நோகை கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோகை (இறப்பு 1299/1300) என்பவர் ஒரு தளபதி மற்றும் தங்க நாடோடிக்  கூட்டத்தை நடைமுறையில் ஆட்சி செய்தவர் ஆவார். இவர் செங்கிஸ் கானின் நான்காம் தலைமுறை வழித்தோன்றல் ஆவார். இவரது தாத்தா, சூச்சியின் ஏழாவது மகனான போவல்/பவுல்/தெவல் கான் ஆவார்.  நோகை கான் இசுலாம் மதத்திற்கு மாறிய ஒரு முக்கியமான நபர் என்று கூறப்படுவதும் உண்டு.

இவர் நேரடியாக தங்க நாடோடிக் கூட்டத்தை ஆட்சி செய்யவில்லை என்றபோதிலும், எந்த கான் இவர் காலத்தில் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு இவர் ஒரு துணை ஆட்சியாளராக செயல்பட்டார். டினீப்பர் ஆற்றுக்கு மேற்கில் இருந்த பகுதிகள் மீது கட்டுப்பாடில்லாத அதிகாரங்களை கொண்டிருந்தார். இவர் உச்சபட்ச அதிகாரங்களை கொண்டிருந்த நேரத்தில் ஐரோப்பாவிலேயே மிகுந்த சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். பலராலும் நாடோடிக் கூட்டத்தின் உண்மையான தலைவன் என்று கருதப்பட்டார். உருசிய நூல்கள் இவருக்கு ஜார் என்ற பட்டத்தை அளித்துள்ளன. கிரீமியாவில் இருந்த பிரான்சிஸ்கன் சமயப்பரப்பாளர்கள் இவரை துணை பேரரசர் என்று பேசினர். [1]

உசாத்துணை[தொகு]

  1. J. J. Saunders, The History of the Mongol Conquests, p. 162.

குறிப்புகள்[தொகு]

  • Saunders, J.J. The History of the Mongol Conquests, 2001
  • Ж.Бор Монгол хийгээд евроазийн дипломат шаштир Боть 2, 2003
  • Howorth, H.H. "History of the Mongols from the 9th to the 19th Century: Part 2. The So-Called Tartars of Russia and Central Asia. Division 1"
  • Vernadsky, G. "Mongols and Russia", Yale University Press, Dec 1953
  • István Vásáry, Cumans and Tatars, Cambridge University Press 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோகை_கான்&oldid=3539584" இலிருந்து மீள்விக்கப்பட்டது