குயுக் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குயுக் கான்
Гүюг хаан
ᠭᠦᠶᠦᠭ ᠬᠠᠭᠠᠨ
மங்கோலியப் பேரரசின் 3வது ககான்
(மங்கோலியர்களின் உயர்வான கான்)
மன்னர்களின் மன்னர்
Guyuk.jpg
மங்கோலியப் பேரரசின் 3வது பெரிய கான்
ஆட்சிக்காலம்24 ஆகஸ்ட் 1246 – 20 ஏப்ரல் 1248
முடிசூட்டுதல்24 ஆகஸ்ட் 1246
முன்னையவர்ஒகோடி கான்
பின்னையவர்மோங்கே கான்
பிறப்பு19 மார்ச் 1206
இறப்பு20 ஏப்ரல் 1248 (அகவை 42)
கும்-செங்கிர், சிஞ்சியாங்
துணைவர்ஒகுல் கைமிஸ்
Posthumous name
பேரரசர் ஜியான்பிங் (簡平皇帝, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
Temple name
டிங்சோங் (定宗, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
மரபுபோர்சிசின்
தந்தைஒகோடி கான்
தாய்தோரேசின் கதுன்
மதம்பௌத்த மதம்

குயுக் (அல்லது குயுக்; மொங்கோலியம்: Гүюг хаан,[1] güyüg qaγan) (c. மார்ச் 19, 1206 – ஏப்ரல் 20, 1248) மங்கோலியப் பேரரசின் மூன்றாவது பெரிய கான், ஒகோடி கானின் மூத்த மகனும் செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். இவர் 1246 முதல் 1248 வரை ஆட்சி செய்தார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

குயுக்குக்கு இராணுவ பயிற்சி செங்கிஸ் கான் மற்றும் ஒகோடி கான் ஆகியோரின் கீழ் ஒரு அதிகாரியாக கிடைத்தது. இவர் மெர்கிட் வம்சத்தின் ஓகுல் கைமிசை மணந்தார். 1233 ஆம் ஆண்டில், குயுக், அவரது தாயாரின் உறவினரான அல்சிடை மற்றும் மங்கோலியத் தளபதி டாங்குடு ஆகியோருடன் சேர்ந்து, எதிர்ப்பாளரான ஜின் அதிகாரி புக்சியன் வன்னுவின் டோங்சியா அரசை சில மாதங்களில் வெற்றிகொண்டனர்.[2] டொலுய் இறந்த பிறகு, ஒகோடி டொலுயின் விதவையான சோர்க்காக்டனியை, அவரது மகன் குயுக்கை மணம்புரியுமாறு முன்மொழிந்தார். சோர்க்காக்டனி தனக்குத் தன் மகன்களே பிரதானமானவர்கள் என்று மறுத்துவிட்டார்.[3]

விளாடிமிருக்கு வெளியே இருக்கும் மங்கோலியர்கள், அநேகமாக அதை வெல்வதற்கு முன்னால்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Гүюг хаан". mongoltoli.mn, mongolian state dictionary (in மங்கோலியன்). 2017-10-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. Pál Nyíri-Chinese in Eastern Europe and Russia, p.4
  3. John Man-Kublai Khan, p.19
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயுக்_கான்&oldid=2694693" இருந்து மீள்விக்கப்பட்டது