உள்ளடக்கத்துக்குச் செல்

உருவ வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கக் கன்றுக்குட்டி மீது மோசசு கோபம் கொள்கிறார், வில்லியம் பிளேக் வரைந்தது, 1799-1800.

உருவ வழிபாடு (Idolatry) என்பது சிலை அல்லது படிமம் போன்ற இயற்பிய வடிவத்தின் ஊடாக இறைவனை வணங்குவது ஆகும்.[1][2][3] கிறித்தவம், இசுலாம், யூத மதம் போன்ற ஆபிரகாமிய மதங்களில் உருவங்களை வழிபடுவது, கடவுள் எனக் கருதிக்கொண்டு கடவுள் அல்லாத ஒன்றை வழிபடுவதைக் குறிக்கும். மேற்குறிப்பிட்ட மதங்களிலும், ஒரு கடவுட் கொள்கையுடைய பிற மதங்களிலும் உருவ வழிபாடு பொய்க் கடவுள்களை வணங்குவது எனக் கருதி அது தடைசெய்யப்பட்டுள்ளது.[4] இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம் போன்ற இறைக் கொள்கையைப் பின்பற்றுவனவும், பின்பற்றாதனவுமான இந்தியச் சமயங்கள் உருவங்களை இறைவனாக அன்றி இறைவனுக்குக் குறியீடாகக் கொள்கின்றன,[5][6] அல்லது அவை ஆன்மீகக் கருத்துக்களின் குறியீடுகள் எனக் கொள்ளப்படுகின்றன,[5][6] அல்லது இறைத்தன்மையை உள்ளடக்கி இருக்கும் ஒன்றாகக் கருதுகின்றன.[7] அத்துடன் அவை ஆன்மீகச் செயற்பாடுகளைக் குவியப்படுத்துவதற்கும் வணங்குவதற்குமான கருவியாகவும் தொழிற்படுகின்றன.[5][8][6] பண்டைய எகிப்து, கிரீசு, உரோம், ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காக்கள் ஆகியவற்றின் மரபுவழிச் சமயங்களில் சிலை அல்லது படிமங்களுக்குப் புனிதத்தன்மை கொடுப்பது பொதுவான வழக்காக இருந்துள்ளது. இவை அவர்களுக்கு வேறுபட்ட பொருள்களையும், முக்கியத்துவத்தையும் கொடுப்பனவாக இருந்தன.[1]. என்னதான் உருவ வழிபாட்டை நியாயப்படுத்தினாலும், நான்கு வேதங்களாகிய ரிக், யசூர், சாமம் மற்றும் அதர்வண வேதங்கள் முதல், பகவத் கீதை வரை உருவ வழிபாட்டை எதிர்க்கிறது.

'நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (சிவவாக்கியம்)"

என்று சிவா வாக்கிய சித்தர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார்

சிலைகளை அல்லது படிமங்களை சமயக் கருத்துக்களின் வெளிப்பாடாகப் பயன்படுத்தல், அவற்றுக்குப் புனிதத்தன்மை கொடுத்தல், அவற்றை வணங்குதல் போன்றவற்றை எதிர்க்கும் கொள்கையை "உருவ எதிர்ப்புக் கொள்கை" (aniconism) என்பர்.[9] அதேவேளை வணக்கத்துக்கான சிலைகள், படிமங்கள் போன்றவற்றை அழிக்கும் கொள்கை "உருவ அழிப்புக் கொள்கை" (iconoclasm) எனப்படும்.[10] இக்கொள்கைகள் நீண்டகாலமாகவே உருவ வணக்கத்தை எதிர்ப்பவர்களுக்கும், உருவ வணக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் இடையே வன்முறைகளுக்குக் காரணமாக இருந்துள்ளன.[11][12] ஆபிரகாமிய மதங்களிடையே உருவ வழிபாடு என்பதன் வரைவிலக்கணம் சர்ச்சைக்கு உரிய ஒன்றாக விளங்கியுள்ளது. சில ஆபிரகாமிய மதத்தவர், கிறித்தவர்கள் சிலுவையைப் பயன்படுத்து முறையும், தேவாலயங்களில் மேரி மாதாவின் சிலையின் பயன்பாடும் உருவ வழிபாட்டின் ஒரு வடிவம் என்கின்றனர்.[13][14]

மதங்களின் வரலாற்றில் உருவ வழிபாடு குறித்த குற்றச்சாட்டுகளும், மறுப்புக்களும் நிரம்பியுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் சிலைகளுக்கும் படிமங்களுக்கும் இறைவன் தொடர்பான குறியீட்டுத் தன்மை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலானவை. மாற்றாக, உருவ வழிபாடு குறித்த விடயம் வேறு வேறான மதங்களுக்கு இடையிலும், ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலும் கருத்து வேறுபாட்டுக்கான மூலமாக உள்ளது. தங்களுடைய மதச் செயற்பாடுகளில் உருவங்கள் பொருள் பொதிந்த அடையாளங்களாக இருப்பதாகக் கொள்ளும் சிலர், அடுத்தவருடைய மதத்தில் உருவவழிபாட்டை ஏற்றுக் கொள்ளாது இருப்பதையும் காணலாம்.[15][16]

வரலாற்றுக்கு முந்திய, தொல்பழங்கால நாகரிகங்கள்

[தொகு]

