காராகும் பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காரகும் பாலைவனம், நாசாவின் செய்மதி புகைப்படம்

காராகும் பாலைவனம் (Karakum Desert), கருமணல் கொண்டதால் இப்பாலைவனத்திற்கு துருக்கி மொழியில் காரகும் பாலைவனம் எனப் பெயராயிற்று. நடு ஆசியா நாடான துருக்மெனிஸ்தானின் மொத்த பரப்பளவில் எழுபது விழுக்காடு (35,000 சதுர கிலோ மீட்டர்) பரப்பளவை காராகும் பாலைவனம் அடைத்துள்ளது.

இப்பாலைவனத்தில் மக்கள் தொகை அடர்த்தி 6.5 சதுர கிலோ மீட்டரில் ஒரு நபர் விகிதத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 70 முதல் 150 மில்லி மீட்டராக உள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

காஸ்பியன் கடலுக்கு கிழக்கே, ஏரல் கடலுக்கு வடக்கே, ஆமூ தாரியா ஆறு மற்றும் கிசுல்கும் பாலைவனத்திற்கும் வடகிழக்கில் துருக்மெனிஸ்தானில் காராகும் பாலவனம் அமைந்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் ஆதாரங்கள்[தொகு]

பாலைவனச் சோலைகள் மற்றும் சிறிதளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. தற்போது இங்கு கணிசமாக பாறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நரகத்திற்கான கதவு[தொகு]

காராகும் பாலைவனப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க 70 மீட்டர்கள் (130 அடிகள்)[2] விட்டமும், 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலமும், சுமார் 20 மீட்டர் (66 அடிகள்) ஆழத்தில் தோண்டிய மிகப் பெரிய பள்ளத்தாக்கில், இடைவிடாது தொடர்ந்து செம்மஞ்சள் நிறத்தில் மீத்தென் எரிவாயு தீச்சுவாலை தொடர்ந்து உமிழ்ந்தபடி இருப்பதால் இப்பகுதியை நரகத்திற்கான கதவு என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.[3]

போக்குவரத்து[தொகு]

டிரான்ஸ்-காஸ்பியன் தொடருந்து சேவை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karakum Desert -- Britannica Online Encyclopedia". www.britannica.com. 2008-02-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. "What a 'hell hole'! Tuesday, November 03, 2015". ஜூன் 6, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச் 12, 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Turkmen president wants to close "Hell's Gate" Oddly Enough | Tue Apr 20, 2010 1:20pm EDT". அக்டோபர் 7, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச் 12, 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 40°30′N 60°00′E / 40.500°N 60.000°E / 40.500; 60.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=காராகும்_பாலைவனம்&oldid=3403125" இருந்து மீள்விக்கப்பட்டது