தது. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமை தழுவினார். மேலும் குறைந்த அளவில் ஃபின்னோ-உக்ரியர்கள், சர்மடோ-சிதியர்கள், ஸ்லாவியர்கள் மற்றும் காக்கேசிய பகுதி மக்கள் அவர்களுடன் இருந்தனர்.[80] நாடோடிக் கூட்டத்தின் பெரும்பாலான மக்கள் துருக்கியர்கள் ஆவர்: கிப்சாக்குகள், குமன்கள், வோல்கா பல்கேரியர்கள், குவாரசமியர்கள் மற்றும் பலர். நாடோடி கூட்டமானது படிப்படியாக துருக்கிய மயமாக்கப்பட்டு தனது மங்கோலிய அடையாளத்தை இழந்தது. அதே நேரத்தில் படுவின் உண்மையான மங்கோலிய வீரர்களின் வழித்தோன்றல்கள் உயர்குடி வகுப்பினருள் ஒருவராக இருந்தனர்.[81] உருசியர்கள் மற்றும் ஐரோப்பியர்களால் அவர்கள் பொதுவாக தாதர்கள் என்று அழைக்கப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டு வரை உருசியர்கள் இந்த பொது பெயரைத்தான் அக்குழுவினரை குறிக்கப் பயன்படுத்தினர். இந்தக் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது இன அல்லது பழங்குடியின பெயர்களால் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். மேலும் பெரும்பாலானவர்கள் தங்களை முஸ்லிம்களாக கருதினர். விவசாய மற்றும் பழங்குடிகள் ஆகிய பெரும்பாலான மக்கள் கிப்சாக் மொழியை பயன்படுத்த ஆரம்பித்தனர். நாடோடிக் கூட்டம் சிதறுண்ட பிறகு கிப்சாக் மொழியானது கிப்சாக் குழுவினரின் பிராந்திய மொழிகளாக வளர்ச்சி அடைந்தது.

படுவின் வழித்தோன்றல்கள் தங்க நாடோடி கூட்டத்தை சராய் படுவிலிருந்தும் பிறகு சராய் பெர்கேவில் இருந்தும் ஆண்டனர். வோல்கா ஆறு மற்றும் கார்பதிய மலைகள் முதல் தன்யூப் ஆற்றின் வாய் வரை பரவியிருந்த பகுதியை அவர்கள் கட்டுப்படுத்தினர். ஓர்டாவின் வழித்தோன்றல்கள் உரால் ஆறு முதல் பால்கசு ஏரி வரை இருந்த பகுதிகளை ஆண்டனர். நோவ்கோரோட், ட்வெர் மற்றும் மாஸ்கோவின் தாதர் பகுதிகளில் சீனர்கள் வாழும் பகுதிகள் இருந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்புகள் பதிவிட்டுள்ளன.

உள் அமைப்பு[தொகு]

சராயில் உள்ள ஒரு அரண்மனையின் பளிங்கு வேலைப்பாடுகளின் துண்டுகள்.

தங்க நாடோடிக் கூட்டத்தின் பிரமுகர்கள் நான்கு மங்கோலிய இனங்களில் இருந்து தோன்றியவர்கள். அந்த இனங்கள் கியாத், மங்குத், சிசிவுத் மற்றும் கொங்கிராடு. அவர்களது தலைவர் கான் ஆவார். அவர் படுவின் வழித்தோன்றல்களில் இருந்து குறுல்த்தாயில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதம மந்திரியும் மங்கோலிய இனத்தை சார்ந்தவர் ஆவார். அவர் "இளவரசர்களின் இளவரசர்" அல்லது பெக்லரே-பெக் என்று அழைக்கப்பட்டார். மந்திரிகள் விசியர்கள் என்று அழைக்கப்பட்டனர். உள்ளூர் ஆளுநர்கள் அல்லது பஸ்கக்குகள் வரி விதிப்பதற்கும் மக்களின் அதிருப்தியை சரி செய்வதற்கும் பொறுப்பு எடுத்துக் கொண்டனர். ஆட்சியாக மக்கள் மற்றும் ராணுவ நிர்வாகங்கள் தனித்தனியானவை அல்ல.

