உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்கே கான் (இறப்பு 1266) (மற்றொரு உச்சரிப்பு: பிர்கை; மொங்கோலியம்: Бэрх хаан, தாத்தரியம்: Бәркә хан) என்பவர் ஒரு மங்கோலிய இராணுவத் தளபதியும், செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவாகிய தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆட்சியாளராக இவர் இருந்தார்.[1] 1257ஆம் ஆண்டு முதல் 1266ஆம் ஆண்டு வரை நீல நாடோடிக் கூட்டம் மற்றும் வெள்ளை நாடோடிக் கூட்டங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார்.[2] மேற்கு பகுதியில் இருந்த நீல நாடோடிக் கூட்டத்தின் கானாகத் தன் அண்ணன் படு கானுக்குப் பிறகு பதவியேற்றார். மங்கோலியப் பேரரசில் இருந்த ஒரு கானரசில் அதிகாரப்பூர்வச் சமயமாக இசுலாமை முதன்முதலில் நிறுவியது இவர் தான்.[3] பாரசீகத்தில் இருந்த மற்றொரு மங்கோலியக் கானரசான ஈல்கானரசுக்கு எதிராக எகிப்திய மம்லூக்குகளுடன் இவர் அணி சேர்ந்தார். டொலுய் வழித்தோன்றல்களின் உள்நாட்டுப் போரில் அரிக் போகேவை ஆதரித்தார். ஆனால் அவருக்கு ஆதரவாக இராணுவ நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. ஏனெனில் பெர்கே தானே ஒரு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

முன்னோர்

[தொகு]
எசுகெய் பகதூர்
செங்கிஸ் கான்
ஓவலுன்
சூச்சி
தய் செச்சென்
போர்த்தே உசின்
தச்சோதன்
பெர்கே கான்
சுல்தான் கதுன்

குறிப்புகள்

[தொகு]
  1. The Russian colloquial name Golden Horde for the Kipchak Khanate is believed to have been derived from the steppe color system for the cardinal directions: black  – north, blue  – east, red  – south, white  – west, and yellow (or gold)  – center, or from the golden field tent of the ruler.
  2. In this terminology the names Blue and White follow the Persian usage, as do most contemporary historians; in Turkish usage they are reversed, causing some confusion in secondary literature.
  3. De Weese, Devin (1994). Islamization and Native Religion in the Golden Horde. Penn State Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-271-01073-8.
பெர்கே
இறப்பு: 1266
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
உலகாச்சி
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்
1257–1266
பின்னர்
மெங்கு-திமுர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்கே&oldid=3805157" இலிருந்து மீள்விக்கப்பட்டது