உள்ளடக்கத்துக்குச் செல்

நெகுதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெகுதர் என்பவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஒரு நோயன் ஆவார். இவர் பெர்கேயின் கீழ் மங்கோலியத் தளபதியாகப் பணியாற்றினார். 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்ற பல தங்க நாடோடிக் கூட்டத் தளபதிகளுடன் இவரும் இஸ்லாமைத் தழுவினார். இறுதியாக அகமது கான் என்ற முஸ்லீம் பெயரைத் தனக்கு வைத்துக் கொண்டார்.[1]

பெர்கே மற்றும் குலாகுவுக்கு இடையிலான சண்டைகளுக்கு முன்னர் நடு ஆசியாவில் கிழக்குக் குராசான் மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் நெகுதர் அமைதியை ஏற்படுத்தினார். 1230களில் மங்கோலியப் பேரரசின் பிற தளபதிகளுடன் நெகுதர் தில்லி சுல்தானகத்தின் வடமேற்குப் பகுதிகள் மீது ஊடுருவல் நடத்தினார். 1260ஆம் ஆண்டு பெர்கே மற்றும் குலாகுவுக்கு இடையில் சண்டை ஏற்பட்டபோது காசுனி மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பொதுவாக இருந்த பெர்கேயின் படைகளின் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிரிவின்[2] மீது நெகுதர் கட்டுப்பாட்டைப் பெற்றார்.

நெகுதர் மற்றும் அவரது படைகள் இறுதியாகத் தற்கால ஆப்கானிஸ்தானின்[3] காபூல்[4] மற்றும் ஹெறாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியமர்ந்தனர். அல்குவின் ஆட்சியின் போது சகதாயி கானரசுடன் இணைந்த ஆப்கானிஸ்தானில் இருந்த மங்கோலியர்கள் இவரது பெயரைத் தங்களது குழுவுக்கு வைத்துக்கொண்டனர். இன்று மங்கோலியாவில் அற்றுவிட்ட ஒரு பழமையான மங்கோலிய மொழியின் வடிவமான நிகுதரி என்ற மொழியானது ஆப்கானிஸ்தானில் வழக்கில் உள்ளது. இந்த மொழி நெகுதரின் பெயரைக் கொண்டுள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. HISTORY OF THE WORLD FROM THE EARLIEST PERIOD TO THE PRESENT TIME by EVERT A. DUYCKINCK, pg. 128
  2. Early Mongol Rule in Thirteenth-Century Iran: A Persian Renaissance by George Lane, pg 77
  3. Shiraz in the Age of Hafez: The Glory of a Medieval Persian City by John W. Limbert, pg.145
  4. India as Seen by Babur, AD 1504–1530 by R. Nath, pg. 23
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகுதர்&oldid=3489560" இலிருந்து மீள்விக்கப்பட்டது