நாடோடி கூட்டமானது ஒரு நிலையான வாழ்க்கை முறை கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டது. நாடோடி கலாச்சாரத்தை வளர்க்கவில்லை. சராயானது ஒரு பெரிய செழிப்பான தலைநகரமாக பரிணாமம் அடைந்தது. 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலைநகரமானது ஆற்று நீரோட்டத்தின் எதிர்திசையில் சராய் பெர்கேவுக்கு மாற்றப்பட்டது. நடுக்கால உலகில் அது பெரிய நகரங்களில் ஒன்றாக 600,000 குடிமக்களுடன் இருந்தது.[82] பிரபல பயணியான இப்னு பதூதா சராயைப் பற்றி "மிகவும் அழகான நகரங்களுள் ஒன்று … முழுவதும் மக்களாலும், அழகான கடைவீதிகளாலும் மற்றும் அகலமான வீதிகளாலும் நிரம்பியுள்ளது", மற்றும் "ஏராளமான சிறிய மசூதிகள்" உடன் பதிமூன்று சபை மசூதிகளையும் கொண்டுள்ளது என விளக்கியுள்ளார். [83] மற்றொரு சமகால ஆதாரம் இந்த நகரத்தை "கடைவீதிகள், பாத்கள் மற்றும் மத நிறுவனங்கள் உள்ள நகரம்" என்று விளக்கியுள்ளது.[83] இந்நகரத்தில் அகழ்வாய்வின் போது ஒரு வான்காட்சிக் கோளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நகரமானது பல்வேறு கவிஞர்களுக்கு உறைவிடமாக இருந்துள்ளது. அக்கவிஞர்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு தெரியவருகிறது. [83][84]

சராயில் மதமாற்ற முயற்சிகளை உருசியர்கள் எடுத்த போதிலும் மங்கோலியர்கள் தங்களது பாரம்பரிய அனிமிச அல்லது ஷாமன் மத நம்பிக்கைகளை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தனர். இது உஸ்பெக் கான் (1312–41) இஸ்லாமை அரசின் மதமாக ஆக்கும் வரை தொடர்ந்தது. செர்னிகோவின் மிக்கைல் மற்றும் ட்வெரின் மிக்கைல் ஆகிய பல கீவிய ருஸ்ஸின் ஆட்சியாளர்கள் சராயில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கான்கள் பொதுவாக சமய சகிப்புத் தன்மையுடனேயே இருந்தனர். உருசிய மரபுவழித் திருச்சபை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கூட பெற்றது.

கப்பம் கட்டியவர்கள் மற்றும் கூட்டாளிகள்[தொகு]

நாடோடி கூட்டம் அதன் குடிமக்களிடம் இருந்து வரியை வசூலித்தது. அக்குடிமக்கள் ருஸ் மக்கள், ஆர்மீனியர்கள், ஜார்ஜியர்கள், சிர்காசியர்கள், ஆலன்கள், கிரிமிய கிரேக்கர்கள், கிரிமிய கோத்கள் மற்றும் பிறர் (பல்கேரியர்கள், விலாச்கள்) ஆவர். வரியை தொடர்ந்து செலுத்தும் வரை கிறித்தவ மக்களின் நிலப்பகுதிகள் ஆர்வத்தை ஈர்க்காத வெளி பகுதிகளாக கருதப்பட்டன. இத்தகைய கப்பம் கட்டும் மாநிலங்கள் நாடோடி கூட்டத்தில் முழுவதுமாக என்றுமே இணைக்கப்படவில்லை. உருசிய ஆட்சியாளர்கள் தாதர் வரியை தங்களுக்காக வசூலிக்கும் உரிமையை ஆரம்பத்திலேயே பெற்றுக்கொண்டனர். ருஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பா மீதான தங்களது கட்டுப்பாட்டை நீடிக்கச் செய்ய தாதர் போர் பிரபுக்கள் அடிக்கடி தண்டனை கொடுக்கும் ஓட்டங்களை தங்களது கப்பம் கட்டும் நாடுகள் மீது நடத்தினர். அதன் உச்ச நிலையில் தங்க நாடோடிக் கூட்டமானது நடு சைபீரியா மற்றும் குவாரசம் முதல் தனுபே மற்றும் நர்வா வரை உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தியது.

