சுடுகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு சிமித் அண்ட் வெசன் சுழல் துப்பாக்கி படைத்துறையினரதும், காவல்துறையினரதும் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டது.

சுடுகலன் (firearm) என்பது, கட்டுப்பாடான வெடிப்பின் உதவியுடன், ஒற்றை எறிபொருளையோ அல்லது பல எறிபொருட்களையோ அதிவேகத்துடன் எறிவதற்குப் பயன்படும் கருவியாகும். "சுடுதல்" என்ற சொல்லால் குறிக்கப்படும் இந்த அதிவேக எறிதல், சுடுகலன்களுள் மட்டுப்படுத்தப்பட்ட இடத்தினுள் வெடிபொருட்கள் விரைவாக எரிவதன் மூலம் உண்டாகும் வளிம அழுத்தம் காரணமாக நடைபெறுகிறது. பழைய சுடுகலன்களில் வெடிமருந்து அல்லது கருந்தூள் எனப்பட்ட உந்துபொருள் (propellant) பயன்பட்டது. தற்காலச் சுடுகலன்களில் புகையாத் தூள், கோர்டைட்டு (cordite) என்பவை போன்ற பிற உந்துபொருட்கள் பயன்படுகின்றன. வழுவழுப்பான துளை கொண்ட துப்பாக்கிகள் தவிர, பிற புது வகையான துப்பாக்கிகள் சுழல் குளாய்களைக் கொண்டுள்ளன. இது தோட்டா அல்லது எறிபொருளில் சுழற்சியை ஊட்டுவதால், எறிபொருள் (பறந்து) செல்லும் பொழுது மேம்பட்ட நிலைப்பாட்டோடு பறந்து செல்கின்றது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடுகலன்&oldid=2293457" இருந்து மீள்விக்கப்பட்டது