மங்கோலியர்களின் மூன்றாவது போலந்து படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கோலியர்களின் மூன்றாவது போலந்து படையெடுப்பானது 1287-88ஆம்[1] ஆண்டுகளில் தலபுகா கான் மற்றும் நோகை கானால் நடத்தப்பட்டது. இப்படையெடுப்பின் முக்கிய நோக்கமானது போலந்தை சூறையாடுவதாகும். அங்கேரிய மற்றும் ருதேனிய விவகாரங்களில் டியூக் கருப்பு இரண்டாம் லெசக் தலையிடுவதை தடுக்கவும் இது நடத்தப்பட்டது. இந்த படையெடுப்பானது போலந்து மற்றும் ருதேனியாவுக்கு இடையிலான சண்டையின் ஒரு பகுதியாகவும் இருந்தது. 1281ஆம் ஆண்டு போலந்துக்காரர்கள் கோசுலிக்கிற்கு அருகில் ஒரு மங்கோலிய படையை தோற்கடித்தனர். மங்கோலியர்கள் முதலாம் லெவ்வுக்கு ஆதரவாக டியூக் லெசெக்கின் பகுதிக்குள் நுழைந்திருந்தனர்.[2]

மரபு[தொகு]

நாட்டுப்புறக் கதாபாத்திரமான லஜ்கோனிக் இந்த படையெடுப்பிலிருந்துதான் உருவானதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. இந்த நாட்டுப்புறக் கதாபாத்திரமானது, கிராகோ நகரத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. போலந்துக் காரர்களின் ஒரு குழுவானது திசம்பர் 1287ஆம் ஆண்டு கிராகோ நகரத்தின் சுவர்களுக்கு வெளியே ஒரு மங்கோலிய முகாமைக் கண்டுபிடித்தது. மங்கோலியர்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது போலந்துக் காரர்கள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். பல மங்கோலியத் தளபதிகள் கொல்லப்பட்டனர். முற்றுகை நடத்திய தளபதியும் இதில் கொல்லப்பட்டார். போலந்து நாட்டுக் குழுவின் தலைவர் மங்கோலியத் தளபதி உடுத்தியிருந்த ஆடையை உடுத்திக்கொண்டு நகருக்குள் நுழைந்தார்.[3][4]

உசாத்துணை[தொகு]

  1. Krakowski, p. 181
  2. Jackson, p. 202
  3. Abulafia, David (1999). The New Cambridge Medieval History. Volume 5. Cambridge University Press. p. 760. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-36289-X.
  4. Lonely Planet Poland Travel Guide.