சின் வம்சம் (1115–1234)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரிய சின்
大金
Amba-an Ancu-un.png

 

கி.பி. 1115–கி.பி. 1234
 

 

 

சின் வம்சம் (நீலம்) கி.பி. 1141 வாக்கில்
சின்னைச் சுற்றியிருந்தவர்கள்
தலைநகரம் ஹுயினிங் எல்லை

(கி.பி. 1122–1153)
சோங்டு
(கி.பி. 1153–1214)
கைபெங்
(கி.பி. 1214–1233)
கைசோவு
(கி.பி. 1233–1234)

மொழி(கள்) மத்திய சீனம், சுரசன், கிதான்
சமயம் பௌத்தம்,

தாவோயிசம்,
கன்பூசியனிசம்,
சீன நாட்டுப்புற மதங்கள்

அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  கி.பி. 1115–1123 தைசு (முதல்)
 -  கி.பி. 1234 மோ (கடைசி)
வரலாறு
 -  அகுடாவால் தோற்றுவிக்கப்பட்டது 28 சனவரி கி.பி. 1115
 -  லியாவோ வம்சத்தின் அழிவு கி.பி. 1125
 -  வடக்கு சாங் வம்சத்திடம் இருந்து பியான்லியாங் கைப்பற்றப்பட்டது 9 சனவரி 1127 கி.பி.
 -  மங்கோலியப் படையெடுப்பு கி.பி. 1211
 -  மங்கோலியப் பேரரசிடம் கைசோவின் வீழ்ச்சி 9 பெப்ரவரி கி.பி. 1234
பரப்பளவு
 -  கி.பி. 1126 மதிப்பீடு[1] 23,00,000 km² (8,88,035 sq mi)
 -  கி.பி. 1142 மதிப்பீடு 30,00,000 km² (11,58,306 sq mi)
மக்கள்தொகை
 -  மதிப்பீடு. 50 
நாணயம் சீன நாணயம், சீனப் பணம்
தற்போதைய பகுதிகள் சீனா, உருசியா, வட கொரியா, மங்கோலியா
சின் வம்சம்
Chinese name
சீன மொழி 金朝
Alternative Chinese name
சீன மொழி 大金
Literal meaning Great Jin
Khitan பெயர்
Khitan Nik, Niku

சின் வம்சம் (கி.பி. 1115-1234) மங்கோலியத் தாக்குதலுக்கு முன்னர் சீனாவில் இருந்த பல வம்சங்களில் ஒன்றாகும். இது கின் அல்லது சுரசன் சின் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் தோற்றுவிப்பாளர் பேரரசர் தைசு (கி.பி. 1115-1123) வன்யன் சுரசன்களின் வழிவந்தவர் ஆவார். 

சின்கள் லியாவோ வம்சத்திற்கு (கி.பி. 907-1125) எதிரான தைசுவின் புரட்சியில் இருந்து உருவாயினர். லியாவோ வம்சத்தினர் வட சீனாவை ஆண்டு கொண்டிருந்தபோது வளர்ந்து வந்த சின்களிடம் தோற்றனர். லியாவோ வம்சத்தவர் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து மேற்கத்திய லியாவோ என்று அழைக்கப்பட்டனர். லியாவோவைத் தோற்கடித்த பின்னர் சின்கள் தெற்கு சீனாவில் இருந்த சாங் வம்சத்திற்கு (கி.பி. 960-1279) எதிராக 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஒரு போரைத் தொடங்கினர். ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர் சின்கள் சீனப் பழக்கவழக்கங்களை சீக்கிரமே கற்கத்தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக வளர்ந்து வந்த மங்கோலியர்களுக்கு எதிராகச் சீனப் பெருஞ்சுவரையும் செறிவூட்டினர். சின் ஆட்சியில் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டன. உதாரணமாக வெடிமருந்து உருவாக்கம் மற்றும் கன்பூசிய மதத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

செங்கிஸ் கான் கி.பி. 1211ல் சின் வம்சத்தவருக்கு எதிராகப் படையெடுத்தார். சின் இராணுவத்திற்குப் பேரழிவுகரமான தோல்விகளைக் கொடுத்தார். 

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems research 12 (2): 219–229. ISSN 1076-156X. Archived from the original on 22 February 2007. https://web.archive.org/web/20070222011511/http://jwsr.ucr.edu/archive/vol12/number2/pdf/jwsr-v12n2-tah.pdf. பார்த்த நாள்: 12 August 2010. 

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_வம்சம்_(1115–1234)&oldid=2452256" இருந்து மீள்விக்கப்பட்டது