அர்குன்
தோற்றம்
| அர்குன் | |
|---|---|
அரியணையில் தன் கதுனுடன் அர்குன் (குதுலுக் கதுனாக இருக்க வாய்ப்பு அதிகம்) | |
| ஈல்கான் | |
| ஆட்சிக்காலம் | 11 ஆகத்து 1284 – 12 மார்ச் 1291 |
| குப்லாய் உறுதி செய்தார் | 23 பெப்ரவரி 1286 |
| முன்னையவர் | தேகுதர் |
| பின்னையவர் | கய்கது |
| பிறப்பு | 8 மார்ச்சு 1258 பய்லகன் |
| இறப்பு | மார்ச்சு 10, 1291 (அகவை 33) பக்சா, அர்ரான் |
| புதைத்த இடம் | 12 மார்ச் 1291 சோஜாசுக்கு அருகில் |
| துணைவர் | குத்லுக் கதுன் உருக் கதுன் தோடை கதுன் சல்யூக் கதுன் புலுகான் கதுன் குதை கதுன் புலுகான் கதுன் குல்தக் அகாச்சி அர்கானா அகாச்சி ஒல்ஜடை கதுன் |
| குழந்தைகளின் பெயர்கள் | கசன் ஒல்ஜைடு |
| அரசமரபு | போர்சிசின் |
| தந்தை | அபகா |
| தாய் | கைத்மிஷ் எகேச்சி |
| மதம் | பௌத்தம் |
அர்குன் கான் என்பவர் மங்கோலியப் பேரரசின் ஈல்கானரசின் நான்காவது ஆட்சியாளர் ஆவார். இவர் 1284 முதல் 1291 வரை ஆட்சிபுரிந்தார். இவர் அபகா கானின் மகன் ஆவார். இவரின் தந்தையைப் போலவே இவர் ஒரு பக்தியுடைய பௌத்தராக விளங்கினார். திருநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பிராங்கோ-மங்கோலியக் கூட்டணியை ஏற்படுத்த முயற்சித்து ஐரோப்பாவிற்குப் பல தூதுக்குழுக்களை இவர் அனுப்பினார். ஆனால் இவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இவர் தனது பெரிய தாத்தா குப்லாய் கானிடம் ஒரு புது மணப் பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அந்த இளம் கோகோசினை ஆசியா வழியாக அர்குனிடம் கொண்டு வரும் பொறுப்பு மார்க்கோ போலோவால் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கோகோசின் வருவதற்கு முன்னரே அர்குன் இறந்துவிட்டார். எனவே கோகோசின் அர்குனின் மகன் கசனைத் திருமணம் செய்து கொண்டார்.[1][2]

குறிப்புகள்
[தொகு]- ↑ Date was converted to Gregorian by Charles Melville. See: Melville, Charles (1994) - The Chinese-Uighur Animal Calendar in Persian Historiography of the Mongol Period
- ↑ "ARḠŪN KHAN – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. Retrieved 2020-04-25.