உள்ளடக்கத்துக்குச் செல்

மங்குத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்குத் (மொங்கோலியம்: Мангуд) என்பவர்கள் உருத்-மங்குத் கூட்டமைப்பின் ஒரு மங்கோலிய இனமாவர். இவர்கள் 1485 ஆம் ஆண்டில் நோகை ஹோர்டேவையும், 1785 ஆம் ஆண்டில் புகாரா அமீரகத்தை ஆள மங்கித் வம்சத்தையும் நிறுவினர். இவர்கள் கான் பெயருக்குப் பதிலாக எமிர் என்ற இசுலாமியப் பெயரைப் பயன்படுத்தினர். ஏனெனில் இவர்கள் செங்கிஸ் கானின் வம்சத்தினர் அல்ல, மாறாக இசுலாமின் அடிப்படையில் ஆட்சி செய்தனர். இந்த இனப் பெயரானது மங்கோலிய முன் படைக்குப் பயன்படுத்தப்பட்டது. இவர்களின் வழித்தோன்றல்கள் முன்னாள் மங்கோலிய பேரரசின் பல பகுதிகளில் வாழ்கின்றனர்.

மங்கோலியப் பேரரசில் மங்குத்கள்

[தொகு]

பண்டைய ஆதாரங்களின் படி, இவர்கள் கியாத் மங்கோலியர்களில் இருந்து தோன்றினர். மங்குத்கள் மற்றும் உருத்கள் ஆகியோர் மங்கோலியப் பீடபூமியின் வீரம் மிக்க மக்கள் ஆவர். சில குறிப்பிடத்தக்க மங்குத் வீரர்கள் செங்கிஸ் கானுக்கு (1162-1227) ஆதரவும், ஒரு சிலர் அவருக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். மங்கோலியப் பேரரசு மேற்கு நோக்கி பரவிய போது , இவர்களும் பல மங்கோலிய பழங்குடியினருடன் மேற்கு நோக்கி மத்திய கிழக்கை நோக்கிச் சென்றனர். இவர்கள் கோல்டன் ஹோர்டேயில் நோகை கானுக்கு ஆதரவு அளித்தனர். மேலும் சாராயில் தங்களது சொந்த ஹோர்டேவை அமைத்தனர்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. A.V.Vernadsky - The Mongols and Russia

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்குத்&oldid=3536436" இலிருந்து மீள்விக்கப்பட்டது