அஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஜு (அல்லது அச்சு) (1227-1287) என்பவர் மங்கோலியப் பேரரசின் யுவான் அரசமரபின் ஒரு தளபதி மற்றும் வேந்தர் ஆவார். மங்கோலிய உரியாங்கை இனத்தின் ஜர்சுட் பிரிவில் பிறந்தார். இவரது தந்தை யுவான் அரசமரபின் தளபதியான உரியாங்கடை ஆவார். இவரது தாத்தா செங்கிஸ் கானின் நோயனும் மற்றும் கௌரவிக்கப்பட்ட தளபதியுமான சுபுதை ஆவார்.

சுயசரிதை[தொகு]

1253 ஆம் ஆண்டு தனது தந்தையைப் பின்பற்றி இவர் தலி இராச்சியத்தை வென்றார். 1255 ஆம் ஆண்டு உரியாங்கடை மற்றும் அஜு 3,000 மங்கோலியர்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட தலி பழங்குடியினத் துருப்புகளை வடக்கு வியட்நாமிற்கு வழிநடத்தினார். ஒரு வெளியிடத்தில் நடந்த சண்டையில் அடைந்த தோல்விக்கு பிறகு திரான் அரசமரபின் அரசர் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டார்;[1] குப்லாய் கானின் ஆட்சி வரை அவர்கள் கப்பம் கட்டிக் கொண்டிருந்தனர்.[2]

உசாத்துணை[தொகு]

  1. Connolly, P. (1998). பக். 332. [Full citation needed]
  2. Grousset, René. Empire of Steppes. ; Atwood, Christopher P. E.. "Aju". Encyclopedia of Mongolia and the Mongol Empire. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜு&oldid=2967850" இருந்து மீள்விக்கப்பட்டது