உள்ளடக்கத்துக்குச் செல்

செனோவாக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகவும் அமைதியான செனோவாக் குடியரசு
1005–1797

ஏப் 1814 – சன 1815
கொடி of செனோவா
கொடி
சின்னம் of செனோவா
சின்னம்
குறிக்கோள்: Respublica superiorem non recognoscens
(இலத்தீன்: "எந்த மேலாண்மையையும் ஏற்காத குடியரசு")
செனோவா மற்றும் கப்பற் தொகுதியின் காட்சி - கிறிஸ்டோபொரோ டெ கிராசியின் 1481ஆம் ஆண்டு ஓவியத்தின் 1597 நகல்; கலட்டா மியூசியோ டெல் மாரெ, செனோவா.
செனோவா மற்றும் கப்பற் தொகுதியின் காட்சி - கிறிஸ்டோபொரோ டெ கிராசியின் 1481ஆம் ஆண்டு ஓவியத்தின் 1597 நகல்; கலட்டா மியூசியோ டெல் மாரெ, செனோவா.
தலைநகரம்செனோவா
பேசப்படும் மொழிகள்இலிகுரியன், இலத்தீன், இத்தாலியம்
சமயம்
உரோமன் கத்தோலிக்கம்
அரசாங்கம்சிலவர் ஆட்சி
செனோவாவின் டோகெ 
• 1339–1344
சைமன் பொக்கனெக்ரா
• 1795–1797
கியாகொமோ மாரியா பிரிக்னோல்
• 1814–1815
girolamo serra (Girolamo Serra)
வரலாற்று சகாப்தம்
• தொடக்கம்
1005
சூன் 14, 1797
• மீள் நிறுவல்
ஏப்ரல் 26, 1814
சனவரி 7 1815
நாணயம்செனோவினோ
முந்தையது
பின்னையது
இத்தாலிய இராச்சியம் (பேரரசு)
ஜெனசு
இலிகுரியன் குடியரசு
சார்தீனியா இராச்சியம்
தற்போதைய பகுதிகள் இத்தாலி
 பிரான்சு
 கிரேக்க நாடு
 மொனாகோ
 உருசியா
 தூனிசியா
 துருக்கி
 உக்ரைன்

மிகவும் அமைதிமிக்க செனோவாக் குடியரசு (இத்தாலியம்: Repubblica di Genova, இலிகுரியன்: Repúbrica de Zêna) வடமேற்கு இத்தாலியக் கடலோரத்தில் இலிகுரியாவில் 1005 முதல் 1797 வரை இறையாண்மையுடன் இருந்த நாடாகும்; 1347 முதல் 1768 வரை கோர்சிகா இதன் அங்கமாக இருந்தது. நடுநிலக்கடல் பகுதியில் பல்வேறு நிலப்பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன.

இத்தாலிய இராச்சியத்தின் கீழ் செனோவா தன்னாட்சி பெற்றிருந்ததிலிருந்து துவங்கிய இவ்வரசு பிரான்சின் முதலாம் நெப்போலியன் கீழான முதல் பிரெஞ்சுக் குடியரசு கையகப்படுத்தியபோது முடிவுக்கு வந்தது. இதற்கு மாற்றாக இலிகுரியக் குடியரசு நிறுவப்பட்டது. 1768ஆம் ஆண்டு வெர்சாய் உடன்பாட்டுடன் கோர்சிகா பிரிந்தது. இலிகுரியன் குடியரசை 1805இல் முதலாம் பிரஞ்சு பேரரசு கைப்பற்றியது; 1814இல் நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு சிறிது காலத்திற்கு மீளவும் நிறுவப்பட்டது. ஆனால் 1815இல் சார்தீனியா இராச்சியம் இதனைக் கைப்பற்றியது.

1100க்கு முன்னதாக செனோவா தன்னாட்சி பெற்ற நகர அரசு நிலை பெற்றிருந்தது. புனித உரோமைப் பேரரசு மேற்பார்வையில் செனோவாவின் பேராயர் நகரத்தலைவராக விளங்கினார். இருப்பினும் உண்மையான அதிகாரம் நகர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கான்சுல்களின் வசம் இருந்தது. வெனிசு, பீசா, அமால்பி போன்று செனோவாவும் "கடல்சார் குடியரசுகள்" (Repubbliche Marinare) என்றழைக்கப்பட்டது; வணிகம், கப்பல் கட்டுதல் மற்றும் வங்கித்தொழில் இவற்றின் ஆதரவினால் நடுநிலக் கடல் பகுதியில் மிகுந்த வலிமையான கடற்படையை வைத்திருந்தது. செனோவாக் குடியரசில் தற்கால இலிகுரியா, பியத்மாந்து, சார்தீனியா, கோர்சிகா, நீசு நிலப்பகுதிகளும் திர்ரேனியக் கடலின் முழுக்கட்டுப்பாடும் இருந்தது. சிலுவைப் போர்களில் கலந்து கொண்டதால் மத்திய கிழக்கு நாடுகளிலும், ஏஜியன் கடற்பகுதியிலும் சிசிலியிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் செனோவாவின் குடிமைப்பகுதிகள் நிறுவப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனோவாக்_குடியரசு&oldid=3574628" இலிருந்து மீள்விக்கப்பட்டது