உள்ளடக்கத்துக்குச் செல்

அகமது இப்னு அரபுசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகமது இப்னு அரபுசா (1389-1450) என்பவர் ஒரு அரபு[1] எழுத்தாளர் மற்றும் பயணி ஆவார். இவர் தைமூரின் ஆட்சியின் (1370-1405) கீழ் வாழ்ந்தார்.[2] இவர் அபு முகமது சிகாபல்தீன் அகமது இப்னு முகமது இப்னு அப்துல்லா இப்னு இப்ராகிம் மற்றும் முகம்மது இப்னு அரபுசா (அரபு மொழி: ابن عَرَبْشَاه) என்கிற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

இவர் திமிஷ்கு நகரத்தில் பிறந்து வளர்ந்தார். சிரியா மீது தைமூர் படையெடுத்தபோது இவர் சமர்கந்திற்குச் சென்றார். பின்னர் திரான்சாக்சியானாவிற்குச் சென்றார். பிறகு எதிர்னே நகரத்திற்குச் சென்றார். அங்கு சுல்தான் முதலாம் மெகமெத்தின் அவையில் பணியாற்றினார். அங்கு அரபுப் புத்தகங்களைத் துருக்கிய மற்றும் பாரசீக மொழிகளுக்கு மொழிபெயர்த்தார். பிறகு திமிஷ்குவிற்குத் திரும்பினார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நகரத்திற்குத் திரும்பினார். பிறகு எகிப்துக்குச் சென்றார். அங்கே இறந்தார்.

பிரபல முசுலிம் அறிஞரான அப்துல் வகாப் இப்னு அரபுசா இவரது மகன் ஆவார்.

உசாத்துணை

[தொகு]
  1. Donzel, E. J. van (1 January 1994). Islamic Desk Reference. BRILL. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09738-4. Ibn Arabshah*, Ahmad b. Muhammad: Arab historian and writer of Damascus; 13921450. He had learned Persian, Turkish and Mongol and in his chief work describes the conquests of Tamerlane and the conditions under his successor Shah Rukh.
  2. AKA, ISMAIL. 1996. “THE AGRICULTURAL AND COMMERCIAL ACTIVITIES OF THE TIMURIDS IN THE FIRST HALF OF THE 15TH CENTURY”. Oriente Moderno 15 (76) (2). Istituto per l'Oriente C. A. Nallino: 9. https://www.jstor.org/stable/25817400.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_இப்னு_அரபுசா&oldid=3169681" இலிருந்து மீள்விக்கப்பட்டது