நாடோடிக் கூட்டம் மற்றும் உருசிய ஆட்சியாளர்கள் ஆகியோர் டியூட்டோனிக் நைட்டுகள் மற்றும் சிறு மத லித்துவேனியர்களுக்கு எதிராக ஒரு தற்காப்பு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டதாக ஒருவித கருத்தை லெவ் குமிலேவ் முன்வைக்கிறார். மங்கோலிய அவையானது உருசிய இளவரசர்களால் அடிக்கடி விஜயம் செய்யப்பட்டதே அதற்கான ஆதாரம் என அவர் கூறுகிறார். யரோஸ்லாவ்லின் கருப்பு ஃபியோடெர் தன்னுடைய உளூஸை சராய்க்கு அருகில் ஏற்படுத்தி பெருமை பட்டுக் கொண்டார். நோவ்கோரோடின் அலெக்சாந்தர் நெவ்ஸ்கி படுவின் பின்வந்த சர்தக் கானின் சபத சகோதரர் (அல்லது ஆன்டா) ஆவார். பனி யுத்தத்தில் நோவ்கோரோடியர்களுக்கு உதவியாக ஒரு மங்கோலியப் படை செயல்பட்டது. நோவ்கோரோடியர்கள் நாடோடி கூட்டத்திற்கு வரி செலுத்தினர்.

கருங்கடலின் கரையிலிருந்த சோல்டையா, காஃபா மற்றும் அசக் ஆகிய ஜெனோவா வணிக மையங்களுடன் சராய் ஒரு சுறுசுறுப்பான வணிகத்தை செய்து கொண்டிருந்தது. எகிப்திய அடிமை வம்சம் மத்திய தரைக்கடல் பகுதியில் கான்களின் நீண்டகால வணிக பங்குதாரர் மற்றும் கூட்டாளி ஆகும். 1261 இல் கிப்சாக் கானான பெர்கே இல்கானகத்திற்கு எதிராக அடிமை வம்ச சுல்தான் பைபர்சுடன் ஒரு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டார்.[85]

வணிக பாதைகளில் ஒரு மாற்றம்[தொகு]

பாவுமரின் கூற்றுப்படி [86] இயற்கையான வணிக பாதையானது வோல்காவிலிருந்து சராய்க்கு செல்வதே ஆகும். அங்கு இப்பாதை காசுப்பியன் கடலுக்கு வடக்கே, கிழக்கு-மேற்காக இருந்த வணிக பாதையுடன் சந்தித்தது. பிறகு அப்பாதை காசுப்பியன் கடலுக்கு மேற்குப் பகுதியிலிருந்து, பாரசீக அஸர்பைஜானின் தப்ரிசுக்கு செல்லும். அங்கே இப்பாதை காசுப்பியன் கடலுக்கு தெற்கே, பெரிய கிழக்கு-மேற்கு பாதையுடன் சந்திக்கும். 1262 வாக்கில் பெர்கே, இல்கான் ஹுலாகு கானுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டார். இது காசுபியன் கடலின் மேற்கு பகுதியில் பல்வேறு போர்களுக்கு இட்டுச் சென்றது. அப்போர்களில் பொதுவாக நாடோடிக் கூட்டம் தோற்றது. வணிக இடையூறுகள் மற்றும் பாரசீகத்துடனான பிரச்சனைகள் ஆகியவை நாடோடிக் கூட்டம் வடக்கு பாதையின் வழியே வணிக பட்டணங்களை உருவாக்க காரணமாயின. மேலும் அவர்கள் இல்கான்களின் எதிரிகளான எகிப்திய அடிமை வம்சத்தவருடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டனர். நாடோடிக் கூட்டம் மற்றும் எகிப்திற்கு இடையிலான வணிகமானது கிரிமியாவை தளமாகக் கொண்ட ஜெனோவா மக்களால் செய்யப்பட்டது. அடிமை வம்ச ராணுவத்திற்கு அடிமைகளை விற்பது இந்த வணிகத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். 1307 இல் ஜெனோவா மக்களுடன் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் 1323 இல் அடிமை வம்சம் மற்றும் பாரசீகம் ஆகியவற்றுக்கு இடையேயான அமைதி ஆகியவற்றால் வணிகமானது தொய்வடைந்தது. அண்ணளவாக 1336 இல் இல்கானகம் சிதற ஆரம்பித்தது. இதனால் வணிகமானது வடக்குப் பகுதிக்கு நகர ஆரம்பித்தது. 1340 வாக்கில் காசுபியன் கடலுக்கு வடக்கே வணிகப் பாதை இருந்ததை பெகோலோட்டி விளக்கியுள்ளார். 1347 இல் ஜெனோவா கிரிமிய துறைமுகமான காஃபா நாடோடி கூட்டத்தால் முற்றுகையிடப்பட்ட நிகழ்வானது ஐரோப்பாவிற்கு கருப்புச்சாவு பரவுதற்கு காரணமாக அமைந்தது. 1395–96 இல் நாடோடி கூட்டத்தின் வணிக பட்டணங்களை தைமூர் படையெடுத்து வீணாக்கப்பட்டவையாக ஆக்கினார். அவர்களுக்கு என்று ஒரு விவசாய நிலம் இல்லாத காரணத்தால் பல்வேறு நகரங்கள் அழிந்தன மற்றும் வணிகமானது தெற்குப் பகுதிக்கு நகர்ந்தது.

