உள்ளடக்கத்துக்குச் செல்

பர்மா மீதான இரண்டாம் மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்மா மீதான இரண்டாம் மங்கோலியப் படையெடுப்பு என்பது 1301ஆம் ஆண்டு பர்மாவின் மையின்சைங் இராச்சியத்திற்கு எதிராகத் தெமூர் கான் தலைமையிலான யுவான் அரசமரபு நடத்திய படையெடுப்பாகும். எனினும் இந்தப் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.

பின்புலம்[தொகு]

யுவான் அரச மரபால் நடத்தப்பட்ட முதல் படையெடுப்புக்குப் பிறகு நரதிகபதே பாகனுக்குத் தப்பி ஓடினார். ஏற்கனவே அனுபவம் வாய்ந்த தளபதிகளான சகோதரர்கள் மையின்சைங்கிலிருந்து தங்களது காவல் கோட்டையை வலிமைப்படுத்தினர். மங்கோலியர்கள் திரும்பிச் சென்ற பிறகு நரதிகபதேயின் மகன் கியாவிசுவா ஆட்சிக்கு வந்தார். ஆனால் பாகனின் பெயரளவுக்கான மன்னனாகவே அவர் திகழ்ந்தார். பாகனுக்கு வெளிப்புறம் சில கிலோமீட்டர் தொலைவுடைய பகுதிகளையே இவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பாகன் பேரரசானது அழிந்து போனது. எனினும் உண்மையான சக்தியானது நடு பர்மாவில் இருந்த சகோதரர்களின் கையில் இருந்தது. பாகனின் மிக முக்கியமான கூலக் களஞ்சியமான கியாவுக்குசே மாவட்டத்தைத் தங்களது சிறிய, ஆனால் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவத்தால் அவர்கள் கட்டுப்படுத்தினர். கியாவுக்குசே பிரபுக்களாக அந்தச் சகோதரர்களை அங்கீகரிப்பதைத் தவிர கியாவிசுவாவிற்கு வேறு வழியில்லை. 19 பிப்ரவரி 1293ஆம் ஆண்டு மையின்சைங்கின் அரச நிர்வாகியாகச் சகோதரர்களில் மூத்தவரை மன்னன் நியமித்தார். சகோதரர்களில் இரண்டாமானவரை மெக்கராவின் அரச நிர்வாகியாக நியமித்தார். மூன்றாவது சகோதரரைப் பின்லேயின் அரச நிர்வாகியாக நியமித்தார்.[1][2][3][4][5]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Htin Aung 1967: 74
  2. Than Tun 1959: 119–120
  3. Than Tun 1959: 122
  4. Than Tun 1964: 137
  5. Than Tun 1959: 121

ஆதாரங்கள்[தொகு]

  • Than Tun (December 1959). "History of Burma: A.D. 1300–1400". Journal of Burma Research Society XLII. 

மேலும் படிக்க[தொகு]

  • Bor, J. History of diplomatic relations of Mongol-Eurasia. Vol. II.
  • Grousset, Rene (1970). The Empire of the Steppes: A History of Central Asia.