போலந்து மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலந்து மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பு
மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின் ஒரு பகுதி
Meczennicy Sandomierscy.jpg
போலந்து மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட சாண்டோமியர்சின் 48 தொமினிக்கத் தியாகிகள் மற்றும் சதோக்.
நாள் பிந்தைய 1259-ஆரம்ப 1260
இடம் போலந்தின் தென் மற்றும் கிழக்குப் பகுதிகள்
மங்கோலிய வெற்றி
பிரிவினர்
Golden Horde flag 1339.svg மங்கோலியப் பேரரசின் தங்க நாடோடிக் கூட்டம் Coat of Arms of the Polish Crown.svg போலந்து இராச்சியம்

Coat of Arms of the Polish Crown.svg போலந்து வேள்பகுதிகள்:

  • POL województwo dolnośląskie COA.svg சிலேசியா
  • Księstwo Mazowieckie COA.svg மசோவியா
  • POL Przemysł II 1295 COA.svg சிறிய போலந்து
  • POL województwo wielkopolskie COA.svg பெரிய போலந்து
தளபதிகள், தலைவர்கள்
பெர்கே
போரோல்டை
தலபுகா
நோகை
தூய ஐந்தாம் போலேசுலாவ்
மற்றும் பலர்
பலம்
20,000[1] - 30,000[2] 9,000:[3]
  • 6,000 காலாட்படை
  • 3,000 குதிரைப்படை
இழப்புகள்
குறைவு அதிகம்

போலந்து மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பானது 1259-60ஆம் ஆண்டில் தளபதி போரோல்டையால் நடத்தப்பட்டது. இந்தப் படையெடுப்பின் போது சாண்டோமியர்சு, கிராக்கோவ், லூப்ளின், சவிச்சோசுத்து மற்றும் பைடோம் ஆகிய நகரங்கள் இரண்டாவது முறையாக மங்கோலியர்களால் சூறையாடப்பட்டன.[4][5]

விளைவு[தொகு]

படையெடுப்புக்குள்ளான மாகாணங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. ஏராளமான செல்வங்கள் சூறையாடப்பட்டன. படையெடுப்பாளர்கள் சுமார் 10,000 போலந்துக்காரர்களை அடிமைகளாகத் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்தப் படையெடுப்பின் மூலம் மங்கோலியர்களுக்கு எதிரான கூட்டணியை அழிப்பதில் தங்க நாடோடிக் கூட்டமானது வெற்றி கண்டது. கலிசிய-வோலினிய இராச்சியத்தை முழுவதுமாக அடிபணிய வைத்தது.

உசாத்துணை[தொகு]