மாகாணங்கள்[தொகு]

மங்கோலியர்கள் பத்தின் அடிப்படையில் தங்களது அமைப்பை அமைத்தனர். இம்முறையை அவர்கள் செங்கிஸ்கானிடமிருந்து பெற்றனர். தங்க நாடோடி கூட்டத்திற்குள் மொத்தம் பத்து அரசியல் பிரிவுகள் இருந்ததாக கூறப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டமானது நீல நாடோடிக் கூட்டம் (Kok Horde) மற்றும் வெள்ளை நாடோடிக் கூட்டம் (Ak Horde) என்று பிரிக்கப்பட்டிருந்தது. பான்டிக்-காஸ்பியன் புல்வெளி, கசரியா மற்றும் வோல்கா பல்கேரியா ஆகிய பகுதிகளை நீல நாடோடிக் கூட்டம் தன்னகத்தே கொண்டிருந்தது. அதே நேரத்தில் தைபுகின் யுர்ட், உளூஸ் சிபன், உளூஸ் தோக்-திமுர் மற்றும் உளூஸ் எசன் நாடோடிக் கூட்டம் ஆகிய பகுதிகள் வெள்ளை நாடோடி கூட்டத்தில் இருந்தன. அப்பகுதிகள் இடது பக்க இளவரசர்களின் நிலங்களாகும்.

கப்பம் கட்டிய பகுதிகள்[தொகு]

  • கிரிமியாவில் இருந்த வெனிஸ் மக்களின் துறைமுக நகரங்கள் (அதன் மையம் கிரிமில் இருந்தது). 1238 இல் மங்கோலியர்கள் அதை வென்ற பிறகு கிரிமியாவில் இருந்த துறைமுக நகரங்கள் சூச்சி இனத்தவருக்கு சுங்க வரி செலுத்தின. மங்கோலியப் பேரரசின் செங்கிஸ் இன இளவரசர்களுக்கு இடையில் லாபங்கள் ஓட்டு நில அமைப்பின் படி பிரித்து கொள்ளப்பட்டன,[87]
  • அசோவின் கரைகள்,
  • சிர்காசியர்களின் நாடு,
  • வல்லச்சியா,
  • ஆலனியா,
  • உருசிய நிலங்கள்.[88]

