குவாரசமியா
Jump to navigation
Jump to search
க்வரஸ்ம் அல்லது கோரஸ்மியா (பாரசீகம்: خوارزم, க்ஷ்வரஸ்ம்) என்பது மேற்கு நடு ஆசியாவில் அமு டர்யா ஆற்று டெல்டாவில் இருக்கும் ஒரு பெரிய பாலைவனச் சோலை பகுதி ஆகும். இதன் வடக்கில் (முன்னாள்) அரல் கடலும், கிழக்கில் கைசைல்கும் பாலைவனமும், தெற்கில் கரகும் பாலைவனமும் மற்றும் மேற்கில் உஸ்ட்யுர்ட் பீடபூமியும் அமைந்துள்ளன. இது ஈரானிய[1] க்வரஸ்மிய நாகரிகத்தின் மையம் ஆகும். பாரசீகப் பேரரசு போன்ற தொடர்ச்சியான பேரரசுகள் இங்கே அமைந்திருந்தன. அவற்றின் தலைநகரங்களான கத், குர்கஞ்ச் (தற்கால கொனேவுர்கெஞ்ச்) மற்றும் கிவா (16ம் நூற்றாண்டில் இருந்து) இப்பகுதியில் அமைந்திருந்தன. இந்நாளில் க்வரஸ்மின் பகுதிகள் உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளாக உள்ளன.