கர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்சி என்பது தெற்கு உசுபெக்கிசுத்தானில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கசுக்கடரியோ பிராந்தியத்தின் தலைநகரம் ஆகும்.[1] 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மொத்த மக்கள் தொகை 2,78,300 ஆகும்.[2] இது தாஷ்கந்தில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 520 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆப்கானித்தானுடனான உசுபெக்கிசுத்தானின் எல்லையில் இருந்து வடக்கே சுமார் 335 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 374 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எரிவளி உற்பத்தியில் இந்த நகரம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கம்பளங்களும் பிரபலமானவையாக உள்ளன.

கர்சி தொடர்வண்டி நிலையம்

உசாத்துணை[தொகு]

  1. "Classification system of territorial units of the Republic of Uzbekistan" (in உஸ்பெக் and ரஷியன்). The State Committee of the Republic of Uzbekistan on statistics. July 2020.
  2. "Urban and rural population by district" (PDF) (in உஸ்பெக்). Qashqadaryo regional department of statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்சி&oldid=3490714" இலிருந்து மீள்விக்கப்பட்டது