நாணயங்கள்[தொகு]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zahler, Diane (2013). The Black Death (Revised Edition). Twenty-First Century Books. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4677-0375-8. https://books.google.com/books?id=1w2XAgAAQBAJ&pg=PA70. 
  2. 2.0 2.1 2.2 Kołodziejczyk (2011), ப. 4.
  3. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 12 September 2016. 
  4. Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 498. doi:10.1111/0020-8833.00053. http://www.jstor.org/stable/2600793. பார்த்த நாள்: 12 September 2016. 
  5. "Golden Horde". Encyclopædia Britannica. (2007). “Also called Kipchak Khanate Russian designation for Juchi's Ulus, the western part of the Mongol Empire, which flourished from the mid-13th century to the end of the 14th century. The people of the Golden Horde were mainly a mixture of Turkic and Uralic peoples and Sarmatians & Scythians and, to a lesser extent, Mongols, with the latter generally constituting the aristocracy. Distinguish the Kipchak Khanate from the earlier Cuman-Kipchak confederation in the same region that had previously held sway, before its conquest by the Mongols.” 
  6. Atwood (2004), ப. 201.
  7. Gleason, Abbott (2009). A Companion to Russian History. John Wiley & Sons. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-0842-6. https://books.google.com/books?id=JyN0hlKcfTcC&pg=PA82. 
  8. "рЕПЛХМ гНКНРЮЪ нПДЮ - НЬХАЙЮ РНКЛЮВЮ 16 ЯРНКЕРХЪ (мХК лЮЙЯХМЪ) / оПНГЮ.ПС - МЮЖХНМЮКЭМШИ ЯЕПБЕП ЯНБПЕЛЕММНИ ОПНГШ". Proza.ru. பார்க்கப்பட்ட நாள் 2014-04-11.
  9. Ostrowski, Donald G. (Spring 2007). "Encyclopedia of Mongolia and the Mongol Empire, and: The Mongols and the West, 1221–1410, and: Daily Life in the Mongol Empire, and: The Secret History of the Mongols: A Mongolian Epic Chronicle of the Thirteenth Century (review)". Kritika: Explorations in Russian and Eurasian History (Project MUSE) 8 (2): 431–441. doi:10.1353/kri.2007.0019. 
  10. May, T. (2001). "Khanate of the Golden Horde (Kipchak)". North Georgia College and State University. Archived from the original on December 14, 2006.
  11. Spinei, Victor (2009). The Romanians and the Turkic Nomads North of the Danube Delta from the Tenth to the Mid-Thirteenth Century. BRILL. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-17536-5. https://books.google.com/books?id=2vl538CMBsAC&pg=PA38. 
  12. Atwood (2004), ப. 41.
  13. Allsen (1985), ப. 5-40.
  14. Edward L. Keenan, Encyclopedia Americana article
  15. Grekov, B. D.; Yakubovski, A. Y. (1998) (in Russian). The Golden Horde and its Downfall. Moscow: Bogorodskii Pechatnik. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-8958-9005-9. 
  16. "History of Crimean Khanate". Archived from the original on 2009-01-06.(ஆங்கிலம்)
  17. 17.0 17.1 Sinor, Denis (1999). "The Mongols in the West". Journal of Asian History (Harrassowitz Verlag) 33 (1): 1–44. 
  18. Dmytryshyn, 123[full citation needed]
  19. Martin (2007), ப. 152.
  20. Atwood (2004), ப. 213.
  21. Jackson (2014), ப. 123–124.
  22. Annales Mellicenses. Continuatio Zwetlensis tertia, MGHS, IX, p.644
  23. Jackson (2014), ப. 202.
  24. Kirakos, Istoriia p. 236
  25. Mukhamadiev, A. G. Bulgaro-Tatarskiya monetnaia sistema, p. 50
  26. Rashid al-Din-Jawal al Tawarikhi, (Boyle) p. 256
  27. Jackson, Peter (1995). "The Mongols and Europe". in Abulafia, David. The New Cambridge Medieval History: Volume 5, C.1198-c.1300. Cambridge University Press. பக். 709. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-36289-4. https://books.google.com/books?id=bclfdU_2lesC&pg=PA709. 
  28. Vasily Bartold (2008). Turkestan Down to the Mongol Invasion. ACLS Humanities E-Book. பக். 446. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59740-450-1. https://books.google.com/books?id=zE2QPwAACAAJ&pg=PA446. 
