பல்கேரியா மற்றும் செர்பியா மீதான மங்கோலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்கேரியா மற்றும் செர்பியா மீதான மங்கோலியப் படையெடுப்பு 1240ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் நடைபெற்றறது. மங்கோலியர்களின் ஐரோப்பிய படையெடுப்பின் போது படு கான் மற்றும் கதான் தலைமையிலான மங்கோலிய தியூமன்கள் செர்பியா மற்றும் பல்கேரியா மீது படையெடுத்தன. மொகி யுத்தத்தில் அங்கேரியர்களை தோற்கடித்த பிறகு, குரோவாசியா, டால்மேசியா மற்றும் போஸ்னியா ஆகிய அங்கேரிய பகுதிகளுக்கு அழிவுகளை ஏற்படுத்திய பிறகு இந்த படையெடுப்பை அவர்கள் நடத்தினர்.

ஆரம்பத்தில் கதானின் துருப்புக்கள் அத்ரியாடிக் கடலின் பக்கவாட்டில் தெற்கு நோக்கி செர்பிய நிலப்பகுதிக்குள் நுழைந்தன. பிறகு கிழக்கு நோக்கி திரும்பி நாட்டின் நடுப்பகுதியை கடந்தன. சென்ற வழியில் அவர்கள் சூறையாடலை தொடர்ந்தனர். பல்கேரியாவை அடைந்தனர். அங்கு படுவின் தலைமையிலான எஞ்சிய இராணுவத்துடன் இணைந்தனர். பல்கேரிய மீதான படையெடுப்பானது பெரும்பாலும் வடக்குப் பகுதியிலேயே நடந்திருக்க வேண்டும். தொல்பொருள் ஆய்வின் படி இக்காலகட்டத்தில் அழிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. எனினும் மங்கோலியர்கள் பல்கேரியாவுக்கு தெற்கில் இருந்த இலத்தீன் பேரரசு மீது தாக்குதல் நடத்த பல்கேரியாவை கடந்தனர். பிறகு முழுவதுமாக பின்வாங்கினர். மங்கோலியர்களுக்கு திறை செலுத்த பல்கேரியா கட்டாயப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இந்நிலையே தொடர்ந்தது.[1][2][3][4][5]

குறிப்புகள்[தொகு]

  1. Sophoulis (2015), ப. 257.
  2. Jackson (2005), ப. 61.
  3. Dimitrov (1997), ப. 14.
  4. Giebfried (2013), ப. 132.
  5. Madgearu (2016), ப. 223–24.