தலபுகா
தலபுகா என்பவர் 1287 ஆம் ஆண்டு முதல் 1291 ஆம் ஆண்டு வரை மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான தங்க நாடோடி கூட்டத்தின் கானாக பதவி வகித்தார். இவரது தந்தை பெயர் தர்டு. இவரது கொள்ளுத்தாத்தா படு கான். இவர் நோகை கானின் உதவியுடன் பதவிக்கு வந்தார். எனினும் நான்கு வருடங்களுக்கு பிறகு நோகை கானே இவரை பதவி விலகச் செய்தார். நோகை கான் பிறகு தோக்தாவை பதவியில் அமர்த்தினார்.
இறப்பு
[தொகு]ருஸ் சமஸ்தானங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பானது கானான தலபுகா மற்றும் நோகை ஆகிய இருவருக்கும் இடையே பிரிக்கப்பட்டிருந்தது. வடமேற்கே இருந்த ருஸ் நிலங்களை நோகையும், வடகிழக்கே இருந்த நிலங்களை தலபுகாவும் நிர்வகித்தனர். எனினும் தனது பேரரசில் இத்தகைய பிரிவு இருப்பதை தலபுகா விரும்பவில்லை.
தலபுகா மற்றும் மற்ற செங்கிஸ் கான் வழித்தோன்றல்களுக்கு இடையே ஒரு சந்திப்பை நடத்த நோகை அழைப்பு விடுத்தார். அந்த சந்திப்புக்கு தலபுகா தன்னுடைய பாதுகாவலர்கள் இன்றி வந்தார். திடீரென தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு நோகை 1290/1291 ஆம் ஆண்டு தோக்தா மூலம் தலபுகாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.
பரம்பரை
[தொகு]- செங்கிஸ் கான்
- சூச்சி
- படு கான்
- தோகோகன்
- தர்டு
- தலபுகா
உசாத்துணை
[தொகு]- Morgan, David (1986). The Mongols.