கொரியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள்
கொரியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி | |||||||
கொர்யியோ மீதான கி. பி. 1235ஆம் ஆண்டு மங்கோலியப் படையெடுப்பு |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
கொர்யியோ அரசமரபு | மங்கோலியப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சோ வூ பாக் சியோ கிம் உன்-கு லீ யோங்-சங் கிம் கியோங்-சன் சோயி சுன்மியோங் தே சிப்சியோங் லீ சசியோங் சே சாங்-நையியோன் கிம் உன்-கு லீ சேவா கையியோன் ரையியோ | ஒக்தாயி கான் மோங்கே கான் அமுகன் தங்கு புதவு எகே தெகே சரிதை † சலைர்தை |
கொரியா மீதான மங்கோலிய படையெடுப்பு என்பது 1231 முதல் 1270 வரை கொரியாவின் கொர்யியோ அரச மரபுக்கு எதிராக மங்கோலியப் பேரரசு நடத்திய தொடர்ச்சியான படையெடுப்புகளைக் குறிப்பதாகும். குடிமக்களது உயிருக்கு ஏராளமான சேதத்தை ஏற்படுத்திய ஏழு முக்கியமான படையெடுப்புகள் நடைபெற்றன. கடைசிப் படையெடுப்பானது கொர்யியோவை யுவான் அரசமரபுக்கு அடிபணிந்த அரசாக[1] மாற்றியது. இந்நிலை சுமார் 80 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. கொரிய மன்னர்களிடமிருந்து செல்வம் மற்றும் காணிக்கைகளை யுவான் அரச மரபானது துல்லியமாகப் பெற்றது. யுவான் அரசமரபுக்கு அடிபணிந்து இருந்தாலும் கொர்யியோ அரச குடும்பத்திற்கு இடையேயான உட் சண்டைகள் மற்றும் யுவான் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் தொடர்ந்தன. இவற்றில் மிகப் பிரபலமானது சம்பையியோல்சோ கிளர்ச்சியாகும். ஐரோவாசியாவில் இருந்த மற்ற அரசுகள் மங்கோலியர்களால் மின்னல் வேகத்தில் நொறுக்கப்பட்டன. மங்கோலியப் படையெடுப்புகளுக்கு எதிராக ஐரோவாசியாவின் மற்ற பல அரசுகள் ஏற்படுத்தாத பிடிவாதமான எதிர்ப்பின் பெரும் பங்கைக் கொரியா மற்றும் சாங் அரசமரபு ஆகியவை கொடுத்தன.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ Henthorn, William E. (1963). Korea: the Mongol invasions. E.J. Brill. pp. passim.
- ↑ van Derven, H. J. (1 January 2000). Warfare in Chinese History. BRILL. pp. 222–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11774-1.