  29. Howorth (1880).
  30. Biran, Michal (2013). Qaidu and the Rise of the Independent Mongol State In Central Asia. Taylor & Francis. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-80044-3. https://books.google.com/books?id=VVffAQAAQBAJ&pg=PA52. 
  31. Man, John (2012). Kublai Khan. Transworld. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4464-8615-3. https://books.google.com/books?id=uV0ikDy7Qm8C&pg=PA229. 
  32. Saunders, J. J. (2001). The History of the Mongol Conquests. University of Pennsylvania Press. பக். 130–132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-1766-7. https://books.google.com/books?id=nFx3OlrBMpQC&pg=PA130. 
  33. Reuven Amitai (2005). Mongols and Mamluks: The Mamluk-Ilkhanid War, 1260–1281. Cambridge University Press. பக். 88–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52290-8. https://books.google.com/books?id=DFO-eV9cQ0sC&pg=PA88. 
  34. Anton Cooper On the Edge of Empire: Novgorod's trade with the Golden Horde, p.19
  35. GVNP, p.13; Gramota#3
  36. The Nikonian Chronicle: From the year 1241 to the year 1381. Kingston Press. 1986. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-940670-02-0. https://books.google.com/books?id=HtFoAAAAMAAJ&pg=PA45. 
  37. Vernadsky, George; Karpovich, Michael (1943). A History of Russia: The Mongols and Russia, by George Vernadsky. Yale University Press. பக். 172. https://books.google.com/books?id=vtFoAAAAMAAJ&pg=PA172. 
  38. Rashid al Din-II Successors (Boyle), p. 897
  39. Allsen (1985), ப. 21.
  40. Curta, Florin (2006). Southeastern Europe in the Middle Ages, 500-1250. Cambridge University Press. பக். 414. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-81539-0. https://books.google.com/books?id=YIAYMNOOe0YC&pg=PA414. 
  41. Howorth (1880), ப. 130.
  42. Byzantino Tatarica, p.209
  43. Baybars al Mansuri-Zubdat al-Fikra, p. 355
  44. Spuler (1943), ப. 78.
  45. Vasily Bartold. Four Studies on Central Asia. Brill. பக். 127. https://books.google.com/books?id=McYUAAAAIAAJ&pg=PA127. 
  46. Grousset, René (1970). The Empire of the Steppes: A History of Central Asia. Rutgers University Press. பக். 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8135-1304-1. https://books.google.com/books?id=CHzGvqRbV_IC&pg=PA335. 
  47. John Andrew Boyle (1968). "Dynastic and Political History of the Il-Khans". in Boyle, J. A.. The Cambridge History of Iran. Cambridge University Press. பக். 374. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-06936-6. https://books.google.com/books?id=16yHq5v3QZAC&pg=PA374. 
  48. G. V. Vernadsky The Mongols and Russia, p. 74
  49. Badarch Nyamaa – The coins of Mongol empire and clan tamgna of khans (XIII–XIV) (Монеты монгольских ханов), Ch. 2.
  50. 50.0 50.1 Jackson (2014), ப. 204.
  51. Spuler (1943), ப. 84.
  52. Vásáry, István (2005). Cumans and Tatars: Oriental Military in the Pre-Ottoman Balkans, 1185–1365. Cambridge University Press. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-139-44408-8. https://books.google.com/books?id=7DJWyg97IggC&pg=PA91. 
  53. Ptolomy of Lucca Annales, p.237
  54. DeWeese, Devin (2010). Islamization and Native Religion in the Golden Horde: Baba TŸkles and Conversion to Islam in Historical and Epic Tradition. Penn State Press. பக். 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-271-04445-3. https://books.google.com/books?id=Ut77eAbMUHoC&pg=PA99. 
  55. Journal of Asiatic Studies, 4th ser. xvii., 115[full citation needed]
  56. Martin (2007), ப. 175.
  57. Fennell, John (1988). "Princely Executions in the Horde 1308–1339". Forschungen zur Osteuropaischen Geschichte 38. 