வீனசு எனக்கருதப்படும் மிகப் பழைய சிற்றுருவங்கள் மேல் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.[17] ஏஜிய கடற் பகுதியில் உள்ள தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் புதிய கற்காலத்துக்குரிய கிமு மூன்றாம், நாலாம் ஆயிரவாண்டுக் காலத்தின் சைக்கிளாடியப் பண்பாட்டுக்குரிய உருவங்கள் கிடைத்துள்ளன. கிமு மூன்றாம் ஆயிரவாண்டுக் காலத்தைச் சேர்ந்த வணங்கும் நிலையில் உள்ள உருவங்கள் சிந்துவெளி நாகரிகக் களங்களில் கிடைத்துள்ளன. இவற்றுக்கு மிகவும் முந்திய, உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் பாறை ஓவியங்கள், சிக்கல்தன்மை கொண்ட உருவங்களை மனிதர்கள் உருவாக்கியிருந்ததைக் காட்டுகின்றன.[18][19] எனினும், இவ்வுருவங்களின் பயன்பாடுகளை விளக்கும் எழுத்துமூல ஆவணங்கள் இல்லாமையால், அவற்றுக்குச் சமய நம்பிக்கைகளுடன் தொடர்புகள் உள்ளனவா என்பதையோ, வேறு பொருள்கள் அல்லது விளையாடுவதற்கான பொருட்கள் போன்ற பிற பயன்கள் உள்ளனவா என்பதையோ தெளிவாகக் கூறமுடியாது உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Moshe Halbertal; Avishai Margalit; Naomi Goldblum (1992). Idolatry. Harvard University Press. pp. 1–8, 85–86, 146–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-44313-6.
  2. DiBernardo, Sabatino (2008). "American Idol(atry): A Religious Profanation". The Journal of Religion and Popular Culture (University of Toronto Press) 19 (1): 1–2. doi:10.3138/jrpc.19.1.001. , Quote: "Idolatry (...) in the first commandment denotes the notion of worship, adoration, or reverence of an image of God."
  3. Poorthuis, Marcel (2007). Iconoclasm and Iconoclash, Chapter 6. Idolatry And The Mirror: Iconoclasm As A Prerequisite For Inter-Human Relations. BRILL Academic. பக். 125–140. doi:10.1163/ej.9789004161955.i-538.53. 
  4. Wendy Doniger (1999). Merriam-Webster's Encyclopedia of World Religions. Merriam-Webster. p. 497. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87779-044-0.
  5. 5.0 5.1 5.2 Jeaneane D Fowler (1996), Hinduism: Beliefs and Practices, Sussex Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-898723-60-8, pages 41–45
  6. 6.0 6.1 6.2 Karel Werner (1995), Love Divine: Studies in Bhakti and Devotional Mysticism, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0700702350, pages 45-46;
    John Cort (2011), Jains in the World, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-979664-9, pages 80–85
  7. Klaus Klostermaier (2010), A Survey of Hinduism, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-7082-4, pages 264–267
  8. Lindsay Jones, ed. (2005). Gale Encyclopedia of Religion. Vol. 11. Thompson Gale. pp. 7493–7495. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865980-5.
  9. Aniconism, Encyclopædia Britannica
  10. Marina Prusac; Kristine Kolrud (2014). Iconoclasm from Antiquity to Modernity. Ashgate. pp. 1–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4094-7033-5.
  11. Willem J. van Asselt; Paul Van Geest; Daniela Muller (2007). Iconoclasm and Iconoclash: Struggle for Religious Identity. BRILL Academic. pp. 8–9, 52–60, . பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-16195-3.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  12. André Wink (1997). Al-Hind the Making of the Indo-Islamic World. BRILL Academic. pp. 317–324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10236-1.
  13. Barbara Roggema (2009). The Legend of Sergius Bahira: Eastern Christian Apologetics and Apocalyptic in Response to Islam. BRILL Academic. pp. 204–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-16730-7.
  14. Erich Kolig (2012). Conservative Islam: A Cultural Anthropology. Rowman & Littlefield. pp. 71 with footnote 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-7424-1.
  15. Janowitz, Naomi (2007). "Good Jews Don't: Historical and Philosophical Constructions of Idolatry". History of Religions (University of Chicago Press) 47 (2/3): 239–252. doi:10.1086/524212. http://escholarship.org/uc/item/9wn4p4b5. பார்த்த நாள்: 2016-11-30. 
  16. Moshe Halbertal; Donniel Hartman (2007). Monotheism and Violence. Vol. Judaism and the Challenges of Modern Life. Bloomsbury Academic. pp. 105–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-9668-3.
  17. "The Cave Art Debate". Smithsonian Magazine. March 2012. பார்க்கப்பட்ட நாள் July 6, 2017.
  18. Richard G. Lesure (2011). Interpreting Ancient Figurines: Context, Comparison, and Prehistoric Art. Cambridge University Press. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-49615-5.
  19. National Museum, Seated Male in Namaskar pose பரணிடப்பட்டது 2014-02-23 at the வந்தவழி இயந்திரம், New Delhi, Government of India;
    S Kalyanaraman (2007), Indus Script Cipher: Hieroglyphs of Indian Linguistic Area, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0982897102, pages 234–236
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவ_வழிபாடு&oldid=3848184" இலிருந்து மீள்விக்கப்பட்டது