உள்ளடக்கத்துக்குச் செல்

தாதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாதர்கள்
மொத்த மக்கள்தொகை
c. 6,800,000[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 உருசியா (கிரிமியக் குடியரசைச் சேர்க்காமல்)5,319,877
 உஸ்பெகிஸ்தான்477,875
 உக்ரைன் (கிரிமியா உட்பட)319,377
 கசக்கஸ்தான்240,000
 துருக்கி175,500
 துருக்மெனிஸ்தான்36,355
 கிர்கிசுத்தான்28,334
 அசர்பைஜான்25,900
 உருமேனியா24,137
 இசுரேல்15,000
 பெலருஸ்7,300
 பிரான்சு7,000
 லித்துவேனியா6,800-7,200
 சீனா5,000
 கனடா2,850
 எசுத்தோனியா1,981
 போலந்து1,916
 பல்கேரியா1,803
 பின்லாந்து900
மொழி(கள்)
தாதர், உருசியம்
சமயங்கள்
சுன்னி இசுலாம், கிழக்கு மரபுவழி திருச்சபை

தாதர்கள் (உருசியம்: татары); (தாதர்: татарлар) என்பவர்கள் ஒரு துருக்கிய இன மக்கள்[1] ஆவர். இவர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழ்கின்றனர். "தாதர்" என்ற பெயரானது எழுத்து வடிவில் முதன்முதலில் குல் திசினின் நினைவுச்சின்னத்தில் 𐱃𐱃𐰺 (TaTaR) என்ற வடிவில் தோன்றுகிறது. வரலாற்றுரீதியாக "தாதர்கள்" என்ற சொல் பல்வேறு வகையான துருக்கிய-மங்கோலிய பகுதி-நாடோடிப் பேரரசுகளுக்கு வழங்கப்பட்டது. இவை தார்தரி என்று அழைக்கப்பட்ட பெரிய நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் இந்தச் சொல் தற்போது குறுகிய அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஏதாவது ஒரு துருக்கிய மொழியைப்[1] பேசும் மக்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 

செங்கிஸ் கானின் தலைமையில் கி.பி. 1206ல் உருவாக்கப்பட்ட மங்கோலியப் பேரரசு தாதர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. செங்கிஸ் கானின் பேரன் படு கானின் (அநேகமாக கி.பி. 1207-1255) தலைமையில் மங்கோலியர்கள் மேற்கு நோக்கிப் பயணித்தனர். அவர்கள் தங்களுடன் பல மங்கோலியப் பழங்குடியினரை உருசியாவின் சமவெளிகளை நோக்கி அழைத்துச் சென்றனர். தாதர் குலமரபானது இன்னும் மங்கோலியர்கள் மற்றும் கசாராக்கள் இடையே உள்ளது. 

உருசியர்களால் "தாதர்கள்" என்று அழைக்கப்படும் இப்போது இருக்கும் மிகப்பெரிய குழுவானது வோல்கா தாதர்கள் ஆவர். இவர்கள் வோல்கா பகுதியைச் (தாதர்தான் மற்றும் பசுகோர்தோதான்) சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இக்காரணத்திற்காக எளிமையாக "தாதர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மொழி தாதர் மொழி என்று அழைக்கப்படுகிறது. 2002ம் ஆண்டின் கணக்குப்படி இவர்களின் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையானது ஏறக்குறைய 60 இலட்சம் ஆகும். உருசியர்களும், தாதர்களும் ஒருவருடன் ஒருவர் ஒன்றாகக் கலந்துவிட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு. இது "ஒரு உருசியனைச் சிறிது சுரண்டினால் அவனுக்கு உள்ளே ஒரு தாதன் வெளிப்படுவான்"[2] என்ற ஒரு கூற்றால் விளக்கப்படுகிறது. உருசியாவின் முதலாம் பேதுரு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த பிரபுக் குடும்பங்கள் தாதர் வழிவந்தவர்களாக இருந்தனர்.[3] எனினும் மரபியல் ஆராய்ச்சிகள் உருசியர்கள் வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பியர்களை (முக்கியமாக பெலாரசியர்கள் மற்றும் உக்கிரைனியர்கள்) மூதாதையர்களாகக் கொண்டுள்ளதாகக் காட்டுகின்றன. தாதர் மக்களிலிருந்து மரபியல்ரீதியாகத் தொலைவில் உள்ளவர்களாகக் காட்டுகின்றன.[4][5]  

இக்காலத்தில் தாதர்களின் உடல் தோற்றம் ஒரு வண்ணப் பட்டியாக உள்ளது. இவர்கள் மங்கோலியர் முதல் காக்கேசியர் வரையிலான தோற்றங்களைக் கொண்டுள்ளனர்.

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-30. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  2. Matthias Kappler, Intercultural Aspects in and Around Turkic Literatures: Proceedings of the International Conference Held on October 11th-12th, 2003 in Nicosia, Otto Harrassowitz Verlag (2006), p. 165
  3. Thomas Riha, Readings in Russian Civilization, Volume 1: Russia Before Peter the Great, 900-1700, University of Chicago Press (2009), p. 186
  4. Orekhov, V; Poltoraus, A; Zhivotovsky, LA; Spitsyn, V; Ivanov, P; Yankovsky, N (1999). "Mitochondrial DNA sequence diversity in Russians". FEBS Lett 445: 197–201. பப்மெட்:10069400. 
  5. Balanovsky, Oleg (2008). "Two Sources of the Russian Patrilineal Heritage in Their Eurasian Context". The American Journal of Human Genetics 82: 236–250. doi:10.1016/j.ajhg.2007.09.019. http://www.sciencedirect.com/science/article/pii/S0002929707000250. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதர்கள்&oldid=3557630" இலிருந்து மீள்விக்கப்பட்டது