கார்பேத்திய மலைகள்

ஆள்கூறுகள்: 47°00′N 25°30′E / 47°N 25.5°E / 47; 25.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ப்பேத்தியம்
Morskie oko o swicie.jpg
போலந்திலுள்ள மேற்கு கார்ப்பேத்தியத்தின் உயர் தாத்ராசு மலையில் மோர்சுக்கை ஒகோ ஏரி
உயர்ந்த இடம்
உச்சிகெர்லஹொவ்ஸ்கி ஸ்டீட்
உயரம்2,655 m (8,711 ft)
பட்டியல்கள்
பரிமாணங்கள்
நீளம்1,700 km (1,100 mi)
பெயரிடுதல்
தாயகப் பெயர்கார்ப்பதி (உரு) கார்பேத்தி (செக், சுலோ, போலிய) Карпати (உக்) Karpaten (செரு) Kárpátok (அங்) Карпати/Karpati (செரு) Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mapcarpat.png" does not exist.
நாடுகள்செக் குடியரசு, போலந்து, ஆஸ்திரியா, சிலோவாக்கியா, அங்கேரி, உக்ரைன், உருமேனியா and செர்பியா
தொடர் ஆள்கூறு47°00′N 25°30′E / 47°N 25.5°E / 47; 25.5
Borders onஆல்ப்சு

கார்ப்பேத்திய மலைகள் (Carpathian Mountains) அல்லது கார்ப்பேத்தியம் (Carpathians, /kɑːrˈpθiənz/) நடுவ, கிழக்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ 1,500 km (932 mi) நீளமான வட்டவில்லையாகவுள்ள மலைத் தொடர் அமைப்பாகும். இவை ஐரோப்பாவில், 1,700 km (1,056 mi) நீளமுள்ள எசுக்காண்டினாவிய மலைகளை அடுத்து) இரண்டாவது-நீளமான மலைத்தொடராகும்.

ஐரோப்பாவின் பெருமளவிலான பழுப்புநிறக் கரடிகள், ஓநாய்கள், ஐரோப்பிய மான்கள், லின்க்ஸ் பூனைகள் இம்மலைத்தொடர்களில், மிகக் கூடுதலாக உருமேனியாவில், வாழ்கின்றன.[1][2][3] தவிரவும் ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு தாவரவினங்கள் இங்குள்ளன.[4] கார்ப்பேத்தியத்திலும் அதன் மலையடிவாரங்களிலும் பல வெந்நீர், கனிம நீரூற்றுகள் உள்ளன; உருமேனியாவில் மட்டுமே ஐரோப்பாவின் மூன்றில் ஒருபங்கு நீரூற்றுகள் உள்ளன.[5][6] இதேபோல உருமேனியாவில், உருசியாவை அடுத்து, இரண்டாவது பெரிய புவிப்பரப்பு கன்னிக் காடுகள் அமைந்துள்ளன; 250,000 எக்டேரில் (65%) பரந்துள்ள இவற்றில் பெரும்பாலானவை கார்ப்பத்தேயத்தில் அமைந்துள்ளன.[7] தெற்கு கார்ப்பேத்தியத்தில் ஐரோப்பாவின் பிளவுபடாத மிகப் பெரிய வனப்பகுதி உள்ளது.[8]

கார்ப்பத்தியம் வடமேற்கில் செக் குடியரசில் (3%) தொடங்கி சிலோவாக்கியா (17%), போலந்து (10%), அங்கேரி (4%), உக்ரைன் (10%) செர்பியா (5%) மற்றும் தென்கிழக்கிலுள்ள உருமேனியா (50%) வரை வட்டவிலையாக அமைந்துள்ளது.[9][10][11][12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Peter Christoph Sürth. "Braunbären (Ursus arctos) in Europa". 15 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. Peter Christoph Sürth. "Wolf (Canis lupus) in Europa". 15 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. Peter Christoph Sürth. "Eurasischer Luchs (Lynx lynx) in Europa". 15 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Carpathian montane conifer forests - Encyclopedia of Earth". www.eoearth.org. 2010-04-04 அன்று மூலம் (மீடியாவிக்கி) பரணிடப்பட்டது. 4 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. Bucureşti, staţiune balneară – o glumă bună? பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம் in Capital, 19 January 2009. Retrieved: 26 April 2011
  6. Ruinele de la Baile Herculane si Borsec nu mai au nimic de oferit in Ziarul Financiar, 5 May 2010. Retrieved: 26 April 2011
  7. Salvaţi pădurile virgine! பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் in Jurnalul Național, 26 October 2011. Retrieved: 31 October 2011
  8. Europe: New Move to Protect Virgin Forests in Global Issues, 30 May 2011. Retrieved 31 October 2011.
  9. [1] "The Carpathians" European Travel Commission, in The Official Travel Portal of Europe, Retrieved 15 November 2016
  10. [2] The Carpathian Project: Carpathian Mountains in Serbia, Institute for Spatial Planning, Faculty of Geography, University of Belgrade (2008), Retrieved: 15 November 2016
  11. [3] பரணிடப்பட்டது 2019-08-01 at the வந்தவழி இயந்திரம் Bulletin of the Natural History Museum, pg. 54, Valuing the geological heritage of Serbia (UDC: 502.171:55(497.11), Aleksandra Maran (2010), Retrieved 15 November 2016
  12. Paun es Durlic (2011). Sacred Language of the Vlach Bread. Balkankult. https://books.google.rs/books?id=6HYogayZpdUC&pg=PA7&lpg=PA7&dq=homolje+carpathian+serbia&source=bl&hl=en#v=onepage&q=homolje%20carpathian%20serbia&f=false. பார்த்த நாள்: 15 November 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பேத்திய_மலைகள்&oldid=3586575" இருந்து மீள்விக்கப்பட்டது