தர்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்கன் (பழைய துருக்கியம்: தர்கன்;[1] மொங்கோலியம்: தர்கன் அல்லது தர்க்ஹன்;[2][3] பாரசீக மொழி: ترخان‎; சீனம்: 達干; அரபு மொழி: طرخان‎; மாற்று உச்சரிப்புகள் தர்கன், தர்கான், தர்ச்சன், துர்க்ஷன், தர்கனி, தர்ஜன், தோர்கியன் அல்லது துர்கன்) மத்திய ஆசியாவில் பயன்படுத்தப்பட்ட பட்டமாகும். இது துருக்கிய மக்கள், இந்தோ-ஐரோப்பியர்கள் (ஈரானியர்கள், தொசாரியர்கள், பஞ்சாபிகள்), மற்றும் மங்கோலியர்களின் முன்னோடிகள், அங்கேரியர்கள் மற்றும் மங்கோலியர்கள் போன்ற பலவிதமான மக்களால் பயன்படுத்தப்பட்டது. மங்கோலியப் பேரரசின் வாரிசுகளின் மத்தியில் இது பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது.

வரலாறு[தொகு]

மங்கோலியப் பேரரசில், தர்கன்கள் வரி மற்றும் நிலவரி ஆகியவற்றிலிருந்து விலக்குப் பெற்றனர். 1206ல் செங்கிஸ் கான் தனது நிலை உயர்வதற்கு உதவி செய்தவர்களைத் தர்கன் ஆக்கினார். யுவான் வம்சம் மற்றும் இல்கானேட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது தர்கன்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார். அபகா கான் (1234-82) மத்திய ஆசியாவிலிருந்து பெர்சியா வரை தனது தாய் மற்றும் அவரது குழுவை பாதுகாப்பாக வழிநடத்திச் சென்ற ஒரு இந்தியரைத் தர்கன் ஆக்கினார். உருசியாவில், கோல்டன் ஹோர்டேயின் கான்கள் தர்கனுக்கு முக்கியப் பணிகளை அளித்தனர். தெமுர் குத்லுக்கின் (1370-1399) ஜர்லிக் ஒருவர் கிரிமியாவின் தர்கன் ஆக்கப்பட்டார். [4]

குறிப்புகள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. http://reff.net.ua/26327-YArlyki_hanov_Zolotoiy_Ordy_kak_istochnik_prava_i_kak_istochnik_po_istorii_prava.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்கன்&oldid=3688238" இருந்து மீள்விக்கப்பட்டது