உள்ளடக்கத்துக்குச் செல்

தோரேசின் கதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டோரேஜின் கதுன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டோரேஜின் கதுன் (இன்னொரு பெயர் துரகினா) ஒரு பெரிய கதுன் மற்றும் 1241ல் அவரது கணவர் ஒக்தாயி கானின் இறப்பிலிருந்து 1246ம் ஆண்டு அவரது மூத்த மகன் குயுக் கான் தேர்ந்தெடுக்கப்படும் வரை மங்கோலியப் பேரரசின் பிரதிநிதியாக இருந்தார்.

டோரேஜின் கதுனின் ஆட்சிக் காலத்தில் (1244–46) அநேகமாக ஜார்ஜியா அல்லது அசர்பைஜானில் அச்சிடப்பட்ட ஒரு நாணயம்.

பின்னணி

[தொகு]

நைமன் பழங்குடியினரில் பிறந்த டோரேஜின் முதலில் மெர்கிட்களின் ஒரு தலைவனான குடுவுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டார்.[1] ஆனால் ரசித்-அல்-தின் ஹமதனி இவரது முதல் கணவர் மெர்கிட்டுகளின் டெய்ர் உசுன் என்று பெயரிட்டுள்ளார்.[2] 1204 ஆம் ஆண்டில் செங்கிஸ் கான் மெர்கிட்களை வெற்றி பெற்றபோது, அவர் டோரேஜினை ஒக்தாயிக்கு இரண்டாவது மனைவியாகக் கொடுத்தார். ஓகோடிக்கு முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லாத போதும், டோரேஜின் அவருக்கு ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தார்.

ஓகோடியின் அனைத்து மனைவிகளையும் ஆளுமையில் இவர் மறைத்து, நீதிமன்ற அதிகாரிகள் மத்தியில் படிப்படியாக தனது செல்வாக்கை அதிகரித்தார். ஆனால் டோரேஜினுக்கு ஓகோடியின் அதிகாரிகளுடனும் மற்றும் நிர்வாகத்தை மையப்படுத்தி வரி சுமைகளை குறைக்கும் கொள்கையிலும் கோபம் இருந்தது. டோரேஜின் வடக்கு சீனாவில் தாவோயிச மதச் சட்டங்களை மறுபதிப்பு செய்வதற்கு உதவி செய்தார்.[3] டோரேஜினின் செல்வாக்கினால், ஒக்தாயி சீனாவில் வரி வசூலிப்பாளராக அப்த்-உர்-ரஹ்மானை நியமித்தார்.

மங்கோலியப் பேரரசின் பெரிய கதுன்

[தொகு]

ஒக்தாயி 1241ல் இறந்த உடனேயே, முதன் முதலில் அதிகாரம் ஓகோடிக்கு உரிமையான செங்கிஸ்கான் மனைவியர்களில் ஒருவரான மொகேவுக்குச் சென்றது. ஜகாடேய் மற்றும் அவரது மகன்களின் ஆதரவுடன் டோரேஜின் 1242ம் வருட இளவேனிற்காலத்தில் பெரிய கதுனாக, பிரதிநிதியாக முழு அதிகாரத்தையும் பெற்றார்[4] தனது இறந்த கணவரின் மந்திரிகளை பதவி நீக்கம் செய்து தனது சொந்த ஆட்களை பதவியில் அமர்த்தினார், அவர்களில் முக்கியமானவர் மங்கோலியர்களின் மத்திய ஆசியப் போரில் பிடிக்கப்பட்ட தஜிக் அல்லது பெர்சிய கைதி ஃபாத்திமா. இவர் மசத் நகர சியா இசுலாமிய சன்னிதியை மங்கோலியாவிற்கு நாடுகடத்திய ஒரு சியா இசுலாமியராவார்.

