இப்னு கல்தூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இப்னு கல்தூன்
முசுலிம் அறிஞர்
மத்திய காலம்
Ibn Khaldoun-Kassus.jpg
தூனிசில் உள்ள இப்னு கல்தூனின் சிலை
முழுப் பெயர் இப்னு கல்தூன்
சிந்தனை
மரபு(கள்)
மாலிக்கி மத்ஹப்,
இசுலாமியப் பொருளாதாரச் சட்டவியல்
முக்கிய
ஆர்வங்கள்
சமூக அறிவியல்கள், சமூகவியல், வரலாறு, வரலாற்றுவரைவியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்று மெய்யியல், மக்கட் பரம்பலியல், இராசதந்திரம், பொருளியல், இசுலாம், படைத்துறைக் கோட்பாடு, மெய்யியல், அரசியல், இறையியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மக்கட் பரம்பலியல், வரலாற்று வரைவியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்று மெய்யியல், சமூகவியல், சமூக அறிவியல், தற்காலப் பொருளியல் போன்ற துறைகளின் முன்னோடி.

இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ (அரபு மொழி: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي , , (மே 27, கிபி 1332 /732 AH – மார்ச் 19, கிபி 1406 /808 AH)), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆபிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இறையியல், நீதித்துறை, சட்டம், கணிதம், படைத்துறை உத்திகள், மெய்யியல், சமூக அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். இவர் ஒரு அராபிய அல்லது பர்பர் இனத்தைச் சேர்ந்தவர். இவர், மக்கட் பரம்பலியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்றுவரைவியல், வரலாற்று மெய்யியல், சமூகவியல் போன்ற பல சமூக அறிவியல் துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அறிஞரும், மெய்யியலாளருமான சாணக்கியருடன் இவரும் தற்காலப் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகின்றனர்.

பலர் இவரை இத்தகைய பல சமூக அறிவியல் துறைகளினதும், பொதுவாகச் சமூக அறிவியலினது தந்தையாகவும், மனித வரலாற்றை அறிவியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்த வரலாற்று மேதையாகவும், வரலாற்றுத் தத்துவத்தை தோற்றுவித்த மாபெரும் அறிஞராகவும் கருதுகிறார்கள். Russeo, Locke, Hobbes போன்ற மேற்கத்தேய சிந்தனையாளர்கள் கல்தூணுக்கு இணையானவர்கள் அல்ல என்பது ஒரு புறமிருக்க, அவரோடு இணைத்துப் பேசுவதற்குக்கூட தகுதியற்றவர்கள் என்று ரொபட்(Robert) என்ற அறிஞர் தனது ' வரலாற்றுத் தத்துவங்கள் ' நூலில் குறிப்பிடுகின்றார். இப்னு கல்தூண் உருவாக்கிய வரலாற்றுத் தத்துவம் "முதத்திமா" என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. முதத்திமா என்பது அவரது பெரும் நூலான நான்கு பாகங்களைக்கொண்ட "கிதாபுல் இபர்" என்ற நூலின் நீண்ட முகவுரையாகும்.

இந்த முகவுரையில் சமூகவியல், வரலாற்றுத் தத்துவங்களை எடுத்துக் கூறும் இவர், அதன் அடுத்த பகுதியில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் வாழ்ந்த மனித இனங்களின் வரலாறுகளை ஆய்வு செய்துள்ளார்.

இவர் சமூகங்கள், நாகரீகங்களின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அவைகளின் வீழ்ச்சி போன்றவற்றின் பின்னாலுள்ள வரலாற்று விதிகளை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். அது மட்டுமன்றி பூமியின் சுவாத்திய நிலைமைகள், புவியியல் அம்சங்கள், தார்மீக, ஆத்மீக சக்திகள் என்பன மனித வரலாற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்ந்து எழுதினார். இவ்வாறு புராணங்களாகவும், கர்ண பரம்பரைக்கதைகளாகவும் இருந்த வரலாற்றுத் துறையை ஆதாரபூர்வமான ஒரு அறிவியல் துறையாக மாற்றியமைத்தார்.19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிஞர்கள் இப்னு கல்தூனையும்,அவரது முக்கியமான புத்தகத்தையும் கருத்தில் கொண்டு இப்னு கல்தூன், முஸ்லிம் உலகிலிருந்து வந்த மிகச்சிறந்த மெய்யியலாளர் என ஒப்புக்கொள்கின்றனர்.[1][2]

வாழ்க்கை[தொகு]

இப்னு கல்தூன் எழுதிய அவரது சுயசரிதை நூல்(التعريف بابن خلدون ورحلته غربا وشرقا, அத்தரீப் பி இப்ன் கல்தூன் வ ரிஹ்லது கர்பன் வஜர்கன்)[3]) மூலம் அவரது வாழ்க்கை வரலாறு ஒப்பீட்டளவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.இதன் பல ஆவணங்கள், அவரது வாழ்வை வார்த்தைக்கு வார்த்தை மேற்கோள் காட்டுகின்றது.எனினும் இச்சுயசரிதை ,அவரது சொந்த வாழ்வைப் பற்றி சிறியளவு தகவல்களையே வழங்கியுள்ளது.இதனால், அவரது குடும்பப் பின்னணி பற்றி குறைந்தளவே அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

