வெடிமருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A modern black powder substitute for muzzleloading rifles in FFG size

வெடிமருந்து (Gunpowder) என்பது கந்தகம், கரி, பொட்டாசியம் நைத்திரேட்டு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட் கலவை ஆகும். மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய கனவளவு கொண்ட வளிமங்களையும் உண்டாக்கக்கூடிய இது சுடுகலன்களில் உந்துவிசையை உருவாக்கவும், பட்டாசுகளிலும் பயன்படுகின்றது. மேற்குறிப்பிட்ட கலவையைத் தவிர இன்று பயன்பாட்டிலிருக்கும் வேறு வகையான, உந்துவிசையைக் கொடுக்கும் சேர்வைகளும் வெடிமருந்துகள் என்றே அழைக்கப்படுவதுண்டு. இக்கட்டுரை முதலில் குறிப்பிடப்பட்ட கலவை பற்றியது ஆகும்.

மேற்குறித்த வெடிமருந்து, சிதைவடையும்போது ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால் தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியிலும் கூடிய வேகம் கொண்ட அமுக்க அலைகளை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து ஒலியிலும் குறைவான வேகம் கொண்ட அமுக்க அலைகளையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வளிமங்களின் அமுக்கம் துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது எனினும், சுடுகலனின் குளாயை சேதமாக்கும் அளவுக்குப் போதியது அல்ல. இதனால், பாறைகளையோ உறுதியாக அரண்களையோ உடைப்பதற்கு "வெடிமருந்து" பொருத்தமானது அல்ல. இத்தகைய தேவைகளுக்கு டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீன் போன்ற வெடிபொருட்கள் விரும்பப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிமருந்து&oldid=2222617" இருந்து மீள்விக்கப்பட்டது