அபகா கான்
Jump to navigation
Jump to search
அபகா கான் என்பவர் ஈல்கானகத்தின் இரண்டாவது மங்கோலிய மன்னன் ஆவார். இவரது தந்தை ஹுலாகு கான். தாய் எசுன்சின். இவர் டொலுயின் பேரன் ஆவார். இவரது ஆட்சிக்காலம் 1265-1282 ஆகும். இவருக்குப் பிறகு இவரது தம்பி அகமது தேகுதர் ஆட்சி செய்தார்.[1] அபகாவின் பெரும்பாலான ஆட்சிக்காலமானது மங்கோலியப் பேரரசில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலேயே கழிந்தது. குறிப்பாக ஈல்கானகம் மற்றும் வடக்கில் இருந்த தங்க நாடோடிக் கூட்டம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற போரைக் குறிப்பிடலாம். தோல்வியில் முடிந்த சிரியா மீதான படையெடுப்பிலும் இவர் பங்கெடுத்தார். இரண்டாம் ஹோம்ஸ் யுத்தத்திலும் பங்கெடுத்தார்.
வாழ்க்கை[தொகு]
இவர் பெப்ரவரி 1234இல் மங்கோலியாவில்[2] பிறந்தார். அபகா புத்த மதத்தை சேர்ந்தவர் ஆவார். ஹுலாகுவின் விருப்பத்திற்குரிய மகனான இவர் துருக்கிஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[3]
உசாத்துணை[தொகு]
- ↑ "ABAQA – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. 2020-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ABAQA – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. 2020-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Runciman, p. 320.