தோரேசின் தன் கணவர் ஓகோடியின் முக்கிய அதிகாரிகள் பலரைக் கைது செய்ய முயன்றார். இவரது கணவரின் தலைமைச் செயலாளர் சின்கை இதில் முக்கியமானவர் ஆவர். நிர்வாகி மகமுத் யலவச் வடக்கு சீனாவில் உள்ள தன் மகன் கோடெனிடம் தஞ்சமடைந்தார். துர்க்கிஸ்தான் நிர்வாகியான மசூத் பேக் ரஷ்யாவில் இருந்த படு கானிடம் தப்பியோடினார். டோரேஜின் ஜகாடேயின் விதவையை எதிர்த்த ஈரானிலிருந்த கொர்கசைக் கைது செய்து அவரிடம் ஒப்படைத்தார். ஜகாடேய் கானேடின் கானான காரா ஹுலாகு அவருக்கு மரண தண்டனை விதித்தார். டோரேஜின் ஒயிரட்டுகளின் அர்குன் அகாவை பெர்சிய கவர்னராக நியமித்தார்.

தோரேசின் வட சீனாவில் பொது நிர்வாகத்தின் பொறுப்பாளராக அப்த்-உர்-ரஹ்மானை பதவியில் அமர்த்தினார் மற்றும் ஃபாத்திமா மங்கோலிய நீதிமன்றத்தில் இன்னும் சக்திவாய்ந்தவராக ஆனார். இந்த நடவடிக்கைகள் மங்கோலிய பிரபுக்களை வருவாய்க்கான மிரட்டல் கோரிக்கைகளுக்கு வெறித்தனமாக வழிநடத்தியது.

மங்கோலிய வெற்றிகளில் பங்கு

[தொகு]

சீனாவில் இருந்த ஓகோடியின் தளபதிகளுடன் டோரேஜின் நட்புறவு கொண்டிருந்தார். மங்கோலியாவிற்கும் சாங் துருப்புக்களுக்கும் இடையிலான மோதல்கள் செங்டு பகுதிகளில் நடந்தன. சமாதான பேச்சுவார்த்தைக்கு டோரேஜின் தூதர்களை அனுப்பினார், ஆனால் சாங் அவர்களை சிறைவைத்தனர்.[5] மங்கோலியர்கள் ஹங்சோவைக் கைப்பற்றி, 1242ல் சிச்சுவான் மீது படையெடுத்தனர். இவர் சாங் வம்சத்தைத் தாக்குவதற்கு சங் ரோ மற்றும் சகனுக்கு ஆணையிட்டார். சாங் பிரதேசத்தை அவர்கள் தாக்கியபோது, சாங் அமைச்சரவை போர்நிறுத்தத்திற்கு ஒரு குழுவை அனுப்பியது. மங்கோலியர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு சகன் மற்றும் சங் ரோ வடக்கிற்குத் திரும்பினர்.[6]

ஒக்தாயி ஆட்சியின்போது, ரும் செல்ஜுக்குகள் நட்பிற்குத் தூது அனுப்பினர். சோர்மகனுக்கு மிதமான கப்பம் அனுப்பினர்.[7] ஆயினும், இரண்டாம் கய்குசரா ஆட்சியின் கீழ், மங்கோலியர்கள் சுல்தானை நேரில் மங்கோலியாவுக்கு செல்வதற்கும், பணயக்கைதிகளைக் கொடுப்பதற்கும் மற்றும் மங்கோலியா தருகச்சியை (வரி வசூல் செய்பவர்கள்) ஏற்பதற்கும் அழுத்தம் கொடுத்தனர். 1240ல் மங்கோலியத் தாக்குதல்கள் தொடங்கின. செல்ஜுக் சுல்தான் கய்குசரா அவர்களை சந்திக்க ஒரு பெரிய இராணுவத்தை கூட்டிவந்தார். சிசிலிய ஆர்மீனியாவின் அரசர் 1400 குதிரை ஈட்டி வீரர்களையும், நிக்காவின் பேரரசர் 400 குதிரை ஈட்டி வீரர்களையும் அனுப்ப வேண்டியிருந்தது. இரு ஆட்சியாளர்களும் சுல்தானை கய்சேரி என்ற இடத்தில் சந்தித்து விவரங்களை பேச்சுவார்த்தை நடத்தினர். திரபிசோந்தின் கம்பீரமான கொம்னெனோஸ் 200 வீரர்களையும், அதே சமயத்தில் அலெப்போவின் இளம் அயூப்பிய இளவரசர் 1000 குதிரை வீரர்களையும் வழங்கினார்.[8] இவை தவிர, கய்குசரா செல்ஜுக் இராணுவம் மற்றும் ஒழுங்காக ஒருங்கிணைக்கப்படாத துருக்கியர் அடங்கிய குதிரைப்படைக்குத் தலைமை தாங்கினார், எனினும் இரு படைகளும் பாபா இசக் கிளர்ச்சியால் பலவீனமடைந்திருந்தன. இருப்பினும், மங்கோலியத் தளபதி பைஜூ மற்றும் அவரது ஜார்ஜிய துணைப்படை 1243ல் நடந்த கோஸ் டக் போரில் இவர்களை நொறுக்கினர். இந்தப் போருக்குப் பின், ரும் சுல்தானகம், திரபிசோந்தின் பேரரசு மற்றும் ஆர்மீனிய சிற்றரசு ஆகியவை விரைவில் தங்கள் விசுவாசத்தை ஒவ்வொருவராக மங்கோலியப் பேரரசை ஆண்ட டோரேஜின் கதுனிடம் அறிவித்தனர்.