  58. Mihail-Dimitri Sturdza, Dictionnaire historique et Généalogique des grandes familles de Grèce, d'Albanie et de Constantinople (Great families of Greece, Albania and Constantinople: Historical and genealogical dictionary) (1983), page 373
  59. Saunders (2001).
  60. Jireuek Bulgaria, pp. 293–295
  61. Ibn Battuta-, 2, 414 415
  62. Allsen, Thomas T. (2006). The Royal Hunt in Eurasian History. University of Pennsylvania Press. பக். 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-0107-9. https://books.google.com/books?id=WFls6zdc40QC&pg=PA256. 
  63. Atwood (2004), "Golden Horde".
  64. Rowell, S. C. (2014). Lithuania Ascending. Cambridge University Press. பக். 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-65876-9. https://books.google.com/books?id=X1cHAwAAQBAJ&pg=PA100. 
  65. Zdan, Michael B. (June 1957). "The Dependence of Halych-Volyn' Rus' on the Golden Horde". The Slavonic and East European Review 35 (85). 
  66. CICO-X, pp.189
  67. Jackson (2014), ப. 211.
  68. Encyclopedia of Mongolia and Mongol Empire
  69. Russia and the Golden Horde, by Charles J. Halperin, page 28
  70. (உருசிய மொழியில்) Dmitri Donskoi Epoch பரணிடப்பட்டது 2005-03-12 at the வந்தவழி இயந்திரம்
  71. (உருசிய மொழியில்) History of Moscow settlements – Suchevo பரணிடப்பட்டது 2007-01-27 at the வந்தவழி இயந்திரம்
  72. Great Soviet Encyclopedia, 3rd edition, Entry on "Московское восстание 1382"[தொடர்பிழந்த இணைப்பு]
  73. René Grousset, The Empire of the Steppes: A History of Central Asia, p. 407
  74. ed. Johann Voigt, Codex diplomaticus Prussicus, 6 vols, VI, p. 47
  75. Howorth (1880), ப. 287.
  76. (Lithuanian) Jonas Zinkus, et al., ed (1985–1988). "Ašmenos mūšis". Tarybų Lietuvos enciklopedija. I. Vilnius, Lithuania: Vyriausioji enciklopedijų redakcija. p. 115. LCC 86232954
  77. "Russian Interaction with Foreign Lands". Strangelove.net. Archived from the original on 2009-01-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-11.
  78. Kołodziejczyk (2011), ப. 66.
  79. Blair, Sheila; Art, Nasser D. Khalili Collection of Islamic (1995). جامع التواريخ: Rashid Al-Din's Illustrated History of the World. Nour Foundation. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-727627-3. https://books.google.com/books?id=hJSGQgAACAAJ&pg=PA212. 
  80. Halperin, Charles J. (1987). Russia and the Golden Horde: The Mongol Impact on Medieval Russian History. Indiana University Press. பக். 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-253-20445-5. https://books.google.com/books?id=kPwX2dW-V6sC&pg=PA111. 
  81. Encyclopædia Britannica
  82. Encyclopædia Britannica
  83. 83.0 83.1 83.2 Ravil Bukharaev (2014). Islam in Russia: The Four Seasons. Routledge. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-80800-5. https://books.google.com/books?id=mFK4AwAAQBAJ&pg=PT116. 
  84. Ravil Bukharaev, David Matthews, தொகுப்பாசிரியர் (2013). Historical Anthology of Kazan Tatar Verse. Routledge. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-81465-5. https://books.google.com/books?id=ZZWMAQAAQBAJ&pg=PA15. 
  85. Mantran, Robert (Fossier, Robert, ed.) "A Turkish or Mongolian Islam" in The Cambridge Illustrated History of the Middle Ages: 1250–1520, p. 298
  86. Christoph Baumer, History of Central Asia, volume 3, pp 263-270, 2016. He seems to be following Virgil Ciociltan, The Mongols and the Black Sea Trade, 2012
  87. Jackson, Peter (1978). The Dissolution of the Mongol Empire. Harrassowitz. பக். 186–243. https://books.google.com/books?id=NkkPNQAACAAJ&pg=PA186. 
  88. A. P. Grigorev and O. B. Frolova, Geographicheskoy opisaniye Zolotoy Ordi v encyclopedia al-Kashkandi-Tyurkologicheskyh sbornik, 2001, pp. 262-302
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_நாடோடிக்_கூட்டம்&oldid=3805161" இலிருந்து மீள்விக்கப்பட்டது