ஜமி அல்-தவரிக்
Appearance
ஜமி அல்-தவரிக் என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இது பாரசீகத்தில் மங்கோலிய ஈல்கானரசு ஆட்சியில் உருவாக்கப்பட்டது.[1] இதை ரசீத்தல்தீன் அமாதானி (1247–1318) என்பவர் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதினார். பரந்த அளவிலான நிகழ்வுகளை உள்ளடக்கியதன் காரணமாக இந்நூல் "முதல் உலக வரலாறு" என்று அழைக்கப்படுகிறது.[2] இது மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் தற்போது எஞ்சியிருப்பது சுமார் 400 பக்கங்கள் ஆகும்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ Inal. p. 163.
- ↑ Melville, Charles. "JĀMEʿ AL-TAWĀRIḴ". Encyclopædia Iranica. Columbia University. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
- ↑ சமி அல் தவரிக்: மங்கோலிய வரலாறு (ஆங்கிலம்) இணையத்தில்