மங்கோலிய துருப்புகள் தளபதி பைஜுவின் தலைமையில் ஈராக்கிய அப்பாசிட்கள் மற்றும் சிரிய அயூப்பிட்களின் படைகளை 1244-46 வரை ஆட்சி செய்தனர்.

குயுக்கின் முடிசூட்டுதல்

[தொகு]

இவர் பாரம்பரியமாக ஆண்களால் மட்டுமே வழிநடத்தப்பட்ட ஒரு சமுதாயத்தில் அதிகாரத்தில் இருந்தார். சாம்ராஜ்யத்திற்குள் பல போட்டியிடும் சக்திகள் மற்றும் செங்கிஸ் கானின் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினரை சமநிலைப்படுத்தவும் செய்தார், 5 ஆண்டுகளுக்கும் மேலாக, பேரரசை ஆட்சி செய்தது மட்டுமின்றி, இவரது மகன் குயுக்கின் பெரிய கானாக முடிசூட்டுதலுக்கு ஏற்ற அரங்கத்தையும் அமைத்தார் . டோரேஜினின் ஆட்சியின் போது, வெளிநாட்டுப் பிரமுகர்கள் பேரரசின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து இவரது தலைநகரான கரகோரம் அல்லது இவரது நாடோடி ஏகாதிபத்திய முகாமுக்கு வருகை புரிந்தனர். பாக்தாத்தில் உள்ள அப்பாசியக் கலிபகப் பிரதிநிதிகளைப் போலவே துருக்கியிலிருந்து செல்ஜுக் சுல்தானும் வருகை புரிந்தார். ஜார்ஜியாவின் சிம்மாசனத்திற்கு உரிமை கோரிய இருவர்: இறந்த மன்னரின் முறையற்ற மகன் தாவீது உலு, அதே மன்னரின் நியாயமான மகன் தாவீது நரின். மிக உயர்ந்த தரமான ஐரோப்பிய பிரதிநிதியானவர் அலெக்சாந்தர் நெவ்ஸ்கியின் தந்தையும், விளாடிமிர் மற்றும் சுஸ்டலின் இளவரசருமான யரோஸ்லாவ் விசேவோலோடோவிச் ஆவார், எனினும் இவர் டோரேஜின் கதுனுடன் உணவு உண்ட பின்னர் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

