புயந்து கான்
அயுர்பர்வத புயந்து கான் யுவானின் ரென்சோங் பேரரசர் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 8வது ககான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே) யுவான் வம்சத்தின் 4வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |||||||||||||||||||||
யுவான் சகாப்தத்தின் போது புயந்து கான் (பேரரசர் ரென்சோங்) சித்திரம். | |||||||||||||||||||||
யுவான் வம்சத்தின் பேரரசர் | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | ஏப்ரல் 7, 1311 – மார்ச் 1, 1320 | ||||||||||||||||||||
முடிசூட்டுதல் | ஏப்ரல் 7, 1311 | ||||||||||||||||||||
முன்னையவர் | குலுக் கான் | ||||||||||||||||||||
பின்னையவர் | ஜெஜீன் கான் | ||||||||||||||||||||
பிறப்பு | ஏப்ரல் 9, 1285 | ||||||||||||||||||||
இறப்பு | மார்ச்சு 1, 1320 | (அகவை 34)||||||||||||||||||||
மனைவி | ரத்னசிறி | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மரபு | போர்ஜிஜின் | ||||||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||||||
தந்தை | தர்மபாலா | ||||||||||||||||||||
தாய் | கொங்கிராட்டின் டகி |
புயந்து கான் (மொங்கோலியம்: Буянт хаан), பிறப்புப் பெயர் அயுர்பர்வதா, ரென்சோங் (யுவானின் பேரரசர் ரென்சோங்) (சீன மொழி: 元仁宗, ஏப்ரல் 9, 1285 – மார்ச் 1, 1320) என்ற கோயில் பெயராலும் அழைக்கப்படும் இவர், யுவான் வம்சத்தின் 4வது பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 8வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. மங்கோலிய மொழியில் அவரது பெயருக்கு "ஆசிர்வதிக்கப்பட்ட / நல்ல கான்" என்று பொருள். இவரது பெயரான "அயுர்பர்பத" சமஸ்கிருத கலவையான "அயுர்-பர்வத" என்பதிலிருந்து வந்தது, அதாவது "நீண்ட ஆயுள் மலை" என்று பொருள்படுவதாகும், இது பேரரசர் வுசோங்கின் பெயரான கைசனிலிருந்து (சீனா மொழியில் "மலைகளும் கடல்களும்" என்று பொருள்) மாறுபட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ See Yao Dali 姚大力, "Yuan renzong yu zhongyuan zhengzhi" 元仁宗与中元政治 (Emperor Renzong and the Mid-Yuan Politics), Mengyuan zhidu yu zhengzhi wenhua 蒙元制度与政治文化, Beijing: Beijing daxue chubanshe, 2011.