கய்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கய்டு[1] என்பவர் மங்கோலியக் ககான் ஒக்தாயியின் பேரன் ஆவார். மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான சகதாயி கானரசின் நடைமுறைப்படி உண்மையான ஆட்சியாளராக இருந்தார். இவர் சிஞ்சியாங் மற்றும் நடு ஆசியாவின் பகுதிகளை 13ஆம் நூற்றாண்டின் போது ஆண்டு வந்தார். இவர் யுவான் அரசமரபைத் தோற்றுவித்த குப்லாயை எதிர்த்து ஆட்சி நடத்தினார். நடுக்கால வரலாற்றாளர்கள் அடிக்கடி கதானைக் கய்டு எனத் தவறாக மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர். இதன் காரணமாகக் கய்டு இலெக்னிகா யுத்தத்தில் பங்கெடுத்தார் எனத் தவறாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் கதான் என்பவர் குயுக்கின் தம்பி ஆவார். கய்டுவுக்கு உறவினர் ஆவார்.[2]

சிஞ்சியாங்கின் எங்கி நகரத்தின் நடுவில் ஓடும் கய்டு ஆறு.

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Man, John (2006). Kublai Khan – The Mongol King Who Remade China. Bantam Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-055-381-718-8.
  2. Chambers, James. The Devil's Horsemen: The Mongol Invasion of Europe. Atheneum. New York. 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-689-10942-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கய்டு&oldid=3539578" இலிருந்து மீள்விக்கப்பட்டது