மங்கோலியர்கள் பலதாரமணத்தைப் பின்பற்றினர். ஒக்தாயி கானுக்குப் பிடித்த மகன் கொஜு ஆவார், இவர் மற்றொரு மனைவியின் மூலம் பிறந்த மகன் ஆவார், கொஜுவின் மகன் சிரமுன், மேலும் 1237ம் ஆண்டில் அவரது தந்தை திடீரென சீனாவில் இறந்தபின், சிரமுன்னை கொஜுவின் பதவியை ஏற்கும்படி ஒக்தாயி பரிந்துரைத்தார். ஆனால் கொஜு டோரேஜினின் மகனாக இருப்பதாக சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன, மேலும் சிறுவயது சிரமுன் வெற்றி பெறுவதை டோரேஜின் விரும்பவில்லை.[1] டோரேஜின் குயுக்குக்கு ஆதரவாக இவ்விருப்பத்தை எதிர்த்தார், ஆனால் டோரேஜினுக்கு கிடைத்த மகத்தான செல்வாக்கு இருந்த போதிலும், அவரது தேர்வுகளை மாற்றி ஓகோடியை இணங்கச் செய்ய இவரால் முடியவில்லை. ஆனாலும், இவளது இலக்குகளை தந்திரமான முறையில் அடைந்தாள். சிறிய கான்கள் இவரை பிரதிநிதியாக இவரது கணவரின் இறப்பிற்குப் பிறகு நியமித்தபோது, இவர் தனது விருப்பப்பட்டவர்களை ஏகாதிபத்திய குடும்பத்தில் உயர் பதவிகளுக்கு நியமித்தார், அவரது மகன் குயுக்கை உயர்த்துவதற்கான ஒரு வெற்றிகரமான திட்டமாக இதை உபயோகித்தார். செங்கிஸ் கானின் இளைய சகோதரர் தெமுகே ஒச்சிகன், அவரது ஆட்களைத் திரட்டி, அரியணையை கைப்பற்ற முயன்றார், குயுக் உடனடியாக அவரை சந்திக்க வந்தார். டோரேஜின் குறுல்த்தாய் நடைபெறுவதை தனது மகன் குயுக்குக்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை தடுத்து வைத்திருந்தார். 1246ல் டோரேஜின் தனது மகன் குயுக்குக்கு அதிகாரத்தை அளித்தார். பிறகு தோரேசின் ஒக்தாயி பரிசாகப் பெற்ற நிலங்களுக்கு மேற்கில் எமில் ஆற்றினருகில் ஓய்வு பெற்றார்.

குயுக்கை ககானாகத் தேர்ந்தெடுப்பதில் அவரது பங்கு இருந்தபோதிலும், டோரேஜினுக்கும் அவரது மகனுக்கும் இடையேயான உறவு இறுதியில் சரிந்தது. குயுக்கின் சகோதரர் கோடென் அவரது உடல்நலத்தை சேதப்படுத்த மாந்திரீகம் பயன்படுத்தியதாக ஃபாத்திமாவை குற்றம் சாட்டினார்; சில மாதங்களுக்குப் பிறகு கோடென் இறந்தபோது, குயுக் தனது தாயை, ஃபாத்திமாவை மரண தண்டனைக்கு உட்படுத்த ஒப்படைக்க வலியுறுத்தினார். டோரேஜின் தன் மகன் குயுக்கிடம் ஃபாத்திமாவை விடுவிக்க தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தினார். குயுக்கின் ஆட்கள் ஃபாத்திமாவைக் கைப்பற்றி, அவளுடைய அனைத்து உடற்துளைகளையும் தையல் போட்டு, தண்ணீருக்குள் மூழ்கடித்தனர்; ஏகாதிபத்திய குடும்பத்திலிருந்த டோரேஜினின் ஆதரவாளர்கள் ஒரே சமயத்தில் சுத்திகரிக்கப்பட்டனர்.[9] ஃபாத்திமா இறந்து 18 மாத காலத்திற்குள், டோரேஜின் தற்போதுவரை விவரிக்கப்படாத சூழ்நிலையில் இறந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 C. P. Atwood Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.544
  2. Rashid al-Din-Jami al-tawarikh, Ta'rikh-i Ghazani
  3. Australian National University. Institute of Advanced Studies East Asian History, p.75
  4. The journey of William of Rubruck to the eastern parts of the world, 1253-55, p.62
  5. Jeremiah Curtin The Mongols A History, p.343
  6. J.Bor Mongol hiiged Eurasiin diplomat shastir, vol.II, p.224
  7. C. P. Atwood Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.555
  8. Simon de Saint-Quentin, Histoire des Tartares, xxxi.143-144.
  9. Man, John (2006). Kublai Khan: From Xanadu to Superpower. London: Bantam Books. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780553817188.

மேற்கோள்கள்

[தொகு]
தோரேசின் கதுன்
நைமன் குடும்பம் (1242–1246)
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் மங்கோலியப் பேரரசின் பெரிய கதுன் (பிரதிநிதியாக)
1242–1246
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரேசின்_கதுன்&oldid=3460227" இலிருந்து மீள்விக்கப்பட்டது