இவர் பொதுவாக "இப்னு கல்தூன்" என அறியப்படுபவர்.இவர் கி.பி.1332(732 ஹி.வ.) தூனிஸில் பனூ கல்தூன் என்ற அராபிய வம்சவாளி உயர்தர அந்தலூசிய( Andalusian) குடும்பமொன்றில் பிறந்தார்.இவரது குடும்பத்தினர் அந்லூசியயாவில் உயர் அலுவலகங்களில் இருந்தனர். இவர்கள் செவீயா நகரம் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டுக்கள் கி.பி.1248ல் மீளவந்ததன் பின்னர் தூனிஸுக்கு இடம்பெயர்நதனர்.தூனிஸில், ஹாபிஸ் வம்ச ஆட்சியில் இவரின் குடும்பத்தினர் சில அரசியல் அலுவலகங்களில் இருந்தனர்.இப்னுகல்தூனின் தந்தையும், பாட்டனும் அரசியல் வாழ்விலிருந்து விலக்கி ஆன்மீக பாதையில் சேர்ந்துகொண்டனர்.அவரது சகோதரர் யஹ்யா இக்னு கல்தூன் ஒரு வரலாற்றாசிரியராக இருந்ததுடன், அப்துல்வதித்(Abdalwadid) வமிசத்தைப் பற்றி எழுதினார், இவர் நீதிமன்றத்தில் வரலாற்றாசிரியராக நியமணத்தின் போட்டித்தன்மையின் காரணமாக கொலைசெய்யப்பட்டார். [4]

கல்வி[தொகு]

இப்னு கல்தூனின் ஒரு உயர்நிலை குடும்பத்தில் பிறந்திருந்ததால், அவருக்கு மக்ஹ்ரேபில்(Maghreb)இருந்த சிறந்த ஆசியரியர்களிடம் கல்விகற்பதற்கு இயலுமாகக் காணப்பட்டது.இவர் பாரம்பரிய இஸ்லாமிய கல்வியைப் பெற்றார்.குர்ஆனை முழுமையாக மனனம் செய்ததன் மூலம் படித்தார்.அரபு மொழியியல்,குர்ஆனை விளங்குவதற்கான அடிப்படை,ஹதீஸ்,ஷரீஆ(சட்டம்)மற்றும் பிக்ஹ் (சட்டம் பற்றிய இயல்) ஆகிய கல்விகளையும் பெற்றார்.இக்கல்விகளுக்கான இஜாஸாவையும்(சான்றிதழ்) பெற்றுக்கொண்டார்.[5] டெல்மசனை(Tlemcen) சேர்ந்த கணிதவியலாலர் மற்றும் தத்துவஞானி ,அல்-அபிலீ அவருக்கு கணிதம்,தர்க்கம் மற்றும் மெய்யியல் என்பவற்றை அறிமுகப்படுத்தியதுடன் இப்னு றுஷ்து, இப்னு சீனா,பக்ர் அல்தீன் ராசி மற்றும் தூஸி போன்றவர்களின் நூல்களையும் அல்-அபிலீயிடம் கற்றார்.

குடும்ப பாரம்பரியத்தை தொடர்ந்தவராக,இப்னு கல்தூன் ஒரு அரசியல் வாழ்க்கைக்கு முயற்சித்தார். இப்னு கல்தூனின் சுயசரிதை ஒரு சாகசக் கதையாகும்.இதில், அவர் சிறைச்சாலையில் கழித்தகாலம், உயர் பதவிகளை அடைந்தது மற்றும் நாட்டைவிட்டு வெளியேறியது என்பன குறிப்பிடப்பட்டுள்ளது.

படைப்புக்கள்[தொகு]

இப்னு கல்தூன் அவரது உலக வரலாறு அல்கிதாபுல் இபர்என்ற நூலை தவிர சில படைப்புக்களையே விட்டுச் சென்றுள்ளார்.சில வேறு மூலங்களின் மூலம் அவரது ஏனைய படைப்புக்களை எங்களுக்க அறிந்து கொள்ளலாம், இவை பிரதானமாக அவர் வட ஆபிரிக்கா மற்றும் அந்தலூசியாவில் வாழ்ந்த காலப்பகுதயில் எழுதப்பட்டன.அவரது முதலாவது புத்தகம் லுபாபுல் முஹஸ்சால் என்பதாகும், இது பக்ர் அல்தீன் ராசியின் இஸ்லாமிய இறையியல் நூலுக்கு எழுதப்பட்ட ஓர் விளக்கவுரையாகும்.இந்நூல் அவரது 19ஆம் வயதில்,தூனிஸைச் சேர்ந்த அவரது ஆசிரியர் அல்-அபிலியின் மேற்பார்வையின்கீழ் எழுதப்பட்டது. சூபிசம் பற்றிய ஸிபாஉல் ஸாலி என்ற நூல் 1373இல் மொரோக்கோவின் பெஸ் நகரில் எழுதப்பட்டது.அதேநேரம்,கிரனடாவின் சுல்தான் ஐந்தாம் முகம்மதுவின் நீதிமன்றத்தில், இப்னு கல்தூன் அல்லாகா லில்சுல்தான் என்ற இஸ்லாமிய தர்க்கவியல் நூலை எழுதினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bernard Lewis: "Ibn Khaldun in Turkey", in: Ibn Khaldun: The Mediterranean in the 14th Century: Rise and Fall of Empires, Foundation El Legado Andalusí, 2006, ISBN 978-84-96556-34-8, pp. 376–380 (376)
  2. S. M. Deen (2007) "Science under Islam: rise, decline and revival". p.157. ISBN 1-84799-942-5
  3. Published by Muḥammad ibn Tāwīt at-Tanjī, Cairo 1951
  4. (பிரெஞ்சு) « Lettre à Monsieur Garcin de Tassy », Journal asiatique, troisième série, tome XII, éd. Société asiatique, Paris, 1841, p. 491
  5. Muhammad Hozien. "Ibn Khaldun: His Life and Work". Islamic Philosophy Online. பார்த்த நாள் 2008-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_கல்தூன்&oldid=2220621" இருந்து மீள்விக்கப்பட்டது