பாக்ஸ் மங்கோலிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்டலான் நிலப்படத் தொகுப்பு பாக்ஸ் மங்கோலிகாவின் போது கிழக்கு நோக்கி பயணிக்கிற மார்க்கோ போலோவைச் சித்தரிக்கிறது.

பாக்ஸ் மங்கோலிகா எனும் பதத்திற்கு லத்தீன் மொழியில் “மாங்கோலிய அமைதி” என்று பொருள். இது பாக்ஸ் டாடரிகா என்றும் அழைக்கப்படுவதுண்டு.[1] “இது அசல் பதமானபாக்ஸ் ரோமனாவிலிருந்து உருவானது. 13 வது மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியப் படையெடுப்புகளால் யூரேசியப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் சமூக, கலாச்சார, மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைத்தன்மையை இது குறிக்கிறது. இந்தப் பதமானது ஒன்றுபட்ட நிர்வாகத்தால் உருவான எளிதாக்கப்பட்ட தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் மங்கோலியர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து அதன் விளைவாக பரந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட அமைதியான காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

செங்கிஸ் கான் (ஆட்சி 1206-1227) மற்றும் அவரது வழிவந்தவர்களின் வெற்றிகள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரை பரவியிருந்தது. இதனால் கிழக்கு உலகம் மேற்கு உலகத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் வர்த்தக மையங்களை இணைக்கும் பட்டுப் பாதை, மங்கோலியப் பேரரசால் ஒரே ஆட்சியின் கீழ் வந்தது. "தங்க நகையை அணிந்திருக்கும் ஒரு இளம் பெண் சாம்ராஜ்யம் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயமின்றி பாதுகாப்பாகச் செல்ல முடியும்” என்று மங்கோலியப் பேரரசைப் பற்றிக் கூறப்பட்டது.[2][3] மங்கோலியப் பேரரசு நான்கு கானேடுகளாகப் (யுவான் வம்சம், கோல்டன் ஹோர்டே, ஜகாடேய் கானேடு மற்றும் இல்கானேடு) பிரிக்கப்பட்டபோதும், படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டுப் போர் ஒரு நூற்றாண்டிற்குத் தொடர்ந்த போதிலும், 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. கானேடுகளின் பிரிவு, கறுப்புச் சாவின் தொடக்கம் மற்றும் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகெங்கிலும் வர்த்தக வழித்தடங்களில் அது பரவியது போன்ற காரணங்களால் பாக்ஸ் மங்கோலிகா முடிவுக்கு வந்தது.

அடிப்படை[தொகு]

பாக்ஸ் மங்கோலிகாவின் அடிப்படை மங்கோலியப் பேரரசில் அமைந்துள்ளது. இது பதிமூன்றாம் நூற்றாண்டில் செங்கிஸ்கானில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்பகுதியில் இருந்த பல்வேறு பழங்குடியினரை வெல்லும் முயற்சியில் மங்கோலிய பழங்குடியின சமூகம் அமைக்கப்பட்டிருந்ததை செங்கிஸ்கான் புரட்சிகரமாக மாற்றியமைத்தார்.[4] ஒவ்வொரு புது வெற்றியின் பின்னரும் மேலும் மேலும் மக்கள் செங்கிஸ்கானின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இதன் காரணமாக பழங்குடி இனத்தின் சமூக அமைப்பு வேறுபட்ட மக்களை கொண்டிருந்தது. 1203 இல் செங்கிஸ் கான் தனது ராணுவத்தை பலமாக்கும் பொருட்டு அதன் அமைப்பை மாற்றி அமைக்கும் சீர்திருத்தத்தை ஆணையிட்டார். அதே நேரத்தில் அவர் முக்காலத்தில் சமூகம் மற்றும் ராணுவத்தை பிரித்த பாரம்பரிய இன மற்றும் வாரிசு அடிப்படையிலான பிரிவுகளை பிரித்தார். அவர் தனது ராணுவத்தை அர்பன்களாக (பல்வேறு இனங்களின் 10 பேர் அடங்கிய குழு) அமைத்தார். ஒரு அர்பனின் உறுப்பினர்கள் இன வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் விசுவாசமாய் இருக்குமாறு ஆணையிடப்பட்டது.[5] பத்து அர்பன்கள் ஒரு சூன் அல்லது ஒரு கம்பெனியாக ஆக்கப்பட்டனர்; பத்து சூன்கள் ஒரு மிங்கன் அல்லது ஒரு படைப்பிரிவாக ஆக்கப்பட்டனர்; பத்து மிங்கன்கள் ஒரு தியுமன் அல்லது பத்தாயிரம் பேரை கொண்ட ஒரு ராணுவமாக ஆக்கப்பட்டனர். செங்கிஸ்கானின் வலிமையான ராணுவத்தின் இந்த பத்தின் அடிப்படையிலான அமைப்பானது படையின் மூலமோ அல்லது பணிய வைத்தோ நடு ஆசியாவின் புல்வெளியின் பல்வேறு பழங்குடியினரை வெல்வதில் தங்கள் திறமையை நிரூபித்தது. மேலும் இது மங்கோலிய சமூகத்தை மொத்தமாக வலிமை ஆக்கியது.[6] 1206 இல் செங்கிஸ்கானின் ராணுவ விரிவாக்கம் மங்கோலியாவின் பழங்குடியினரை ஒன்றுபடுத்தியது மற்றும் அதே வருடத்தில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டார்.

ஜியுவான் சகாப்தத்தின் மூன்றாம் ஆண்டு (1332) என கணக்கிடப்பட்ட கல்வெட்டு அடங்கிய வெண்கல பீரங்கி. யுவான் அரசமரபு (1206-1368). யஞ்சு கோயில், ஃபங்ஷான், பெய்ஜிங்கில் 1935ல் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Michael Prawdin. The Mongol Empire: its rise and legacy. New Brunswick: Transaction, 2006. p.347
  2. Charlton M. Lewis and W. Scott Morton. China: Its History and Culture (Fourth Edition). New York: McGraw-Hill, 2004. Print. p.121
  3. Laurence Bergreen. Marco Polo: From Venice to Xanadu. New York: Vintage, 2007. Print. p.27–28
  4. David Morgan (historian). The Mongols second edition. Oxford: OUP, 2007. p.55
  5. Amy Chua. Day of Empire: How hyperpowers rise to global dominance, and why they fall. New York: Random House, 2007. p.95
  6. Jack Weatherford. Genghis Khan and the Making of the Modern World. New York: Three Rivers Press, 2004. p. 28

மேலும் படிக்க[தொகு]

  • Weatherford, Jack. Genghis Khan and the Making of the Modern World (New York: Crown, 2004) ISBN 0-609-61062-7.
  • Thomas T. Allsen. Culture and Conquest in Mongol Eurasia Cambridge Studies in Islamic Civilization Cambridge University Press March 25, 2004 ISBN 0-521-60270-X
  • Jackson, Peter. The Mongols and the West: 1221-1410 Longman 2005 ISBN 0-582-36896-0

வெளி இணைப்புகள்[தொகு]

  • "The Pax Mongolica". The Pax Mongolica. பார்த்த நாள் October 13, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்ஸ்_மங்கோலிகா&oldid=2670691" இருந்து மீள்விக்கப்பட்டது