நிசாரிகளுக்கு எதிரான மங்கோலியர்களின் போர்ப்பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசாசின்கள் என்று அழைக்கப்பட்ட அலமுத் கால நிசாரிகளுக்கு எதிரான மங்கோலியர்களின் போர் பயணம் 1253 ஆம் ஆண்டு தொடங்கியது. ஈரானின் குவாரசமியப் பேரரசை மங்கோலியப் பேரரசு வென்ற பிறகு மற்றும் ஒரு தொடர்ச்சியான நிசாரி-மங்கோலிய சண்டைகளுக்கு பிறகு இது தொடங்கியது. இந்த போர் பயணமானது மோங்கே கானால் ஆணையிடப்பட்டது. ஹுலாகு கானால் நடத்தப்பட்டது.

ஆரம்பகால நிசாரி-மங்கோலிய உறவுகள்[தொகு]

1221 ஆம் ஆண்டு நிசாரி தூதுவர்கள் பால்க் நகரில் செங்கிஸ் கானை சந்தித்தனர்.[1]

அலமுத்தின் மூன்றாம் முகமத்தின் நாணயம்

மங்கோலிய படையெடுப்பின் விளைவாக குவாரசமிய அரசமரபு வீழ்ந்தது. அதற்குப் பிறகு இமாம் அலமுத்தின் மூன்றாம் முகம்மத் தலைமையிலான நிசாரிகள் மற்றும் ஒகோடி கான் தலைமையிலான மங்கோலியர்களுக்கு இடையே நேரடி மோதல் தொடங்கியது. அந்த நேரத்தில் மீதமிருந்த பாரசீகத்தை வெல்லும் செயலை ஒகோடி கான் அப்போதுதான் தொடங்கியிருந்தார். வெகு விரைவாகவே குமிஸ் பகுதியிலிருந்த தம்கன் நகரத்தை மங்கோலியர்களிடம் நிசாரிகள் இழந்தனர். குவாரசமிய ஷாக்களின் வீழ்ச்சிக்கு பிறகு அந்த நகரத்தின் கட்டுப்பாட்டை அப்போதுதான் நிசாரிகள் எடுத்திருந்தனர்.[2]

மங்கோலியர்களுக்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்த நிசாரி இமாம் சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வரை தூது அனுப்பினார்.[3] 1238 ஆம் ஆண்டு அவர் மற்றும் அப்பாசிய கலிப் அல்-முசுதன்சிர் ஆகியோர் ஒரு கூட்டு தூதுவ குழுவை பிரான்சின் ஒன்பதாம் லூயிஸ் மற்றும் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்ட் ஆகிய ஐரோப்பிய மன்னர்களுக்கு, மங்கோலியர்களுக்கு எதிராக ஒரு முஸ்லிம்-கிறித்தவ கூட்டணியை ஏற்படுத்த அனுப்பினர். ஆனால் இம்முயற்சி வெற்றியடையவில்லை. ஐரோப்பிய மன்னர்கள் பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக மங்கோலியர்களுடன் கூட்டணி அமைத்தனர்.[2][4]

உசாத்துணை[தொகு]

  1. Daftary, Farhad (2012) (in en). Historical Dictionary of the Ismailis. Scarecrow Press. பக். xxx. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-6164-0. 
  2. 2.0 2.1 Daftary, Farhad (1992) (in en). The Isma'ilis: Their History and Doctrines. Cambridge University Press. பக். 418-420. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-42974-0. https://books.google.com.ua/books?id=kQGlyZAy134C&pg=PA418. 
  3. B. Hourcade, “ALAMŪT,” Encyclopædia Iranica, I/8, pp. 797-801; an updated version is available online at http://www.iranicaonline.org/articles/alamut-valley-alborz-northeast-of-qazvin- (accessed on 17 May 2014).
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Daftari2000 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை